ராஜ் டிவியில் ‘பூவிழி வாசலிலே’ திங்கள் முதல் வெள்ளி வரை புதிய நேரத்தில் அதாவது இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
தேன்மொழியை எப்படியாவது பழிவாங்கியே தீர வேண்டும் என்று கமல் நாராயணன் வன்மத்துடன் இருக்கிறார். விஷ்ணு, கண்மணி, சூரஜ், தேன்மொழி ஆகியோர் விடுமுறைக்காக வெளியூர் செல்லும்போது, தேன்மொழியை கொல்ல வேண்டும் என்று கமல் நாராயணன் திட்டமிடுகிறார்.
தேன்மொழியை திருமணம் செய்யும் நோக்கத்துடன், அவளுடன் ஒரு மாலைப்பொழுதில் தனது விருப்பத்தை சூரஜ் பகிர்கிறார். அந்த நேரத்தில் அஜயிடமிருந்து தேன்மொழிக்கு செல்போனில் அழைப்புவர, சூரஜ் கோபத்தின் உச்சிக்கே செல்கிறார்.
இதனிடையே, காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த சில ரவுடிகள், தேன்மொழியை கண்காணித்தபடி பின்தொடர்ந்து, அவளை கடத்திச் செல்ல முயல்கின்ற னர். அப்போது எங்கிருந்தோ வந்த துப்பாக்கி குண்டு தேன்மொழியின் உடலில் பாய்கிறது. இதில் தேன்மொழி பலத்த காயம் அடைகிறாள். அவளை விஷ்ணு காப்பாற்றுகிறார். தேன்மொழியை தாக்கியது கமல் நாராயணன்தான் என்று விஷ்ணுவும், சூரஜும் சந்தேகிக்கின்றனர்.
இந்த சூழலில், கண்மணி இல்லாமல், ராமர் பிறந்தநாள் விழாவை மிகப் பிரம்மாண்டமாக கொண்டாட ராஜவம்சியின் இல்லம் தயாராகி வருகிறது.
எப்போதும் பாதுகாப்பு இல்லாதது போல உணரும் கண்மணியின் வாழ்க்கையில் நடந்த மர்மங்கள் என்ன? தேன்மொழியை கொல்ல நினைக்கும் கமல் நாராயணனின் திட்டம் நிறைவேறியதா?