மார்பக புற்றுநோயை நாமே கண்டறியலாம்! – லட்சுமி

பதிவு செய்த நாள் : 31 அக்டோபர் 2019

அக்­டோ­பர் மார்­பக புற்­று­நோய் விழி­பு­ணர்வு மாதம். பெண்­க­ளுக்கு ஏற்­ப­டும் புற்­று­நோய்­க­ளில் இரண்­டா­வது இடத்­தில் இருப்­பது மார்­ப­க  புற்­று­நோய். வீட்­டில் இருந்­த­ப­டியே அந்­நோயை எளி­தில் கண்­ட­றிய சில கரு­வி­கள் உள்­ளன. அதைப் பற்றி பெண்­கள் தெரிந்து வைத்­துக் கொள்­வது அவ­சி­யம்.

வேலைக்­குச் செல்­லும்

பெண்­கள் ஆகட்­டும், வீட்­டில்

இருக்­கும் குடும்­பத்­த­லைவி­கள் ஆகட்­டும், பெரும்­பா­லும் தங்­கள் உடல் ஆரோக்­கி­யம் பற்றி அதி­கம் கவ­னம் செலுத்­து­வ­தில்லை. பெரும்­பா­லும் நோய் முற்­றிய நிலை­யில் தான் அவர்­கள் சிகிச்­சைக்­கா­கவே செல்­கின்­ற­னர். அதி­லும் குறிப்­பாக பெண்­களை பெரி­தும் தாக்­கும் நோய்­க­ளில் ஒன்று மார்­பக புற்­று­நோய். பெண்­க­ளுக்கு ஏற்­ப­டும் புற்­று­நோய்­க­ளில் இரண்­டா­வது இடத்­தில் இருப்­பது மார்­பக புற்­று­நோய் தான்.

இந்­தி­யா­வில் மார்­பக புற்று நோயால் பாதிக்­கப்­பட்­டுள்ள பெண்­க­ளில் 60 சத­வீ­தம் பேர் நோய் முற்­றிய நிலை­யில் தான் அதனை தெரிந்து கொள்­கி­றார்­கள். இத­னா­லேயே அவர்­க­ளுக்கு சிகிச்சை அளிப்­பது கடி­ன­மா­கி­வி­டு­கி­றது. சமீ­பத்­தில் நடத்­தப்­பட்ட ஆய்­வின்­படி, இந்­தி­யா­வில் 2018ம் ஆண்டு மட்­டும் 1, 62,468 பேருக்கு புதி­தாக மார்­ப­க புற்றுநோய் ஏற்­பட்­டுள்­ளது தெரிய வந்­துள்­ளது. அவர்­ளில் 87,090 பேர் மார்­பக புற்­று­நோ­யால் மர­ண­ம­டைந்­துள்­ள­னர். ஒவ்­வொரு ஆண்­டும் சுமார் ஒரு லட்­சம் பேருக்கு புதி­தாக மார்­பக புற்­று­நோய் பாதிப்பு ஏற்­ப­டு­வ­தாக ஆய்­வு­கள் கூறு­கின்­றன.

 மார்­பக புற்­று­நோய் பற்­றிய போதிய விழிப்­பு­ணர்வு இல்­லா­ததே இதற்கு முக்­கி­யக் கார­ண­மா­கக் கரு­தப்­ப­டு­கி­றது. அதன் ஆரம்­ப­கால அறி­கு­றி­கள் பற்றி சரி­யா­கத் தெரிந்து கொண்­டால், ஆரம்­பத்­தி­லேயே அதற்­கு­ரிய சிகிச்­சை­க­ளைப் பெற்று, எளி­தில் குண­ம­டைய முடி­யும். அத­னால் தான் ஆண்­டு­தோ­றும் அக்­டோ­பர் மாதம் மார்­பக புற்­று­நோய் விழிப்­பு­ணர்வு மாத­மாக அனு­ச­ரிக்­கப்­ப­டு­கி­றது. புற்­று­நோ­யு­டன் போரா­டு­ப­வர்­களை நினைவு கூறும் வகை­யில் பிங்க் நிற ரிப்­பன் அணி­யப்­ப­டு­கி­றது.  

மார்­பக புற்­று­நோ­யைக் கண்­ட­றி­வ­தற்­கான பரி­சோ­த­னை­

களை மருத்­து­வ­ம­னைக்கு சென்று தான் செய்து கொள்ள வேண்­டும் என்­றில்லை. சில எளிய கரு­வி­க­ளின் மூலம் பெண்­கள் தங்­க­ளைத் தாங்­களே சுய­ப­ரி­சோ­தனை செய்து மார்­பக புற்­று­நோய் குறித்து அறிந்­து­கொள்ள முடி­யும். மார்­பக புற்­று­நோய் குறித்து முன்­கூட்­டியே தெரிந்­து­கொள்­வ­தன் மூலம் அதனை குணப்­ப­டுத்­து­வது இன்­னும் எளி­தா­கும். மார்­பக புற்­று­நோ­யைக் கண்­ட­றி­யும் 5 முக்­கிய கரு­வி­க­ளைப் பற்றி நாம் தெரிந்து கொள்­ள­லாம்.

பிராஸ்­டர் புரோ -மார்­பக ஆய்வு முறை (Braster Pro-Breast Examination System)

பிராஸ்­டர் புரோ எனும் இந்த கருவி வைபை மூலம் இயங்­கக் கூடி­யது. தன்­னுள் இருக்­கும் கேமரா மற்­றும் சேமிப்­புக் கரு­வி­களை கொண்டு சம்­மந்­தப்­பட்ட இடத்தை மட்­டும் புகைப்­ப­டம் எடுத்து சேமித்­துக் கொள்­ளும். 15 படங்­கள் வரை சேமித்­துக் கொள்­ளும் வசதி இதில் உள்­ளது. மொபைல் செயலி வழி­யாக செயல்­ப­டக்­கூ­டிய இந்த கரு­வி­யால் தானாக இயங்­கவோ அல்­லது படத்தை டிரான்ஸ்­பர் செய்­யவோ முடி­யாது. இதற்­காக பிராஸ்­டர் கேர் எனும் பிரத்­கேய செயலி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இதன் மூலம் தான் எடுக்­கும் புகைப்­ப­டங்­களை கொண்டு மார்­பக புற்­று­நோ­யின் அறி­கு­றி­கள் இருக்­கி­றதா இல்­லையா என்­பதை இந்­தக் கருவி கண்­ட­றிந்து தெரி­விக்­கும்.

பிரஸ்ட்­லைட் (Breastlight)

இந்த கரு­வியை பெண்­கள் தங்­கள் வீட்­டி­லேயே பயன்­ப­டுத்­த­லாம். சுய­ப­ரி­சோ­தனை செய்து கொள்ள உத­வும் இந்த கருவி, ஒரு சிகப்பு நிற லைட்­டின் மூலம் நோய் அறி­கு­றி­க­ளைக் கண்­ட­றிந்து சொல்­லும். ஒரு­வேளை மார்­ப­கத்­தில் ஏதே­னும் பாதிப்பு இருந்­தால் அந்த பகு­தி­யில் மட்­டும் சிவப்பு நிற வெளிச்­சம் ஹைலைட் செய்து காட்­டப்­ப­டும். இந்த ஒளி­யால் எந்­த­வி­த­மான பக்க விளை­வு ­க­ளும் ஏற்­ப­டாது என்­பது

குறிப்­பி­டத்­தக்­கது.

பிங்க் லூமி­னஸ்

(Pink Luminous)

இந்த கருவி, அதன் பய­னா­ளர்­க­ளுக்கு கூடு­தல் விழிப்­பு­

ணர்­வை­யும், மன அமை­தி­யை­யும், நம்­பிக்­கை­யை­யும் தரக்­கூ­டி­யது. பிங்க் லூமி­னஸ் கருவி பெண்­க­ளுக்கு ஒரு புது­மை­ யான, பாது­காப்­பான மற்­றும் பய­னுள்ள கரு­வி­யா­கும். இதன் மூலம் அவர்­கள் தங்­கள் வீட்­டில் இருந்­த­டியே சுய­ப­ரி­சோதனை செய்­து­கொள்­ள­லாம். இந்த கரு­வி­யின் மூலம் தங்­கள் மார்­ப­கங்­க­ளில் ஏதே­னும் அசா­தா­ரண விஷ­யங்­கள் இருந்­தால் அதனை எளி­தாக அறிந்து கொள்ள முடி­யும். இத­னால் மிக விரை­வாக அதற்கு சிகிச்சை எடுத்­துக்­கொள்ள பிங்க் லூமி­னஸ் பெரி­தும் உத­வு­கி­றது.  

இன்ப்­ரா­ரெட் மார்­பக புற்­று­நோய் சுய­ப­ரி­சோ­தனை மசா­ஜர் கருவி

இது ஒரு புது­மை­யான நம் கைக­ளால் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய சுய­ப­ரி­சோ­தனை மற்­றும் சுய மசாஜ் கருவி. இதில் உள்ள சிகப்பு நிற பீம், மார்­ப­கத்­தில் உள்ள கட்­டி­கள், அசா­தா­ரண சதை­கள் ஆகி­ய­வற்றை கண்­ட­றிய உத­வும். மேலும், இதில் உள்ள மசாஜ் கருவி, மார்­பக நோய்­கள் ஏற்­ப­டா­மல் தடுக்க உத­வும். இதில் இருந்து வெளி­யே­றும் சிகப்பு ஒளி, மார்­ப­கத்­தின் ஆரோக்­கி­யத்தை உறு­திப்­ப­டுத்­தும். இதில் உள்ள ‘கேர்’ மோட் சிகப்பு ஒளி மற்­றும் மசாஜ் ஆகிய இரண்­டை­யும் ஒரே நேரத்­தில் செயல்­ப­டுத்தி மார்­ப­கம் சம்­மந்­தப்­பட்ட நோய்­க­ளுக்கு சிகிச்சை அளிக்க உத­வும். ரேடி­யே­ஷன் மற்­றும் பக்க விளை­வு­கள் இல்­லாத, 100 சத­வீ­தம் பாது­காப்­பான கரு­வி­யாக உலக அள­வில் சிறந்த கருவி என போற்­றப்­ப­டும் இக்­க­ருவி மார்­ப­கம் நோய்­களை தடுக்­கி­றது.

 ஐபி­ரஷ்ட் எக்­சாம் ( iBreastExam )

மார்­பக புற்­று­நோயை கண்­ட­றி­வ­தற்­கான வசதி வாய்ப்­பு­கள் குறை­வாக உள்ள வளர்ந்து வரும் நாடு­க­ளுக்­காக பிரத்­யே­க­மாக உரு­வாக்­கப்­பட்­டுள்ள கருவி தான் இந்த ஐபி­ரஷ்ட்

எக்­சாம். மார்­ப­கத்­தில் உள்ள சதை­க­ளில் புற்று நோய்

பாதிக்­கப்­பட்ட சதை­கள் மற்­றும் பாதிப்­பில்­லாத சதை­களை தனித்­த­னியே கண்­ட­றி­வ­தற்கு இந்த கருவி உத­வும்.

இதனை மார்­ப­கத்­தின்

மேல் பயன்­ப­டுத்­தும் போது, இரண்டு சதை­க­ளின் இடையே உள்ள வித்­தி­யா­சத்தை துல்­லி­ய­மாக கண்­ட­றி­யும்.