சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 416 – எஸ்.கணேஷ்

29 அக்டோபர் 2019, 05:11 PM

நடி­கர்­கள்: விமல், சிவ­கார்த்­தி ­கே­யன், பிந்து மாதவி, ரெஜினா கஸ்ண்ட்ரா, டில்லி கணேஷ், மனோஜ் குமார், சூரி மற்­றும் பலர். இசை : யுவன் ஷங்­கர் ராஜா, ஒளிப்­ப­திவு : விஜய் உல­க­நாத், எடிட்­டிங் : அத்­தி­யப்­பன் சிவா, தயா­ரிப்பு : மதன், பாண்­டி­ராஜ், திரைக்­கதை, இயக்­கம் : பாண்­டி­ராஜ்.

‘பட்டை’ முரு­க­னும் (சிவ­கார்த்­தி­கே­யன்), ‘தேனி’ கேச­வ­னும் (விமல்) வேலை செய்­யப் பிடிக்­கா­மல் அர­சி­ய­லில் ஜெயிக்­கப்­போ­வ­தாக கூறி ஊர் சுற்­று­கி­றார்­கள். இரு­வ­ரது பெற்­றோ­ரும் இவர்­க­ளது போக்­கால் கோபப்­பட்­டா­லும் கொஞ்­ச­மும் வருந்­தா­மல் குடித்து பொழுது போக்­கு­கி­றார்­கள். முரு­கன் ஜெராக்ஸ் கடை நடத்­தும் ‘பாப்பா’ பார்­வ­தியை விரும்­பு­கி­றார். கேச­வன் மித்ரா மீன­லோ­சி­னியை (பிந்து மாதவி) விரும்­பு­கி­றார். காத­லி­க­ளின் அறி­வு­ரை­க­ளும் இரு­வ­ரை­யும் திருத்­த­வில்லை. கவுன்­சி­லர் எலக்­க்ஷ­னில் முரு­கன் நிற்க நண்பர்­கள் தேர்­தல் வேலை­களை பார்க்­கி­றார்­கள்.

தேர்­த­லில் சொற்ப ஓட்­டு­கள் வாங்கி தோற்­றும் இரு­வ­ரும் திருந்­த­வில்லை. ரயில்­வே­யில் கார்­டாக வேலை பார்க்­கும் முரு­க­னின் தந்தை ஆசீர்­வா­தம் (மனோஜ்குமார்), உடல்­ந­லக்­கு­றை­வால் பாதிக்­கப்­ப­டு­கி­றார்.

இது­வரை தன்­னால் முடிந்த உத­வி­களை செய்­தும் எதி­லும் வெற்றி பெறாத மக­னி­டம் அது குறித்து வருந்­து­கி­றார். பணி நேரத்­தில் ஓடும் ரயி­லின் முன் தவ­றி­வி­ழுந்து பலி­யா­கி­றார். கேச­வ­னின் தந்தை (டில்லி கணேஷ்) மக­னது போக்கை கண்­டிக்­கி­றார். அத­னால் மோதல் ஏற்­பட்டு வெளி­யே­றும் கேச­வன் காய­லான் கடை தொடங்கி நடத்­து­கி­றார்.

தந்­தை­யின் வேலை முரு­க­னுக்கு கிடைக்க, தந்­தை­யின் நண்பர் மூல­மாக தனக்­காக தந்தை உயிர் தியா­கம் செய்­ததை அறி­யும் முரு­கன் தந்­தை­யின் அருமை புரிந்து அவ­ரது புகைப்­ப­டத்­தில் “DAD IS MY GOD” ‘அப்பா எனது தெய்­வம்’ என்று எழு­து­கி­றான். கேச­வ­னி­டம் சிறு­வ­ய­தில் தான் பட்ட துன்­பங்­க­ளை­யும், கடு­மை­யாக உழைத்து முன்­னே­றி­ய­தைப் பற்­றி­யும் எடுத்­துச் சொல்­லும் கேச­வ­னின் தந்தை, அவ­னது முன்­னேற்­றத்­திற்­காக வாழ்த்­து­கி­றார். கேச­வன் தனது தந்­தை­யின் புகைப்­ப­டத்­தில் “MY FATHER IS HERO” ‘என் அப்பா ஹீரோ’ என்று எழு­து­கி­றான்.