கலர்ஸ் தமி­ழில் ராதிகா வழங்­கும் ‘கோடீஸ்­வரி!’

பதிவு செய்த நாள் : 23 அக்டோபர் 2019

ராதிகா தொகுத்து வழங்க, கலர்ஸ் தமி­ழில் ‘கோடீஸ்­வரி’ புதிய குவிஸ் கேம் ஷோ ஒளி­ப­ரப்­பாக உள்­ளது. முழுக்க முழுக்க பெண்­க­ளுக்­கான நிகழ்ச்சி இது.

படித்த மற்­றும் அதி­கா­ரம் பெற்ற தமி­ழக பெண்­க­ளின் கவ­னத்தை ஈர்க்­கும் நிகழ்ச்­சி­யா­க­வும், அவர்­க­ளின் ஆவலை துாண்­டு­வ­தா­க­வும், அறி­வுத் திற­மைக்கு ஏற்ற நிகழ்ச்­சி­யா­க­வும் இது இருக்­கும். மேலும், இது சாதா­ரண பெண்­க­ளின் வாழ்க்­கையை மாற்­றும் தன்­மை­மிக்க நிகழ்ச்­சி­யா­க­வும் இருக்­கும். கலர்ஸ் தமிழ், இந்த நிகழ்ச்­சியை முற்­றி­லும் மாறு­பட்ட கோணத்­தில் வழங்க விருக்­கி­றது.

தமிழ் பேசும் பெண் பார்­வை­யா­ளர்­க­ளுக்கு, அவர்­க­ளின் விழிப்பு ணர்வு, புத்­திசா ­லித்­த­னம் ஆகி­ய­வற்றை உல­கம் முழு­வ­தும் வெளிப்ப டுத்­த­வும், ஜாக்­பாட் தொகை­யான 1 கோடி ரூபாயை வெல்­லும் வாய்ப்­பை­யும் வழங்­கும்.

ராதி­கா­வின் கண­வர் நடி­கர் சரத்­கு­மார் முன்பு ‘கோடீஸ்­வ­ரன்’ குவிஸ் கேம் ஷோவை வழங்­கி­னார். இப்­போது ராதிகா ‘கோடீஸ்­வ­ரி’யை வழங்கு கிறார். அட! இந்த பொருத்­தம் கூட நல்லா இருக்­குல்ல!