நானும் வீட்ல ஒருத்­தியா ஆயிட்­டேன்! – விசித்ரா

பதிவு செய்த நாள் : 23 அக்டோபர் 2019

“இன்­னைக்கு சீரி­ய­லுக்கு கிடைக்­கிற வர­வேற்பு ரொம்ப ஆச்­ச­ரி­யமா இருக்கு. சீரி­யல்ல நடிக்­கி­ற­வங்­களை அவங்­க­வங்க கேரக்­டர் பேர்­லயே கூப்­பி­டு­ற­தும், அவங்­களை தங்­க­ளோட வீட்ல ஒருத்­த­ரா­கவே துாக்கி வச்சு கொண்­டா­டு­ற­தும் வியப்பை தருது. அந்த வகை­யிலே, நானும் ஆடி­யன்­சோட வீட்ல ஒருத்­தியா ஆயிட்­டேன்!” என்று சொல்­கி­றார் முன்­னாள் கவர்ச்சி நடி­கை­யும், ‘மடிப்பு அம்சா’ என செல்­ல­மாக அழைக்­கப்­பட்­ட­வ­ரு­மான விசித்ரா.

‘ராசாத்தி’ சீரி­ய­லில் வில்லி ‘சிந்­தா­ம­ணி’­­யாக நடித்து வரும் அவர், நம்­மி­டம் சொன்­ன­தி­லி­ருந்து...

“சினி­மா­விலே நடிக்­க­ணும்னு ஆசைப்­ப­டுற எல்­லா­ருக்­குமே ஹீரோ­யின் ஆசை இருக்­கத்­தான் செய்­யும். அந்த மாதிரி, எனக்­கும் ஹீரோ­யின் ஆசை இருந்­துச்சு. ஆனா, சினி­மா­விலே குத்­துப்­பாட்­டுக்கு ஆடின எனக்கு ‘கவர்ச்சி நடி­கை’ன்­னு­தான் ஆரம்­பத்­திலே பேரு வந்­துச்சு. ஆனா, அதுக்­காக எனக்கு ரொம்ப வருத்­த­மில்லே. ஏன் அப்­ப­டீன்னா, அன்­னைக்கு இருந்த கவர்ச்சி நடி­கை­களை விரல் விட்டு எண்­ணி­ட­லாம். ‘பொற்­கொடி’ படத்­திலே இருந்து ஆரம்­பிச்சு ‘அவள் ஒரு வசந்­தம்,’ ‘சின்­னத்­தாயி,’ ‘தலை­வா­சல்,’ ‘தேவர் மகன்,’ ‘அம­ரா­வதி,’ ‘ஜாதி மல்லி,’ ‘ரசி­கன்,’ ‘முத்து’ ‘வீரா,’ ‘ஜெயம்,’ ‘சீறி வரும் காளை,’ ‘அமை­திப்­படை,’ ‘வில்­லாதி வில்­லன்’  உட்­பட பல பெரிய நடி­கர்­கள், டைரக்­டர்­க­ளோட படங்­கள்ல நடிச்­சி­ருக்­கேன். அப்­பு­றம், ‘மாமி சின்ன மாமி’ சீரி­யல்­ல­யும் நடிச்­சி­ருக்­கேன்.  

   எனக்கு கல்­யா­ண­மாச்சு.  கல்­யா­ணத்­துக்கு பிறகு நாம மறு­ப­டி­யும் நடிப்­போமா, நடிக்­க­மாட்­டோ­மான்னு ஒரே குழப்­பமா இருந்­துச்சு. என் கண­வ­ரோட வேலை­யால பூனே, மும்­பைன்னு பல இடங்­கள்ல  ஷிப்ட் ஆகிக்­கிட்­டி­ருந்­தோம். அப்­பு­றம், எங்க மூணு குழந்­தை­க­ளோட படிப்பு, வளர்ப்பு விஷ­யங்­கள்ல ரொம்ப கவ­னமா இருக்க வேண்­டி­ய­தா­யி­டுச்சு. இதுக்கு மத்­தி­யிலே சொந்­தமா ஓட்­டல் பிசி­னஸ் வேற பண்­ணிக்­கிட்­டி­ருந்­தோம். இவ்­வ­ள­வுக்­கும் நடு­விலே நாம சினி­மா­வி­லேயோ, சீரி­யல்­லயோ மறு­ப­டி­யும் நடிப்­போம்னு ஏதோ ஒரு உள்­ளு­ணர்வு இருந்­துக்­கிட்டே இருந்­துச்சு. ஒரு விஷ­யம் நடக்­கிற மாதி­ரியே நம்ம ஆழ்­ம­னசு நினைக்­கு­துன்னா, ஒரு நாள் அந்த விஷ­யம் கண்­டிப்பா நடந்­தி­டும். எதை வச்சு சொல்­றீங்­கன்னு கேக்­கி­றீங்­களா? நான் மனோ­தத்­து­வம் படிச்­சவ. நான் நினைச்ச மாதி­ரியே ‘ராசாத்­தி’­­யிலே நடிக்­கி­றேன் பார்த்­தீங்­களா? இதிலே நடிக்­கி­ற­வங்­கள்ல சில பேரு நான் நடிச்ச படங்­கள் ரிலீ­சான சம­யத்­திலே ஸ்கூல்ல படிச்­சுக்­கிட்டு இருந்­தாங்­க­ளாம். ஷூட்­டிங் ஸ்பாட்ல என்­கிட்ட பேசு­ற­துக்கு ரொம்ப பிரி­யப்­ப­டு­வாங்க. ஆனா, அதே நேரத்­திலே தயங்­க­வும் செய்­வாங்க. காலப்­போக்­கிலே, அதெல்­லாம் சரி­யா­யி­டும்னு எனக்கு நம்­பிக்கை இருக்கு.

   ‘ராசாத்­தி’­­யிலே எனக்கு நல்ல வெயிட்­டான கேரக்­டரை கொடுத்­தி­ருக்­காங்க. விஜ­ய­கு­மார் அண்ணே, சுலக் ஷணா, டைரக்­டர் மனோஜ்­கு­மார் அண்ணே, செந்­தில் சார் இப்­படி நிறைய சீனி­யர் ஆர்­டிஸ்­டு­கள்­லாம் நடிக்­கி­றாங்க. அப்­ப­டிப்­பட்­ட­வங்­க­ளோடு சேர்ந்து நடிக்­கி­றது ரொம்ப சந்­தோ­ஷமா இருக்கு. இந்த மாதிரி நல்ல நல்ல கேரக்­டர்­களா கிடைச்சா, சீரி­யல்ல தொடர்ந்து நடிப்­பேன். அதே நேரத்­திலே, வில்லி கேரக்­ட­ரா­கவே வந்தா, நடிக்­க­மாட்­டேன். நான் அதிலே உறு­தியா இருக்­கேன்.”