நீல ஒளி­யின் தாக்­கம்!

பதிவு செய்த நாள் : 03 நவம்பர் 2019

இன்று பர­வ­லா­கி­விட்ட எல்.இ.டி, விளக்­கு­க­ளில் நீல ஒளியை உமி­ழும் விளக்­கு­கள், விஞ்­ஞா­னி­க­ளின் ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. ஏன்? நீல ஒளி­யால் உயி­ரி­னங்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டு­வ­து­தான் கார­ணம்.

நீல நிற எல்.இ.டி. ஒளி­யில் தின­மும், 12 மணி நேரம் இருக்­கும் ஈக்­க­ளுக்கு, நாள­டை­வில் மூளை மற்­றும் நரம்பு பாதிப்­பு­கள் ஏற்­ப­டு­வதை விஞ்­ஞா­னி­கள் பதிவு செய்­துள்­ள­னர். இத்­த­னைக்­கும், கண்­கள் பறிக்­கப்­பட்ட ஈக்­க­ளுக்­கும் நீல ஒளி­யால் இதே பாதிப்­பு­கள் இருக்­கின்­றன.

எனவே, மடிக் கணினி முதல் செல்­பே­சி­கள் வரை நாம் பயன்­ப­டுத்­தும் திரை­கள் உமி­ழும் நீல ஒளி அலை­வ­ரி­சை­யால் ஏற்­ப­டும் பாதிப்­பு­க­ளைப் பற்றி விஞ்­ஞா­னி­கள் எச்­ச­ரிக்க ஆரம்­பித்­துள்­ள­னர். திரை ஒளி­யைப் பார்க்­கும் நேரத்தை குறைக்­கும்­படி அவர்­கள் அறி­வுரை தர ஆரம்­பித்­துள்­ள­னர்.