பார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 27–10–19

பதிவு செய்த நாள் : 27 அக்டோபர் 2019

அனை­வ­ருக்­கும் தீபா­வளி வாழ்த்­துக்­கள்! இந்த நல்ல நாளில் ஒரு நல்­ல­வரை நினைப்­போம். இந்த வாரம் அதா­வது அக்­டோ­பர் 31ம்தேதி சர்­தார் வல்­ல­பாய் படே­லின் பிறந்த நாள். மோடி­யின் அரசு குஜ­ராத்­தில் அவ­ருக்கு பெரிய சிலை எழுப்­பி­ய­தால் இங்கே பல­ரும் அவரை ஆர்.எஸ்.எஸ். காரர்­கள் என்று நினைத்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். ஆனால் அவர் இல்­லை­யேல் இன்று இந்த பார­தம் ஒன்று பட்ட தேச­மாக இருந்­தி­ருக்­காது. இந்த படேல் யார்? அவர் பின்­பு­லம் என்ன?

 இதை நாம் தெரிந்து கொள்ள வேண்­டாமா?

 இந்­தி­யா­வின் முதல் சுதந்­தி­ரப் போராக கரு­தப்­ப­டும் சிப்­பாய் கல­கம் நடந்­தது, 1857ம் வரு­டம். இதி­லி­ருந்து பதி­னெட்டு ஆண்­டு­கள் கழித்து,  1875ம் ஆண்டு அக்­டோ­பர் 31ம் தேதி குஜ­ராத்­தின் கெய்ரா மாவட்­டத்­தின் நடி­யாட்­டில் பிறந்­த­வர் படேல்.  ஒரு சீடர் இல்­லா­மல் எந்த இறை­தூ­த­ரும், கொள்­கை­வா­தி­யும்   புகழ் பெற­மு­டி­யாது. அசோ­கர், லெனின், விவே­கா­னந்­தர் இவர்­கள் எல்­லாம் ஒரே ரகம்.

அசோ­கர் இல்­லா­மல் புத்­தர் புக­ழ­டைந்­தி­ருக்க முடி­யாது. கார்ல் மார்க்ஸ் ஒரு மிகப்­பெ­ரிய பொரு­ளா­தார அறி­வு­ஜீவி. ஆனால் அவ­ரு­டைய சிந்­த­னை­க­ளுக்கு அர­சி­யல், பொரு­ளா­தார வடி­வம் கொடுத்­த­வர், லெனின். விவே­கா­னந்­தர் இல்­லா­மல், ராம­கி­ருஷ்ண பர­ம­ஹம்­ச­ரின் பெருமை அமெ­ரிக்­கா­வை­யும், ஐரோப்­பா­வை­யும் எட்­டி­யி­ருக்­காது.

அப்­ப­டித்­தான் படேல் காந்­திக்கு இருந்­தார். இந்­தி­யா­வில் காந்­தி­யின் சத்­தி­யா­கி­ர­கம் வெற்றி பெற்­ற­தற்கு கார­ணம் அவ­ரது பிர­தான சீடர் படே­லி­னால்­தான். முப்­பது ஆண்­டு­க­ளாக ஒரு கட்­டுக்­கோப்­பான, திட­மான, ஒழுக்­க­மான, வன்­மு­றை­யற்ற ஒரு சத்­தி­யா­கி­ரக படையை காந்தி உரு­வாக்க கார­ண­மாக இருந்­த­வர் படேல்.

இவ­ருக்கு ‘இரும்பு மனி­தர்’ என்று பெயர். ஒரு முடி­வெ­டுப்­ப­தில் பார­பட்­ச­மின்றி எடுப்­பார். தவறு செய்­த­வர்­கள் யாராக இருந்­தா­லும் இவ­ரி­ட­மி­ருந்து தப்ப முடி­யாது. அதில் எந்த சம­ர­ச­மும் செய்து கொள்ள மாட்­டார். அவர் ஒரு பலாப்­ப­ழம் போல, வெளியே முள்­ளி­ருக்­கும், உள்ளே இனிப்­பான பழ­மாக இருப்­பார் படேல்.  இந்த உறு­தி­யில் அவ­ருக்கு இரண்டு பேருக்­குத்­தான் விதி­வி­லக்­க­ளித்­தார். ஒரு­வர்– அவ­ரு­டைய குரு மகாத்மா காந்தி. இன்­னொ­ரு­வர் அவர் பெரி­தும் மதிக்­கும் இந்­திய பிர­த­மர் நேரு.

 சுதந்­திர இந்­தி­யா­வின் துணைப் பிர­த­ம­ரா­க­வும், முதல் உள்­துறை அமைச்­ச­ரா­க­வும் இருந்­த­வர் படேல். தான் எடுத்த முடி­விற்கு படே­லி­ட­மி­ருந்து மறுப்பு வந்­தால் அதை பெரும்­பா­லும் அப்­ப­டியே ஏற்­றுக் கொள்­வார் நேரு.

 படேல் இந்த தேசத்­தின் உள்­துறை அமைச்­ச­ராக இருந்த போது வர­லாற்­றின் முக்­கிய இடம்­பெற்ற இரண்டு முடி­வு­களை எடுத்­தார். பிரிட்­டி­ஷார் அதி­கார வர்க்­கத்தை ஐ.சி.எஸ். மூல­மாக நிர்­வ­கித்து வந்­த­னர். அதை இந்­தி­யன் அட்­மி­னிஸ்ட்­ரேட்­டிவ் சர்­வீஸ் என்று மாற்­றி­ய­வர் படேல். அதே போல் இந்­தியா சுதந்­தி­ர­ம­டைந்த பின், இந்­தி­யா­வில் இருந்த 500க்கும் அதி­க­மான சமஸ்­தா­னங்­களை இணைத்து இந்­தி­யாவை ஒரே தேச­மாக்­கிய பெருமை அவ­ருக்கு மட்­டுமே உண்டு.

பிரிட்­டிஷ்­கா­ரர்­கள் சும்மா நமக்கு அப்­ப­டியே சுதந்­தி­ரம் கொடுத்து விட்டு போக­வில்லை. அவர்­கள் இந்­தி­யாவை விட்டு போன போது 500க்கும் அதி­க­மான சமஸ்­தா­னங்­கள் இருந்­தன. இவை சுதந்­தி­ர­மான மன்­னர்­கள் ஆட்சி கொண்ட சமஸ்­தா­னங்­கள்.

சுதேச சமஸ்­தா­னங்­க­ளில் எண்­ணிக்­கை­யில் கூட ஒரு­மித்த கருத்து ஒன்றை எட்ட முடி­யாத அள­வுக்கு அதி­க­மாக இருந்­தது. ஒரு வர­லாற்­றா­சி­ரி­யர் 521 என்­றும், இன்­னொ­ரு­வர் 565 என்­றும் கணக்­கி­டு­கின்­ற­னர். எப்­ப­டி­யும் 500க்கும் மேற்­பட்­டவை. அள­வி­லும் அந்­தஸ்­தி­லும் வித்­தி­யா­ச­மா­னவை. ஒரு பக்­கத்­தில் ஐரோப்­பிய தேசம் ஒன்றை போல பரந்த காஷ்­மீர் மற்­றும் ஹைத­ரா­பாத். மற்­றொரு பக்­கம் சில கிரா­மங்­களை மட்­டுமே கொண்ட ஜமீன்­கள் அல்­லது ஜாகீர்­கள்.

1946 – 47 அனைத்­திந்­திய சுதேச சமஸ்­தா­னம் மக்­கள் மாநாட்டு கட்­சிக்கு நேரு தலை­வ­ராக இருந்­தார். சுதேச சமஸ்­தா­னங்­கள் பற்றி நேரு தீவி­ர­மான கருத்­துக்­கள் கொண்­டி­ருந்­த­தாக அவ­ரு­டைய வாழ்க்கை வர­லாற்று ஆசி­ரி­யர் குறிப்­பி­டு­கி­றார். சமஸ்­தான மன்­னர்­க­ளின் நில­வு­டைமை மேலா­திக்க மனப்­பான்மை, மக்­க­ளது உணர்­வு­களை ஒடுக்­கும்  தன்மை ஆகி­யவை நேரு­விற்கு பிடிக்­க­வில்லை. எனவே, அவர் சமஸ்­தான மன்­னர்­க­ளின் ஆட்சி தொடர்­வதை வெறுத்­தார் .ஆனால் பிரிட்­டிஷ் அதி­கா­ரி­கள் அர­சர்­க­ளது ஆட்­சியை ஊக்­கு­வித்­த­னர். பிரிட்­டி­ஷார் வெளி­யே­றி­ய­வு­டன் சமஸ்­தான மன்­னர்­கள் விரும்­பி­னால் அவர்­க­ளும் சுதந்­தி­ரத்தை அறி­வித்து தனி ஆட்சி நடத்­த­லாம் என்று நம்­பிக்­கை­யூட்­டி­னார்­கள் பிரிட்­டி­ஷார்.

 அவர்­கள் பங்­குக்கு, சம்ஸ்­தான மன்­னர்­க­ளும் நேருவை வெறுத்­த­னர்.  பயப்­ப­ட­வும் செய்­த­னர். நல்ல வேளை­யாக காங்­கி­ரஸ், சமஸ்­தான பிரச்­னையை, ஒரு நல்ல நிர்­வா­கி­யான வல்­ல­பாய் படே­லி­டம் ஒப்­ப­டைத்­தது.

அதற்கு கார­ணம் இருந்­தது.  இந்­திய கூட்­டாட்சி தத்­து­வத்­தின் மீதும், இந்­தி­யாவை ஒரு நாடாக இருக்க வேண்­டும் என்­றும் 1927ம் ஆண்­டி­லி­ருந்து விரும்­பி­ய­வர் படேல்.

1929ம் ஆண்டு ஐந்­தா­வது கத்­தி­ய­வார் அர­சி­யல் மாநாடு நடந்­தது.  அப்­போதே படேல் பேசும்­போது சொன்­னார், ` இந்­திய மாநி­லங்­க­ளில் நிலை மிக­வும் பரி­தா­ப­க­ர­மாக, ஒழுங்­கற்று இருக்­கி­றது.  உல­கத்­தில் எந்த ஒரு நாட்­டி­லும் இப்­படி ஒரு வினோ­த­மான ஸ்தாப­னங்­கள் இருந்­த­தில்லை.  மன்­னர்­க­ளுக்கு சுய­ராஜ்­ஜிய அந்­தஸ்து கொடுத்­தா­லும், அங்­கே­தான் மனித அடி­மை­கள் அதி­கம் இருக்­கி­றார்­கள். இப்­போது அடி­மை­கள் பிரிட்­டிஷ் வசம். ஆனா­லும் அந்த அடி­மை­களை கொடு­மைப்­ப­டுத்தி நிர்­வ­கிப்­பது மன்­னர்­க­ளின் அதி­கா­ரி­கள்­தானே?  அந்த நிர்­வா­கி­யின் கண்­ணி­லி­ருந்து எது­வும் தப்­பாது.  பிரிட்­டிஷ் சொல்­படி நடக்­கும் மன்­ன­ரின் ஆணைப்­ப­டி­யும் அவ­ரு­டைய அரை­குறை அறிவு கொண்ட உத்­த­ரவை நிறை­ வேற்­று­வ­தும்­தானே? மன்­னர்­கள் ஏதோ பிரிட்­டிஷ் சாம்­ராஜ்­ஜி­யத்­தோடு எப்­போ­தும் சினே­க­மாக இருக்­க­லாம் என்று நினைத்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். ஆனால் அந்த நட்பு என்­பது சிங்­கம் –- ஓநா­யின் பழக்­கம் என்­பது இந்த மன்­னர்­க­ளுக்­குப் புரி­யாது.  பல மன்­னர்­கள் ஒவ்­வொரு வரு­ட­மும் ஐரோப்பா போகி­றார்­கள்.  போகும் எந்த மன்­ன­ருக்­கா­வது அங்கே ராஜ­ம­ரி­யாதை கிடைத்­தி­ருக் கி­றதா? பல ராஜாக்­க­ளின் சமஸ்­தான எல்­லை­கள் என்­பது ஆப்­கா­னிஸ்­தானை விட குறு­கி­யவை.  ஆனால் அதே ஆப்­கா­னிஸ்­தான் மன்­னர் அமீர் ஐரோப்பா சென்­ற­போது அவர் சென்ற இடங்­க­ளி­லெல்­லாம் அவ­ருக்கு ராஜ வர­வேற்பு.  பிரிட்­டிஷ் அர­சுக்கு விசு­வா­ச­மாக இருந்­தாலே போதும் என்று அவர்­கள் நினைத்­தால் அது அவர்­கள் செய்­யும் மிகப்­பெ­ரிய தவறு.  இந்த மன்­னர்­கள் நல்லா யோச­னை­யைக் கேட்டு நடக்­கா­விட்­டால், தோல்வி வரும் நேரத்­தில் அந்த ஆலோ­ச­ன­களை கேட்­கும் நேரம் வரும். நாடு என்­பது மக்­க­ளுக்­காக, மக்­கள் என்­ப­வர்­கள் நாட்­டுக்­காக அல்ல’ என்­றார் படேல் அது­தான் பின்­னால் நடந்­தது.

அவர் சொன்­ன­து­தான் பதி­னெட்டு ஆண்­டு­கள் கழித்து 1947ம் ஆண்டு நடந்­தது. மன்­ன­ராட்சி முறையை ஒழித்­தாரே தவிர, மன்­னர்­களை அல்ல. 1929ம் ஆண்­டி­லேயே அவர் சுதந்­திர இந்­தி­யா­வில் மன்­னர்­க­ளுக்­கும் , இள­வ­ர­சர்­க­ளுக்­கும், அவர்­க­ளு­டைய சமஸ்­தா­னங்­கள் பயப்­ப­டத் தேவை­யில்லை.   பிர­தி­நி­தித்­து­வம் ஸ்தாபங்­களை உரு­வாக்­கி­யுள்ள மாநி­லங்­கள் எதை­யும் இழக்­க­வில்லை. மக்­க­ளுக்கு நம்­பிக்கை துரோ­கம் செய்ய எந்த மாநி­லத்­திற்­கும் கார­ண­மே­யில்லை. ஒரு மாநி­லத்­தின் அச்­ச­மின்­மையே மக்­க­ளின் மாநில நிர்­வா­கத்­தின் மீது வைக்­கும் நம்­பிக்­கை­தான்.  

 டிசம்­பர் 25, 1937ம் ஆண்டு, ஒரு மாநாட்­டில் பேசும்­போது படேல் சொன்­னார். `பிரிட்­டிஷ் இந்­தி­யா­வில் இருக்­கும் நாமெல்­லாம் அடி­மை­கள் என்­ப­தில் சந்­தே­க­மே­யில்லை. ஆனால் மாநி­லங்­க­ளில் வாழும், அது­வும் சமஸ்­தா­னங்­க­ளில் வாழ்­ப­வர்­கள் அடி­மை­க­ளின் அடி­மை­கள். அத­னால்­தான் உங்­கள் நிலை கீழ்த்­த­ர­மாக இருக்­கி­றது.  

 அடுத்த வரு­டம் மே 22ம்தேதி மகா­ராஷ்­டி­ரா­வின் சங்­கி­லி­யில் நடந்த மாநாட்­டில் பேசும்­போது, `உல­கில் எந்த நாட்­டி­லும் ராஜாக்­க­ளுக்கு என்று 600 சமஸ்­தா­னங்­கள் இல்லை.  பல சமஸ்­தா­னங்­கள், ஐந்து அல்­லது ஆறு கிரா­மங்­க­ளைக் கொண்­டவை. அதை வைத்­தி­ருப்­ப­வர்­க­ளெல்­லாம் தங்­களை `ராஜா’ என்று அழைத்­துக் கொள்­கி­றார்­கள். கீரி­டம் வைத்­துக் கொண்­டி­ருக்­கும் எந்த ஒரு ராஜா­வும் சுதந்­தி­ரத்தை கேட்க முடி­யாது.. அவர்­க­ளும் அடி­மை­கள்­தான்’ என்­றார்.

 சுதந்­தி­ரம் வந்த பிறகு படேல், நேரு மற்­றும் சிலர்  இந்த மன்­னர்­க­ளுக்கு எதி­ராக போராட்­டம் நடத்த மூன்று கார­ணங்­க­ளுக்­காக விரும்­ப­வில்லை. அந்த மூன்று சிக்­கல்­கள் என்­னென்ன?

ஒன்று: இந்த ராஜாக்­க­ளுக்கு எதி­ராக போராட அந்த ராஜ்­ஜி­யங்­க­ளின் மக்­கள் தயா­ராக இல்லை.  இரண்டு; தங்­க­ளி­டம் படை­ப­ல­மில்­லா­மல், இவர்­களை ஆத­ரிக்­கும் பிரிட்­டி­ஷா­ரோடு இரண்­டா­வது போராட்­டம் நடத்த தயா­ரா­க­யில்லை.  மூன்று: இந்த ராஜ்­ஜி­யங்­க­ளுக்கு எதி­ரான போராட்­டம் என்­பது இந்­தி­யர்­க­ளுக்­கும் இந்­தி­யர்­க­ளுக்­கு­மாக இருக்க வேண்­டும் என்று உறு­தி­யோடு இருந்­தார்­கள்.

அத­னால் ராஜ்­ஜி­யங்­க­ளின் மக்­கள் போராட்­டம் என்­பது, ஒரு சமா­தா­ன­மான அர­ச­மைப்பு முயற்­சி­யில் நடந்து அதன்­மூ­லம் அந்த ராஜ்­ஜிய மக்­க­ளின் அர­சி­யல், பொரு­ளா­தார குறை­பா­டு­களை களை­ய­வேண்­டும் என்­ப­து­தான்.  அதற்கு மேல் எது­வும் கூடாது என்று நினைத்­தார்­கள்.  காங்­கி­ரஸ் இது போன்ற போராட்­டத்­தில் ஈடு­பட்டு இந்த  `ராஜா’க்­களை பகைத்­துக் கொள்­ளக்­கூ­டாது என்று படேல் நினைத்­தார். வல்­ல­பாய் படேலை நாம் நன்­றி­யோடு நினைத்­துப் பார்க்க வேண்­டும்.