பாட்டிமார் சொன்ன கதைகள் – 240 – சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 01 நவம்பர் 2019

பசி பெரியதா.... மானம் பெரியதா..

பாண்­ட­வர்­க­ளு­டைய பராக்­கி­ர­மத்­தை­யும், நற்குணத்­தை­யும் மக்­கள் பெரி­தும் பாராட்டி தங்­க­ளுக்­குள் பேசத் தொடங்­கி­னார்­கள். அவர்­க­ளி­லும் தரு­ம­புத்­தி­ரர் விசேஷ ஒழுக்­க­முள்­ள­வ­ராய்; ராஜ்­யத்தை ஆளும் சாமர்த்­தி­ய­முள்­ள­வ­ரா­கக் கரு­தப்­பட்­டார். திரு­த­ராஷ்­டி­ர­னுக்­கும் அவர்­க­ளின் மீது நல்ல அபிப்­ரா­யம். மக்­க­ளின் கருத்தை மந்­தி­ரி­மார் மூல­மாக தெரிந்­து­கொண்டு தர்­ம­புத்­தி­ரரை யுவ­ரா­ஜா­வாக பட்­டா­பி­ஷே­கம் செய்து வைத்­தான்.

யுவ­ரா­ஜா­வின் புகழ் நாளுக்கு நாள் அதி­க­ரித்­தது. துரி­யோ­த­னன் முத­லான திரு­த­ராஷ்­டி­ர­னின் புதல்­வர்­க­ளுக்கு அச்­ச­மும் துய­ர­மும் கவ­லை­யும் அதி­க­ரித்­தன. துரி­யோ­த­ன­னுக்கு இர­வெல்­லாம் நல்ல தூக்­கம் கிடை­யாது. துரி­யோ­த­னன் மேல் உள்ள பாசத்­தால் திரு­த­ராஷ்­டி ­ர­னுக்­கும் பாண்­ட­வர்­க­ளின் மீதான பாசம் குறைந்து போயிற்று. தன் மூத்த பிள்ளை அடிக்­கடி துய­ரப் படு­வது கண்டு திரு­த­ராஷ்­டி­ர­னுக்கு பரி­தா­பம் அதி­க­மா­யிற்று. மக்­கள் எல்லா மூலை­க­ளி­லும் சபை­க­ளி­லும் கூடிக்­கூடி பாண்டு புத்­தி­ரர்­கள் பற்றி பேசு­வது திரு­த­ராஷ்­டி­ர­ னுக்­கும் அவன் மக்­க­ளுக்­கும் புண்­ணில் வேல் பாய்ச்­சு­வது மாதிரி இருந்­தது.

பிற­விக் குரு­ட­னான திரு­த­ராஷ்­டி­ ரனை அவன் தர்­ம­புத்­தி­ரரை யுவ­ராஜா  ஆக்­கின நாள்­மு­தல்’­அ­றிவே கண்­ணாக உடை­ய­வன் நமது பெரிய மஹா­ராஜா!’ என்று நகர மக்­கள் போற்­றிப் புகழ்ந்­தார்­கள். அந்த வார்த்தை துரி­யோ­த­ன­னுக்கு விஷ­மாக இருந்­தது. துரி­யோ­த­ன­னுக்கு அவ­னு­டைய பொறா­மை­யும் கொதிப்­பும், கெட்ட எண்­ணங்­க­ளும் விஷம் ஏறு­வது போல் ஏறிக் கொண்­டி­ருந்­தன.

அவன் தனி­மை­யில் தந்­தையை சந்­தித்­து’­ இந்த முட்­டாள் மக்­க­ளின் பிதற்­றல்­களை பொருட்­டா­கக் கொள்ள வேண்­டாம். பல­வீ­ன­மான தர்­ம­னுக்­கும்,  அயோக்­கி­ய­னாக பீம­னுக்­கும் கிடைத்­தி­ருக்­கும் பதவி உமக்­கும் பீஷ்­ம­ருக்­கும் ஒரு அவ­ம­திப்பு ஆகும். மேலும் ராஜ்­யம் மூத்­த­வ­ரான உமக்­கும் உமது புதல்­வர்­க­ ளுக்­குமே உரி­யது. அறிவே கண்­ணாக உடைய உம்­மு­டைய பிர­தி­நி­தி­யாக தானே சிறிய தகப்­ப­னார் ஆட்சி செலுத்­திக் கொண்­டி­ருந்­தார்? இனி­மேல் தரு­மனே ராஜா  வென்­றால் அந்த தரும ராஜ்­யத்­திலே  நாங்­க­ளும் எங்­கள் சந்­த­தி­க­ ளும் உரி­மை­களை எல்­லாம் இழக்க  வேண்­டி­ய­து­தானா? இதுவா நீதி? இதுவா தர்­மம்? என்று பட­ப­டப்­பாக சொன்­னான். திரு­த­ராஷ்­டி­ரன் சற்று நேரம் யோசித்­து’­கு­ழந்­தாய் இனி என்ன செய்­ய­லாம்? நானும் இப்­போது பாண்­ட­வர்­களை வெறுக்­கி­றேன்’’­ என்­றான்.

துரி­யோ­த­ன­னும் அடுத்த தம்பி துச்­சா­த­ன­னும் சகு­னி­யும் கர்­ண­னும் அடிக்­கடி கூடி சதி­யா­லோ­சனை செய்­தார்­கள். சகு­னிக்கு கணி­கன்  என்று ஒரு மந்­திரி உண்டு. அவன் அர­சி­யல் மர்­மங்­க­ளி­லும், ராஜ­தந்­தி­ரங்­க­ளி­லும் நிபு­ணன் என்று கரு­தப்­பட்­டான். அவனை அவர்­கள் திரு­த­ராஸ்­டி­ர­னி­டம் அழைத்­துப்  போனார்­கள்

`பிரா­மண சிரேஷ்­டரே !பாண்­ட­வர்­கள் கர்­வம் பிடித்­த­வர்­க­ளா­யி­ ருக்­கி­றார்­கள்  என்று மெல்ல ஆரம்­பித்­தான் திரு­த­ராஷ்­டி­ரன். கணி­க­னும்  அமை­தி­யாக,

`ராஜ­சி­ரேஷ்­ட­ரரே! முன்­னொரு காலத்­தில் அர­சி­யல் ஞான­யான ஒரு நரி காட்­டில் வசித்­துக் கொண்­டி­ருந்­தது என்று ஒரு கதை சொல்­லத் தொடங்­கி­னான். திரு­த­ராஷ்­டி­ரன் ஆவ­லாக கேட்­டுக் கொண்­டி­ருந்­தான்.

தொடர்ந்து கதை சொன்­னான் கணி­க­ளன். அந்த நரிக்கு ஒரு புலி, எலி, செந்­நாய், ஒரு கீரிப்­பிள்ளை இவை நண்­பர்­க­ளாக இருந்­தன. இந்­தப் பிரா­ணி­கள் அந்­தக் காட்­டிலே ஒரு மானை கண்­டன. அதைப்­பி­டித்து சாப்­பிட வேண்­டும் என்ற ஆசை. ஆனால் பிடிக்­கும் திற­னில்லை . கூடி ஆலோ­சித்­தார்­கள். புலி பல­முறை முயன்று பார்த்­தும் வேக­மும், புத்­தி­யு­ முள்ள மானை பிடிக்க முடி­ய­வில்லை. ஆனால் நரி ஒரு யோசனை சொல்­லிற்று,’ இப்­படி சொல்­லிக்­கொண்டே கணி­கன்  சகுனி முகத்தை பார்த்­தான். அப்­போது அந்த மந்­தி­ரி­யின் முகமே அந்­தக் குள்ள நரி­யின் முகத்தை நினை­வு­ ப­டுத்­தி­யது. திரு­த­ராஷ்­டி­ரன் கதையை மட்­டும் ரசித்­துக்­கொண்­டி­ருந்­தான். மான் படுத்­தி­ருக்­கை­யில்  திடி­ரென்று  இந்த எலி­கள் கடித்து விடட்­டும்’ என்­றது நரி. அப்­பால் என்ன செய்­ய­வேண்­டு­மென்று புலிக்கு விளங்­கி­விட்­டது. அதற்­குப் பிறகு என்ன செய்ய வேண்­டும் என்­ப­தும் நரிக்கு தெரிந்­த­து­தான். எலி காலை கடிக்க ஓட முடி­யாத நிலை­யில் அந்த மானை புலி அடித்­துக் கொன்­றது. நரிக்கு ஆசா­ரத்­தி­லும்  பற்று உண்டு. என­வே `­நீங்­கள் நீராடி நிர் மல­ராய் வாருங்­கள். நான் காத்­துக் கொண்­டி­ருக்­கி­றேன்!’ என்று பணி­வாய் சொல்ல அவை எல்­லாம் ஆற்­றுக்­குப் போய்­விட்­டன. முத­லில் புலி நீராடி வந்­த­தும் மனக்­க­லக்­கத்­தோ­டி­ருந்த த நரியை கண்டு `நீதானே சிறந்த புத்­தி­சாலி !உனக்கு என்ன கவலை? இப்­போது நாம் இந்த மாமி­சத்தை பங்­கிட்டு சாப்­பி­டு­வோம்’ என்­றது. நரிக்கோ பங்கு கொடுப்­ப­தில் இஷ்­ட­மில்லை என்று  கணி­கன் சொல்­லும்­போது துரி­யோ­த­னன் முக­மும் அக­மும் ஒருங்கே மலர்ச்சி பெற்­றன.

`நரி சொல்­லிற்று: `மஹா வீரனே! எலி சொன்ன சொல்­லைத்­தான் நான் சொல்­லு­கி­றேன். உன் பலம் இழி­வா­ன­தாம். மானை அது­தான் கொன்­ற­தாம். அந்த வீர­வா­தத்­தைக் கேட்­ட­தும், எனக்கு பங்கு வேண்­டா­மென்று தீர்­மா­னித்­து­விட்­டேன். பசி பெரிதா? மானம் பெரிதா? அந்த வார்த்­தைக் கேட்­ட­தும் புலிக்­கும் மானமே பெரி­தா­கத் தோன்­றி­யது. வேறு எந்த மிரு­கத்­தை­யா­வது தன் வீரம் தோன்ற வேட்­டை­யா­டிப் பசி தீர்த்­துக் கொள்­வதே நல­மென்று போய்­விட்­டது.

` புலி போன­தும் எலி வந்­தது. அதைப் பார்த்து, ` புலிக்கு உன் மேல் பொல்­லாத கோபம்! என்­றது நரி, உடன் செந்­நா­யும் ஓடிப் போயிற்று.

` கடை­சி­யாக கீரிப்­பிள்­ளை­யும் வந்து சேர்ந்­தது. மற்ற நண்­பர்­க­ளைக் குறித்து விசா­ரித்­தது. அப்­போது நரி, ` என்­னால் வெல்­லப்­பட்டு அவை புறங்­காட்டி ஓடி­விட்­டன். நீயும் என்­னோடு சண்டை போட்­டுத்­தான் அந்த மாமி­சத்தை அடை­ய­லாம்’ என்று வீரா­வே­சம் காட்­டிப் பேசி­யது. ` புலியை வென்ற சூர­னுக்கு நாம் எம்­மாத்­தி­ரம்?’ என்று கீரிப்­பிள்­ளை­யும் ஒட்­டம் பிடித்­தது.

( தொட­ரும்)