பெண்கள் சொந்தமாக தொழில் செய்ய ஐடியாக்கள் – சுமதி

பதிவு செய்த நாள் : 31 அக்டோபர் 2019

பெண்­கள் தங்­க­ளது வீட்­டி­லி ­ருந்தே வணி­கத்­தைத் துவங்க தொழில்­நுட்­பம் உத­வு­கி­றது. பிளாக் எழு­து­தல், பேக்­கிங், பேஷன் டிசைன் என ஏரா­ள­மான வாய்ப்­பு­கள் கொட்­டிக்­கி­டக்­கின்­றன. பெண்­கள் வீட்­டி­லும் அலு­வ­ல­கத்­தி­லும் பணி­பு­ரி­கின்­ற­னர். எனி­னும் பெண்­கள் வீட்­டில் செய்­யும் வேலை அங்­கீ­க­ரிக்­கப்­ப­டு­கி­றதா? இந்­தி­யப் பெண்­கள் நாள் ஒன்­றிற்கு 352 நிமி­டங்­கள் வீட்டு வேலை­க­ளுக்­கா­கச் செல­வி­டு­கின்­ற­னர். அதே­ச­ம­யம் வீட்டு வேலை­க­ளுக்­காக ஒரு நாளைக்கு 52 நிமி­டங்­கள் செல­வி­டும் ஆண்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் பெண்­கள் 577 சத­வீ­தம் அதி­க­மாக செல­வி­டு­கின்­ற­னர் என்று பொரு­ளா­தார ஒத்­து­ழைப்பு மற்­றும் மேம்­பாட்டு அமைப்பு தர­வு­கள் சுட்­டிக்­காட்­டு­கி­றது.

பெண்­க­ளின் இந்­தப் பங்­க­ளிப்பு முறை­யாக அங்­கீ­க­ரிக்­கப்­ப­டு­வ­தில்லை. ஆனால் இத்­த­கை­யச் சூழ­லில் நாம் வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கி­றோம் என்­பதே உண்மை. வீட்­டுப் பொறுப்­பு­க­ளைப் பெண்­களே அதி­கம் சுமந்­தா­லும் அவர்­க­ளது உழைப்­பிற்­கான ஊதி­யமோ பாராட்டோ கிடைப்­ப­தில்லை. வீட்டு வேலை­க­ளில் உதவ யாரும் இல்­லாத நிலை, அவர்­கள் வாழும் பகு­தி­க­ளில் குறை­வான வேலை வாய்ப்­பு­கள் போன்ற பல்­வேறு கார­ணி­க­ளால் அதிக எண்­ணிக்­கை­யி­லான பெண்­கள் பணிக்­குச் செல்ல முடி­வ­தில்லை. எனி­னும் தொழில்­நுட்­ப­மும் இணை­ய­மும் நாட்­டின் தொலை­தூ­ரப் பகு­தி­க­ளை­யும் சென்­ற­டை­யும் நிலை­யில் பெண்­கள் தங்­க­ளது வீட்­டில் இருந்தே பணி­பு­ரி­யும் வாய்ப்பு கிடைக்­கி­றது. இதன் மூலம் அவர்­கள் நிதிச் சுதந்­தி­ரம் அடை­ய­மு­டி­யும். பெண்­கள் சுய­மாக முயற்­சி­யைத் துவங்க 5 வணிக யோச­னை­கள் இங்கே கொடுக்­கப்­பட்­டுள்­ளன.

 மின்­வ­ணி­கம் / மொத்த விற்­பனை பெண்­கள் : ஆர்­கா­னிக் பொருட்­கள், ஆப­ர­ணங்­கள், புட­வை­கள், ஆடை­கள், வீட்டு அலங்­கா­ரப் பொருட்­கள் என அனைத்­துப் பொருட்­க­ளை­யும் விற்­பனை செய்ய ஆன்­லைன் சந்­தைப்­ப­கு­தி­க­ளும் மின்­வ­ணி­க­மும் வாய்ப்­ப­ளிக்­கி­றது. இவற்றை அவர்­க­ளா­க­வேத் தயா­ரிக்­க­லாம் அல்­லது வெளி­யில் இருந்து வாங்கி வீட்­டி­லி­ருந்தே விற்­பனை செய்­ய­லாம். நூற்­றுக்­க­ணக்­கான பெண்­கள் ஆன்­லை­னில் பொருட்­களை விற்­பனை செய்து லாபம் ஈட்டி வரு­கின்­ற­னர். நீங்­கள் வேறு நக­ரத்­திற்கு மாற்­ற­லாகி சென்­றாலோ வெளி­நா­டு­க­ளுக்கு மாற்­ற­லா­கிச் சென்­றா­லும்­கூட உங்­கள் வணி­கத்­தைத் தொடர்ந்து நடத்­த­லாம்.

  பிளிப்­கார்ட், அமே­சான் போன்ற

தளங்­க­ளைப் பயன்­ப­டுத்­தியோ அல்லது பேஸ்­புக், இன்ஸ்­டா­கி­ராம் போன்ற சமூக ஊட­கங்­க­ளைப் பயன்­ப­டுத்­தியோ உங்­க­ளது பொருட்­களை விற்­பனை செய்­ய­லாம்.

பிளாக் எழு­து­தல்/கதை சொல்­லு­தல் : பிளாக் எழு­து­ப­வர்­க­ளும் கதை சொல்­ப­வர்­க­ளும் பணம் ஈட்­டு­வ­தில்லை என்­கிற தவ­றான கருத்து மக்­க­ளி­டையே காணப்­ப­டு­கி­றது. உங்­க­ளுக்கு எழு­தும் திறன் இருக்­கு­மா­னால் பிரீ­லான்ஸ் முறை­யில் உள்­ள­டக்­கம் எழு­தும் வாய்ப்­பும் உள்­ளது. ஏதே­னும் ஒரு துறை அல்­லது விரி­வான மையக்­க­ருத்தை தீர்­மா­னித்­த­தும் டொமெ­யின் பெய­ரை­யும் ஹோஸ்­டிங் புரொவை­ட­ரை­யும் தேர்வு செய்து பிளாக் எழு­தத் துவங்­க­லாம்.

விருந்­தோம்­பல் சேவை : தற்­போது உல­கம் முழு­வ­தும் இருந்து வரும் பய­ணி­க­ளுக்கு மக்­கள் தங்­க­ளது வீட்டை தங்­கு­மி­ட­மாக வழங்­கு­வ­தற்­கான வச­தியை உல­க­ள­வில் செயல்­ப­டும் ஆன்­லைன் சந்­தைப்­ப­கு­தி­யான ஏர்­பி­என்பி வழங்­கு­கி­றது. பெண்­கள் இந்த வாய்ப்­பி­னைப் பயன்­ப­டுத்­திக் கொள்­ள­லாம். ஏர்­பி­என்பி உடன் கையெ­ழுத்­திட்டு நீங்­கள் விருந்­தோம்­பல் செய்­ய­லாம். உங்­க­ளுக்­கும் உங்­க­ளது சொத்­து­க­ளுக்­கும் பாது­காப்பு உறு­தி­செய்­யப்­ப­டு­வ­து­டன் உங்­க­ளது விருந்­தி­னரை நீங்­களே தேர்வு செய்து கட்­டுப்­பா­டு­கள் விதிக்­க­லாம். மேக்­மைட்­ரிப் போன்ற பிற பயண ஏற்­பாட்டு நிறு­வ­னங்­க­ளும் ஹோம்ஸ்டே பட்­டி­யலை வழங்­கு­கி­றது. எனவே

உங்­கள் வீட்­டின் ஒரு பகு­தி­யைப் பயன்­ப­டுத்தி நீங்­கள் வரு­வாய் ஈட்­ட­லாம்.

 கேட்­ட­ரிங், சமை­யல், பேக்­கிங் : வீட்­டி­லேயே பேக்­கிங் செய்­வது அல்­லது கேட்­ட­ரிங் என உண­வுத் துறை லாப­க­ர­மான பிரி­வாக உள்­ளது. உங்­க­ளது சமை­யல் திற­னைப் பயன்­ப­டுத்தி லாபம் ஈட்­டு­வ­து­டன் சிறப்­பாக வளர்ச்­சி­ய­டை­ய­வும் முடி­யும். பலர் இவ்­வாறு சிறி­ய­ள­வில் வீட்­டி­லேயே பேக்­கிங் செய்­யத் துவங்கி கேக் ஷாப், கபே, பேக்­கிங் பள்­ளி­கள் என பெரி­ய­ள­வில் வளர்ச்­சி­ய­டைந்­துள்­ள­னர். உங்­க­ளது திற­னை­யும் தயா­ரிப்­பை­யும் பரி­சோ­தனை செய்ய உள்­ளூ­ரில் இருக்­கும் மலிவு விலை சந்­தை­யைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம். அல்­லது வாட்ஸ் அப், பேஸ்­புக் போன்ற தளங்­க­ளைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம்.