நேரம்டா சாமீ!

பதிவு செய்த நாள் : 03 நவம்பர் 2019


பாலி­வுட் பிர­ப­லங்­க­ளான அர்­ஜுன் கபூ­ரும், மலைகா அரோ­ரா­வும் திரு­ம­ணம் செய்­யா­ம­லேயே, சேர்ந்து வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

அர்­ஜு­னுக்கு டை கட்­டி­வி­டும் போட்­டோவை இன்ஸ்­டா­கி­ரா­மில் வெளி­யிட்­டுள்ள மலைகா, ‘ஏன் முறைத்­துப் பார்க்­கி­றீர்­கள்?’ என்று அர்­ஜு­னுக்கு கேள்வி எழுப்­பி­யி­ருக்­கி­றார்.

அதற்கு அர்­ஜுன், ‘மலைகா டை கட்­டி­வி­டும் அழகே தனி!’ என்று பதி­ல­ளித்­தி­ருக்­கி­றார்.

இவர்­க­ளின் இந்த உரை­யா­டல்­க­ளுக்கு சில ரசி­கர்­கள் பதிவு செய்­துள்ள கமென்ட்­கள் : ‘நேரம்டா சாமீ!’; ‘இந்த வய­சுல இது தேவையா?’; ‘ஹலோ... இதையெல்­லாம் நீங்க ரெண்­டு­ பே­ரும் நேர­டி­யாவே பேசிக்­க­லாமே? இன்ஸ்­டா­கி­ராம்­தான் உங்க வாயா?’; ‘லைலா மலை­கா­வின் அழகு, மஜ்னு அர்­ஜு­னுக்­குத்­தான் தெரி­யும்!’.

இந்த லொள்ளு கமென்ட்ஸ்­க­ளின் பின்­னணி:

மலை­கா­வுக்கு வயது 45. நடி­கர் அர்­பாஸ் கா­னு­டன் திரு­ம­ணம் நடந்­தது. இவர்­க­ளுக்கு 16 வய­தில் அர்­ஹான்­கான் என்ற மகன் உள்­ளார். அர்­பாஸ் கா­னைப் பிரிந்­துள்ள மலைகா, 34 வயது அர்­ஜுன் கபூ­ரு­டன் ‘லிவ் இன்

டுகெ­தர்’ வாழ்க்கை நடத்தி வரு­கி­றார்.