கடல் மக்கள் வாழ்க்கை!

பதிவு செய்த நாள் : 30 அக்டோபர் 2019

நெய்­தல் நிலம் சார்ந்து வாழும் கடல் மக்­க­ளின் வாழ்வை அழ­கி­ய­லு­டன் கலை­ஞர் செய்­தி­கள்  பதிவு செய்­யும் நிகழ்ச்சி ‘கட­லோடி’.  இது ஞாயி­று­தோ­றும் காலை 9 மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கி­றது.

கடல் எனும் போதே ஒரு பிரம்­மாண்­டம் மன­தி­னுள் எழு­வது இயல்பு! அப்­ப­டிப்­பட்ட  கட­லை­யும் அந்த கடல் மக்­க­ளின் வாழ்­வில் உள்ள பண்­பாட்டு வேர்­க­ளை­யும்,  நம்­பிக்­கை­க­ளை­யும், கொண்­டாட்­டங்­க­ளை­யும், துய­ரங்­க­ளை­யும் காட்­சி­யாக்­கு­கி­றது இந்த நிகழ்ச்சி.

கட­லோ­டி­க­ளுக்­கும் கால்­பந்து விளை­யாட்­டுக்­கும் இடை­யி­லான ரத்­த­மும் சதை­யு­மான தொடர்­பை­யும், கரை­மடி அவர்­க­ளின் தாய்மை பொரு­ளா­தா­ரத்­தின் வலைப்­பின்­ன­லை­யும்.  ‘தோணி’  தமி­ழர்­க­ளின் பிர­மாண்ட கடற்­க­லத்­தின் தொழில்­நுட்­பத்­தை­யும்,  ‘சங்கு’,  ‘கடல் கைம்­பெண்­கள்’, ‘தோணி’ என வெவ்­வேறு அத்­தி­யா­யங்­க­ளாக சம­ர­ச­மில்­லாத ஆவ­ணப்­ப­ட­மாக உரு­வாக்­கப்­ப­டு­கி­றது.