பிரதமரின் ‘வீட்டு மானியம்’ பெறுவது எப்படி? – குட்டிக்கண்ணன்

பதிவு செய்த நாள் : 31 அக்டோபர் 2019

அனை­வ­ரின் ஆசையே சொந்­த­மாக வீடு ஒன்று இருக்க வேண்­டும் என்­ப­து­தான். தற்­போத சொந்­த­மாக வீடு கட்­டு­வ­தாக இருந்­தா­லும் சரி, கட்­டிய வீட்டை வாங்­கு­வ­தாக இருந்­தா­லும் சரி இவர்­க­ளின் ஆசை பூர்த்­தி­யா­கும் வழி ஒன்று இருக்­கி­றது. இந்த சொந்த வீட்­டுக்­க­னவை நிறை­வேற்­றும் வகை­யில் மத்­திய அரசு தொடங்­கி­யுள்ள திட்­டமே பிர­தம மந்­திரி ஆவாஸ் யோஜனா திட்­டம். இந்த

திட்­டத்­தின் கீழ் வீட்­டுக்­க­டன் வாங்­கு­ப­

வர்­க­ளுக்கு வட்டி மானி­யம் வழங்­கப்­ப­டு

­கி­றது.

``பிர­தம மந்­திரி ஆவாஸ் யோஜனா

திட்­டம் யாருக்­கெல்­லாம் பொருந்­தும், வீடு வாங்கி இஎம்ஐ கட்­டிக் கொண்­டி­ருப்­ப­வர்­கள் இந்­தத் திட்­டத்­தின் கீழ் வட்டி மானி­யம் பெற இய­லுமா?” என்­ப­து­தான் அனை­வ­ரது கேள்வி. இது­தொ­டர்­பாக பொரு­ளா­தார நிபு­ணர் முத்­து­கி­ருஷ்­ண­னி ­டம் பேசி­ய­போது,

“பொது­வாக, இந்த வட்டி மானி­யத்­தைப் பொதுத்­துறை மற்­றும் தனி­யார்

வங்­கி­கள் வழங்­கு­கின்­றன. ஏற்­க­னவே வங்­கிக்­க­டன் பெற்று வீடு வாங்கி,

தற்­போது இஎம்ஐ கட்­டிக்­கொண்­டி­ருப்­ப­வர்­கள் இந்த திட்­டத்­தின் கீழ் வட்டி மானி­யம் பெற­மு­டி­யாது. வீட்­டுக்­க­ட­னுக்­காக வங்­கியை அணு­கும்­போது, பிர­தம மந்­திரி ஆவாஸ் யோஜனா திட்­டத்­தின்­கீழ் கடனை வழங்­கும்­படி விண்­ணப்­பித்­தால், அதற்­கான தகு­தி­யைப் பரி­சீ­லித்­த­பின் வழங்­கு­வார்­கள்.

விண்­ணப்­பிக்க தகுதி:

விண்­ணப்­ப­தா­ர­ரின் குடும்­பத்­துக்கு வேறெங்­கும் சொந்த வீடு இருக்­கக் கூடாது. விண்­ணப்­ப­தா­ர­ரின் குடும்­பத்

­துக்­குச் சொந்த வீடு தொடர்­பாக இந்­திய அர­சின் வேறெந்த திட்­டத்­தின் பய­னும் கிடைத்­தி­ருக்­கக் கூடாது. திரு­ம­ண­மா­ன­ வர்­கள், தனி­யா­கவோ அல்­லது கண­வன், மனைவி இணைந்தோ விண்­ணப்­பிக்­க­ லாம். அவர்­க­ளில் ஒரு­வ­ருக்கு மட்­டுமே மானி­யம் கிடைக்­கும்.

எங்­கெல்­லாம் வீடு கட்­ட­லாம்?

மாந­க­ரம், நக­ரம், பேரூ­ராட்சி, டவுன் பஞ்­சா­யத்து என இந்­தியா முழு­வ­தும் வீடு கட்­டு­ப­வர்­க­ளுக்கு/ புதிய வீடு வாங்­கு­ப­வர்­க­ளுக்கு இந்த வட்டி மானி­யம் வழங்­கப்­ப­டு­கி­றது. வீட்­டுக்­கான உரி­மை­யில் குடும்­பத்­த­லை­விக்கு முக்­கி­யத்­து­வம் இருக்­க­வேண்­டு­மென்­பதை உறு­திப்­ப­டுத்­தும்­வி­த­மாக இந்­தத் திட்­டத்­தின் விதி­மு­றை­கள் இருக்­கின்­றன. வீட்­டுக்கு உரி­மை­யா­ள­ரா­கவோ அல்­லது இணை உரி­மை­ யா­ள­ரா­கவோ குடும்­பத்­த­லைவி இருக்க வேண்­டும் என்று கூறப்­பட்­டுள்­ளது. குடும்­பத்­த­லை­வ­ரின் பெய­ரில் அந்த வீடு இருக்­கும்­பட்­சத்­தில், குடும்­பத்­த­லை­வியை துணை விண்­ணப்­ப­தா­ர­ரா ­கவோ அல்­லது உத்­த­ர­வா­தம் அளிப்­ப­வ­ரா­கவோ காட்ட வேண்­டு­மென்­றும் கூறப்­பட்­டுள்­ளது.

வீட்­டுக்­க­ட­னின் வகை­கள்:

விண்­ணப்­ப­தா­ர­ரின் குடும்ப ஆண்டு வரு­மா­னம், வீட்டு விலை, வீட்­டின் பரப்­ப­ளவு ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில் கட்­டப்­ப­டும் வீட்டை நான்­கா­கப் பிரித்­துள்­ளார்­கள். ஆண்டு வரு­மா­னம் மூன்று லட்­சம் ரூபாய்­வரை இருப்­ப­வர்­களை பொரு­ளா­தா­ரத்­தில் நலி­ வ­டைந்த பிரி­வி­னர், ஆண்டு வரு­மா­னம் ஆறு லட்­சம் ரூபாய்­வரை இருப்­ப­வர்­களை குறைந்த வரு­வா­யுள்ள பிரி­வி­னர், ஆண்டு வரு­மா­னம் 12 லட்­சம் ரூபாய்­வரை இருப்­ப­வர்­களை நடுத்­தர வரு­வா­யுள்ள பிரி­வி­னர் 1; ஆண்டு வரு­மா­னம் 18 லட்­சம் ரூபாய்­வரை இருப்­ப­வர்­களை நடுத்­தர வரு­வா­யுள்ள பிரி­வி­னர் 2 என்று பிரித்­துள்­ள­னர்.

வீட்­டுக்­க­டன் கணக்­கி­டும் முறை:

வீட்­டுக்­க­ட­னுக்­கான மானி­யத்­தைக் கணக்­கி­டு­வ­தற்கு வீட்­டுக்­க­டன் முழு­வ­ தும் கணக்­கில் எடுத்­துக் கொள்­ளப்­ப­டு­வ­தில்லை. பொரு­ளா­தா­ரத்­தில் நலி­வ­டைந்த பிரி­வி­னர் மற்­றும் குறைந்த வரு­வா­யுள்ள பிரி­வி­ன­ருக்கு வீட்­டுக்­கான கட­னில் 6 லட்­சம் ரூபாய் மட்­டும் கணக்­கில் கொள்­ளப்­ப­டும். அதற்கு 6.5 சத­வி­கி­தம்,

அதா­வது 2,67,280/- வரை வட்டி மானி­ய­மாக வழங்­கப்­ப­டும். நடுத்­தர வரு­வா­யுள்ள பிரி­வி­னர் 1-ஐச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு

வீட்­டு க்­கான கட­னில் 9 லட்­சம் ரூபாய் மட்­டும் கணக்­கில் கொள்­ளப்­பட்டு, அதற்கு 4.0 சத­வி­கி­தம்,  அதா­வது 2,35,068/–- வரை வட்டி மானி­ய­மாக வழங்­கப்­ப­டும். நடுத்­தர வரு­வா­யுள்ள பிரி­வி­னர் 2-ஐச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு வீட்­டுக்­கான கட­னில் 12 லட்­சம் ரூபாய் மட்­டும் கணக்­கில் ­கொள்­ளப்­பட்டு, அதற்கு 3.0 சத­வி­கி­தம், அதா­வது 2,30,156/–- வரை வட்டி மானி­ய­மாக வழங்­கப்­ப­டும்.

இரண்டு முறை வீட்­டுக் கடன்...

வரி விலக்கு எப்­படி?

அனைத்­துப் பிரி­வைச் சேர்ந்­த­வர்­க­ளும் அதி­க­பட்­ச­மாக, ஆண்டு வரு­மா­னத்­தைப்­போல் ஐந்து மடங்கு தொகை­வரை வீட்­டுக்­க­ட­ னுக்கு விண்­ணப்­பிக்­க­லாம். வீட்­டுக்­க­ட­ னுக்கு விண்­ணப்­பிக்­கும்­போது வழக்­க­மாக வங்­கி­கள்­த­ரப்­பில் கேட்­கப்­ப­டும் ஆவ­ணங்­களே இதற்­கும் கேட்­கப்­ப­டும். விண்­ணப்­ப­தா­ ர­ரின் வங்­கிக் ­க­ணக்­குக்கே மானி­யத்­தொகை அளிக்­கப்­பட்­டு­வி­டும். மானி­யம் போக மீத­முள்ள தொகையை மட்­டும் மாதத்­த­வ­ணை­யா­கச் செலுத்­தி­னால் போதும். இந்­த திட்­டத்தின்

­கீழ், வீட்­டுக்­க­ ட­னாக 20 லட்­சம் ரூபாய் வரை பெறு­ப­வ­ருக்கு, வீட்டு மதிப்­பில் 90 சத­வி­கி­தம் வரை வங்­கிக்­க­டன் அளிக்­கப்­ப­டும். 10 சத­வி­கி­தம் மட்­டும் விண்­ணப்­ப­தா­ர­ரின் பங்­க­ளிப்­பாக இருக்­கும். 20 லட்­சம் ரூபா­யி­லி­ருந்து 75 லட்­சம் ரூபாய்­வரை வங்­கிக்­க­டன் பெறு­ப­வ­ருக்கு, வீட்டு மதிப்­பில் 80 சத­வி­கி­தம் வரை வங்­கிக்­க­டன் வழங்­கப்­ப­டும். மீத­முள்ள 20 சத­வி­கி­தம் தொகை, விண்­ணப்­ப­தா­ர­ரின் பங்­க­ளிப்­பாக இருக்­கும். 75 லட்­சம் ரூபாய்க்­கு­ மேல் வங்­கிக்­க­டன் பெறு­ ப­வ­ருக்கு, வீட்டு மதிப்­பில் 75 சத­வி­கி­தம்­வரை வங்­கிக்­க­ட­னாக வழங்­கப்­ப­டும். 25 சத­வி­கி­தம் தொகை விண்­ணப்­ப­தா­ர­ரின் பங்­க­ளிப்­பாக இருக்­கும். முதன்­மு­றை­யாக வீடு வாங்­கும் அல்­லது வீடு கட்­டும் அனை­வ­ருக்­குமே இந்­தத் திட்­டம் மிக­வும் பய­னுள்­ள­தாக இருக்­கும்.” என்­றார்.