படப்பிடிப்பில் ராதிகாவின் ‘சித்தி 2!’

பதிவு செய்த நாள் : 30 அக்டோபர் 2019

ராதி­கா­வின் ரடான் நிறு­வ­னம் முதன்­மு­த­லாக தயா­ரித்து சன் டிவி­யில் இரவு 9.30 மணி ஸ்லாட்­டில், (டிசம்­பர் 20, 1999லிருந்து நவம்­பர் 2, 2001 வரை) ஒளி­ப­ரப்­பாகி சூப்­பர் டூப்­பர் ஹிட்­டான மெகா சீரி­யல், ‘சித்தி’. அதில் சிவ­கு­மார், ராதிகா, அஞ்சு, தீபா வெங்­கட், அஜய் ரத்­னம், யுவ­ராணி மற்­றும் பல­ரும் நடித்­தி­ருந்­த­னர்.

‘சந்­தி­ர­கு­மா­ரி’யை அடுத்து ரடான் நிறு­வ­னம் ‘சித்தி 2’ என்ற புதிய மெகா சீரி­யலை தயா­ரிக்க ஆரம்­பித்து அதன் படப்­பி­டிப்பு சென்னை கும்­மி­டிப்­பூண்டி பகு­தி­யில் ஜரூ­ராக நடந்து வரு­கி­றது. பிர­பல டைரக்­டர் சுந்­தர் கே. விஜ­யன் டைரக்ட் செய்­யும் இதில் ராதிகா, பொன்­வண்­ணன், டேனி­யல் பாலாஜி, ரூபிணி, மீரா வாசு­தே­வன், ஷில்பா, மகா­லட்­சுமி, ப்ரீத்தி, நிகிலா ராவ், அஷ்­வின், ஜீவன் ரவி, அருள்­மணி, நந்­த­கு­மார் மற்­றும் எண்­ணற்ற நடி­கர் – நடி­கை­க­ளும் நடிக்­கின்­ற­னர். ‘சித்­தி’­­­­யில் காணப்­பட்ட கதைக்­கள ­மும், விறு­வி­றுப்­பும் இதி­லும் சற்­றும் குறை­வில்­லா­மல் இடம்­பெ­றும். ஆனால், ‘சித்­தி’­­­­யின் தொடர்ச்­சி­யாக இது இருக்­காது. இதன் கதை முற்­றி­லும் வேறு. ‘சித்தி’ பேட்­டர்­னில் இருக்­கும்.

சேக்­கி­ழார் திரைக்­கதை அமைக்க, வசு­பா­ரதி வச­னம் தீட்ட, டி. சீனி­வா­சன் ஒளிப்­ப­திவு செய்ய, ‘சித்­தி’க்கு இசை­ய­மைத்த தினா இதற்­கும் இசை­ய­மைக்­கி­றார். ‘சித்­தி’­­­­யில் அவ­ரு­டைய இசை­ய­மைப்­பில் உரு­வான ‘கண்­ணின் மணி கண்­ணின் மணி’ டைட்­டில் பாடல் பெரிய அள­வில் ‘ஹிட்’­­­­டா­னது குறிப்­பி­டத்­தக்­கது. மேலும், ஒரு சிறு ­மியின் குர­லில் ஒலித்த ‘சித்தீ...’யும் ரொம்ப பேமஸ்.

அடுத்த மாதம் 11ம் தேதி­யி­லி­ருந்து 20ம் தேதி வரை ‘சித்தி 2’ படப்­பி­டிப்பு சிங்­கப்­பூ­ரில் நடக்க போகி­றது என்­பது ஹைலைட்­டான விஷ­யம்.

கூடிய சீக்­கி­ரத்­தில் ‘சித்தி 2’வை சன் டிவி­யில் அதே இரவு 9.30 மணி ஸ்லாட்­டில் (திங்­கள் முதல் சனி வரை) கண்டு ரசிக்­க­லாம்.