ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 23–10–19

பதிவு செய்த நாள் : 23 அக்டோபர் 2019

இளையராஜா சிலாகிக்கும் பாடல்!

(சென்ற வார தொடர்ச்சி...)

வீட்­டில் மனைவி, குழந்­தை­கள் உட்­பட யாரோ­டும் பேசு­வது இல்லை. பரி­ச­ளிப்பு விழா­வாக இருந்­தா­லும், அதில் கலந்து கொள்­வ­தில்லை. மேடை­யில் பாட­நே­ரிட்­டால் சாமி பாட்­டைத்­த­விர சினி­மாப்­பாட்­டுக்­க­ளைப் பாடு­வ­தில்லை. சைவச்­சாப்­பாடு சாமி­யார்­க­ளுக்கு உண­வ­ளித்­தல், அடிக்­கடி கோயில் குளங்­க­ளுக்­குச் சென்று வரு­தல் என்று தன்னை ஒரு சாமி­யார் போல மாற்­றிக் கொண்­டி­ருக்­கி­றார். தமிழ் பட­வு­ல­கில் குறு­கி­ய­கா­லத்­தில் வளர்ந்து புகழ் பெற்ற இளை­ய­ரா­ஜா­வின் இந்த மாற்­றம் அவ­ரு­டைய குடும்­பத்­தார், நண்­பர்­க­ளுக்கு மட்­டுமல்ல, பட­வு­ல­கைச் சேர்ந்த பல­ருக்கு மிகுந்த மன­வ­ருத்­தத்தை ஏற்­ப­டுத்­தி­யது. ரசி­கர்­க­ளின் மனம் வேத­னைப்­ப­டும் அள­வுக்கு இசை உல­கில் இருந்து விலகி ஆன்­மிக உல­குக்­குச் சென்று விடப்­போ­வ­தாக அவ­ருக்கு நெருக்­க­மான நண்­பர்­கள் கூறு­கி­றார்­கள்."1989ம் ஆண்­டில் வெளி­வந்த இன்­னொரு செய்தி இது. ‘சினி­மா­வு­ல­கில் பவுர்­ணமி வந்­தால் இளை­ய­ரா­ஜாவை இசை­ய­மைப்­பா­ள­ரா­கப் போட்டு படம் எடுப்­ப­வர்­க­ளுக்கு மனசு படக்­ப­டக்­கென்று அடித்­துக்­கொள்­ளும். கார­ணம், பவுர்­ண­மியை ஒட்டி ஒவ்­வொரு மாத­மும் மூன்று நாட்கள் இளை­ய­ராஜா இசை­ய­மைப்­ப­தில்லை.

பாடகி சுசீ­லா­வின் இசை பய­ணத்­தில், ஆகச்­சி­றந்த பாடல்­களை எல்­லாம் ஒன்று திரட்­டி­னால், கையில் ஒரு பூங்­கொத்­தாக நமக்­குக் கிடைக்­கும். அதில் பல பூக்­கள் இளை­ய­ராஜா மெட்­ட­மைத்­த­தாக இருக்­கும்!

தமிழ், தெலுங்கு என இரு மொழி­க­ளின் இனி­மை­யை­யும் சுசீ­லா­வின் குர­லில் வார்த்­துக் கொடுத்­தி­ருப்­பார் இளை­ய­ராஜா. அந்த பாடல்­கள் பதிவு செய்­யப்­பட்ட பசு­மை­யான நாட்­களை நினைவுகூர்­கி­றார் சுசீலா. ''பல இசைக் கலை­ஞர்­க­ளுக்­கா­கப் பாடி­யி­ருக்­கி­றேன். அவர்­க­ளு­டைய சந்­தோ­ஷமே அவர்­கள் சொல்­லும் விதத்­தில் நாம் பாடல்­க­ளைப் பாடிக்­கொ­டுப்­ப­தில்தான் இருக்­கி­றது. இளை­ய­ரா­ஜா­வுக்கு நான் பாடி­ய­தி­லேயே குறிப்­பா­கச் சொல்­ல­வேண்­டும் என்­றால், தெலுங்­கில் ‘சுவாதி முத்­யம்’ படத்­துக்­காக ‘லாலி லாலி…’ என்­றொரு தாலாட்­டுப் பாட­லைப் பாடி­யி­ருப்­பேன். அந்த படம் தமி­ழில் ‘சிப்­பிக்­குள் முத்து’ என வெளி­யா­னது. அதே பாடலை தமிழ் வார்த்­தை­க­ளில் தாலாட்டு உணர்வு பெரு­கக் கொண்டு வர­வேண்­டும். அப்­போ­து­தான் வைர­முத்து ‘வரம் தந்த சாமிக்கு…’ என்ற வரியை எழு­திக் கொடுத்­தார், ஒவ்­வொரு வரி­யின் இறு­தி­யி­லும் ‘லாலி’ என்ற வார்த்­தை­யை­யும் சேர்த்­தி­ருப்­பார். அந்த வரி­க­ளை­யெல்­லாம் பாடிக் கொடுத்­தது இன்­னும் பசு­மை­யாக நினை­வில் இருக்­கி­றது. எம்.எஸ்.வி., கே.வி.மகா­தே­வன் இரு­வ­ருக்­குமே நானும் டி.எம்.எஸ்­சும் நிறைய டூயட் பாடல்­க­ளைப் பாடிக்­கொ­டுத்­தி­ருக்­கி­றோம்.

நாங்­கள் இரு­வ­ருமே ராஜா­வின் இசை­யில் ‘ரிஷி­மூ­லம்’ படத்­திற்­காக இணைந்து ‘நேர­மிது… நேர­மிது…’ என்ற டூயட்­டைப் பாடி­னோம். அரு­மை­யான டியூன் அது. அடுத்து, எஸ்.பி. பால­சுப்­பிர­ம­ணி­யத்­து­டன் ‘தில் தில் தில் மன­தில்…’ பாடல். இப்­படி நிறைய பாடல்­க­ளைச் சொல்­லிக்­கொண்டே போக­லாம். எது பாடி­னால் சுசீலா குர­லில் நன்­றாக இருக்­கும் என்று ராஜா­வுக்­குத் தெரி­யும். அதைத் தேர்ந்­தெ­டுத்து எனக்கு கொடுத்­துள்­ளார். ‘ராசாத்தி மன­சிலே…’, ‘ராசாவே உன்ன…’ இப்­படி ‘ராஜா’ ‘ராஜா’ என்று வரி­க­ளையே கூட அவர் இசை­யில்­தான் பாடி­யி­ருக்­கி­றேன் (பாடிக் காண்­பித்து விட்டு சிரிக்­கி­றார்).

ராஜா­வுக்கு எம்.எஸ்.வி. என்­றால் உயிர். ராஜா அவ­ரது ‘மாலைப் பொழு­தின் மயக்­கத்­திலே…’ பாடலை அடிக்­க­டிப் பாடிக் காண்­பித்து சிலா­கிப்­பார். நான் முத­லில் சொன்­ன­து­போல, நம்­மைப் பாராட்­டு­கி­றார்­களோ இல்­லையோ, இசை­ய­மைப்­பா­ளர் எதிர்­பார்க்­கிற மாதிரி நாம் பாடு­வது போன்ற மகிழ்ச்­சிக்கு இணை வேறு எது­வுமே இல்லை. ஆயி­ரம் தாண்­டிய வாழ்த்­துக்­கள் ராஜா'' என்று மகிழ்ச்­சியை பகிர்ந்து கொண்­டார் சுசீலா.