கலைமாமணி வாமனன் எழுதும் ‘ஆங்கிலம் ரொம்ப ஈஸி’ 31–10–19

பதிவு செய்த நாள் : 31 அக்டோபர் 2019

முடியும் என்று கூறும் ‘Can’

'Van' என்ற சொல்­லு­டன் ஒத்­துப்­போ­கும் உயிர் எழுத்­தைக் கொண்­டி­ருக்­கி­றது, 'can' என்ற சொல். தற்­கா­லத்­தில் பிர­ப­ல­மாக இருக்­கும் 'வாட்­டர் can' என்­ப­தில் வரும் கடைசி சொல்­லின் உச்­ச­ரிப்­புத்­தான்.

'Can' என்­பது வினைச்­சொல்­லுக்கு முன்னே வந்து, ஒரு வினையை ஆற்ற முடி­யும் என்று தெரி­விக்­கி­றது.

'ஐ கேன் ஸ்விம்'. I can swim. நான் நீந்­து­வேன்…­எ­னக்கு நீச்­சல் வரும்..எனக்கு நீந்­தத் தெரி­யும்…­என்­பது பொருள்.

 (can என்­பதை 'கேன்' என்று தமி­ழில் நாம் எழுத வேண்­டி­யி­ருந்­தா­லும், cane – பிரம்பு  - என்­ப­தைத்­தான் நாம் 'கேன்' என்று எழு­த­வேண்­டும். ஆங்­கில மொழின் எல்லா ஒலி­க­ளை­யும் அப்­ப­டியே தமி­ழில் வடிப்­பது சாத்­தி­யம் இல்­லாத விஷ­யம். அதே­போல். தமிழ் மொழி­யின் ஒலி­க­ளை­யும் ஆங்­கில எழுத்­தில் எழு­து­வ­தும் சாத்­தி­யம் அற்­ற­து­தான்…)

'ஐ கேன் ரீdட், ரைட் அண்dட் ஸ்பீக் இன் ஃபைவ் லாங்­கு­வே­ஜெஸ்' . I can read, write and speak in five languages. எனக்கு ஐந்து மொழி­க­ளில் படிக்க, எழுத, பேசத் தெரி­யும்.

'ஐ கேன் டிரைவ்…' என்­றால் 'எனக்கு ஓட்­டத் தெரி­யும்' என்று பொருள். இது பொது­வா­கக் கார் ஓட்­டத்­தைத் தெரி­விக்­கும்.

'ஐ கேன்­னாட் குக்'. I cannot cook. எனக்கு சமைக்­கத் தெரி­யாது.

'கேன் ஹீ ஸ்விம்? ' Can he swim? அவன் நீந்­து­வானா, அவ­னுக்கு நீச்­சல் தெரி­யுமா அல்­லது அவ­னுக்கு நீந்­தத் தெரி­யுமா? இதற்கு விடை­யாக, 'ஹீ கேன் ஸ்விம் லைக் அ ஃபிஷ்…'. He can swim like a fish…அவ­னுக்கு மீன்­க­ளைப் போல் நீச்­சல் தெரி­யும் என்­ப­தற்­குப் பொருள்…­அ­வ­னுக்கு மிக நன்­றாக நீந்­தத் தெரி­யும் என்­பது.

'ஹீ கேன்­னாட் டான்ஸ் வெரி வெல்'. He cannot dance very well.  அவ­னுக்கு நன்­றாக நட­னம் ஆட வராது.

இந்த 'கேன்' (can) என்ற சொல்­லைப் பயன்­ப­டுத்தி 'முடி­யும்' என்று கூறும் போது, 'ஏபிள்' (able) என்ற சொல்லை இணைத்து வாக்­கி­யம் அமைக்­கக் கூடாது என்று முன்பே கூட நான் எச்­ச­ரித்­தி­ருக்­கி­றேன்.

'ஐ கேன் dடூ இட்' (I can do it) என்­றால் 'அதை என்­னால் செய்ய முடி­யும்' என்று பொருள். இது சரி­யான வாக்­கி­யம். 'ஐ கேன் ஏபிள் tடு dடூ இட்' (I can able to do it) என்­பது தவறு. 'அவ­னால் பாட முடி­யும்' என்று கூற­வேண்­டும் என்­றால், 'ஹீ கேன் சிங்' (He can sing) என்று கூற­வேண்­டும். 'ஹீ கேன் ஏபிள் டு சிங்' ( He can able to sing) என்­பது தவறு.

ஒரு குறிப்­பிட்ட நேரத்­தில், நிலை­யில் முடி­யும், முடி­யாது என்­ப­தைக் குறித்­துக் குறிப்­பி­ட­வும் 'கேன்' (can) பயன்­ப­டு­கி­றது.

'ஐ கேன் மீட் யூ டுமார்ரோ'. I can meet you tomorrow. உன்னை என்­னால் நாளை சந்­திக்க முடி­யும்.

'மை மதர் கேன்­னாட் கம் ஃபார் த மாரேஜ்'. My mother cannot come for the marriage. என்­னு­டைய தாயால் திரு­ம­ணத்­திற்கு வர இய­லாது.

'ஐ கேன்­னாட் ரிப்ளை டு யோர் குவெஸ்­சின் நவ்'…I cannot reply to your question now. உன்­னு­டைய கேள்­விக்கு இப்­பொ­ழுது என்­னால் பதில் கூற முடி­யாது.

'ஐ கேன்­னாட் gகோ வித் யூ டுdடே


bபட் டுமொர்ரோ ஐ கேன் டிரை'. I cannot go with you today, but tomorrow I can try. இன்று என்­னால் உன்­னு­டன் செல்ல இய­லாது ஆனால் நாளை என்­னால் (உன்­னு­டன் செல்ல) முயற்சி செய்ய முடி­யும்.

'ஐ கேன் ஸ்பெண்dட் அ ஃபியூ ஹவர்ஸ் வித் யூ டுdடே bபட் டுமார்ரோ ஐ வில் நாட் ஹேவ் எனி டைம்'. I can spend a few hours with you today but tomorrow I will not have any time. இன்­றைக்கு உன்­னோடு என்­னால் சில மணி நேரங்­கள் செல­வ­ழிக்க முடி­யும்     ஆனால் நாளை எனக்கு நேரமே இருக்­காது.  

அனு­மதி கேட்க 'can' பயன்­ப­டுத்­த­லாம்.

'கேன் ஐ gகோ நவ்? ' Can I go now? இப்­பொ­ழுது நான் போக­லாமா?

'கேன் ஐ ஆஸ்க் அ  குவெஸ்­சின்? ' Can I ask a question? நான் ஒரு கேள்வி கேட்­க­லாமா?

'கேன் யூ டெல் மீ dத வே டு dத bபேங்க்? ' Can you tell me the way to the bank? வங்­கிக்­குப் போகும் வழி­யைக் கூற உங்­க­ளால் இய­லுமா…(அதா­வது) வங்­கிக்­குப் போகும் வழி­யைக் கூறு­கி­றீர்­களா?

'நீ இங்கே எத்­தனை நாட்­கள் இருப்­பாய் என்று கூற முடி­யுமா' என்று ஒரு­வர் கேட்­டால், அது முடி­யாத பட்­சத்­தில், 'ஐ கேன்­னாட் ஸே' (I cannot say) என்று கூற­லாம். 'என்­னால் கூற இய­லாது' என்று பொருள்.

இப்­படி இருக்­கும், அப்­படி இருக்­க­லாம் என்ற சாத்­தி­யக்­கூ­று­க­ளை­யும் 'can' என்ற சொல்­லைப் பயன்­ப­டுத்தி தெரி­விக்­க­லாம்.

'இட் கேன் பீ வெரி cகோல்dட் இன் dடெல்ஹி ஆட் dதிஸ் டைம் ஆஃப் dத இயர்'. It can be very cold in Delhi at this time of the year. ஆண்­டின் இந்­தப் பகு­தி­யில், டில்­லி­யில் மிக­வும் குளி­ரா­கக் இருக்­கக் கூடும்.

'இட் கேன் bபீ வெரி கிர­வுd­டெட் இன் dத மார்க்­கெட்'. It can be very crowded in the market. மார்க்­கெட்­டில் மிக­வும் கூட்­ட­மாக இருக்­கக்­கூ­டும்.

ஒரு­வ­ரைப்­பற்றி மிக­மோ­ச­மான வதந்தி ஒன்று நில­வி­யது. அதைக் கேட்டு இன்­னொ­ரு­வர் சொன்­னார்…'இட் கேன்­னாட்  bபீ டிரூ….ஐ dடோன்ட் bபிலீவ் இட்'..It cannot be true…I don’t believe it…இது உண்­மை­யாக இருக்க முடி­யா­து…­நான் இதை நம்­ப­வில்லை…

'ரிக்­வெஸ்ட்' (request) செய்ய 'கேன்' (can) பயன்­ப­டு­கி­றது…'கேன் ஐ ஹேவ் யுவர் pபென் ஃபார் அ மொமென்ட், பிளீஸ்'. Can I have your pen for a moment, please. உங்­கள் பேனாவை ஒரு நொடி தர முடி­யுமா, பிளீஸ்.

இன்­னொ­ரு­வ­ருக்கு உதவ, 'கேன் ஐ ஹெல்ப் யூ' ( Can I help you) என்று கேட்­க­லாம். 'உங்­க­ளுக்கு நான் உத­வ­லாமா' என்று பொருள். 'உங்­க­ளுக்கு என் உதவி தேவையா' என்ற பொரு­ளி­லும் இந்­தக் கேள்வி அமை­ய­லாம்.

ஒரு பெரிய கடை­யில் நீங்­கள் பொருள்­க­ளைப் பார்த்­துக்­கொண்­டி­ருக்­கும் போது, இந்­தக் கேள்­வியை உங்­க­ளி­டம் கடை உத­வி­யா­ளர் கேட்­க­லாம். 'உங்­க­ளுக்­குத் தேவை­யான பொருளை உடனே எடுத்­துக் கொடுப்­ப­தில் நான் உத­வ­லாமா' என்று பொருள்.

இந்த விதத்­தில் அமை­யும் கேன் (can) என்­ப­தன் பயன்­பா­டு­களை விதி­க­ளாக மட்­டும் கொள்­ளா­மல், சர­ள­மான பழக்­க­மா­கக் கொண்டு வாருங்­கள்..கேன் யூ Can you? இப்­ப­டிச் செய்து கொண்டு வந்­தால் ஆங்­கி­லம் நீங்­கள் சொல்­லு­கிற படி­யெல்­லாம் கேட்­கும்.  

-– தொடரும்

...vamanan81@gmail.com

vamananinsight.blogspot.in