ராஜ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ‘எல்லாமே என் சாய்’ புதிய சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
குரு கிராம மக்கள் அனைவருக்கும் மிகப்பெரிய பிரச்னை கொடுத்து வருவதால் ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுகூடி குருவை துவாரகமாயை விட்டு விரட்டுகிறார்கள். அப்போது, சாய் அவர்கள் அனைவரையும் அழைத்து எவன் ஒருவன் இந்த மண்ணில் அடி எடுத்து வைக்கிறானோ, அவன் செய்த பாவம் எல்லாம் நீர்த்துபோகும். இதுதான் இந்த மண்ணின் தர்மமாகும்’’ என்று கூறுகிறார். சாய்பாபாவின் பேச்சை கேட்டு அனைவரும் கலைந்து செல்கிறார்கள். ஆனால் இந்த குரு நல்லவன் போல் நடிக்கிறான். ஆனால் சாய்பாபாவிற்கு எதிராக அனைத்தையும் செய்கிறான். சாய்பாபாவின் அருளால் இவன் பாவம் எல்லாம் தீர்ந்து நல்லவனாக மாறுவானா என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.