சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 415 – எஸ்.கணேஷ்

22 அக்டோபர் 2019, 05:36 PM

நடி­கர்­கள் : நிவின் பாலி, நஸ்­ரியா நசீம், நாசர், பாபி சிம்ஹா, தம்பி ராமையா, ஜான் விஜய், ரமேஷ் திலக், மற்­றும் பலர். இசை : ராஜேஷ் முரு­கே­சன், ஒளிப்­ப­திவு : ஆனந்த் சி. சந்­தி­ரன், தயா­ரிப்பு : கோரல் விஸ்­வ­நா­தன், எடிட்­டிங், திரைக்­கதை, இயக்­கம் : அல்­போன்ஸ் புத்­தி­ரன்.

கம்ப்­யூட்­டர் இன்­ஜி­னி­ய­ராக பணி­பு­ரி­யும் வெற்­றி­யும் (நிவின் பாலி), வேணி­யும் (நஸ்­ரியா நசீம்) காத­லர்­கள். மகிழ்ச்­சி­யாக சென்று கொண்­டி­ருந்த வெற்­றி­யின் வாழ்க்கை வேலை போன­தும் தடம் மாறு­கி­றது. வேலை இல்­லா­த­தால் கந்­து­வட்­டிக்­கா­ர­னான வட்­டி­ ரா­ஜா­வி­டம் (பாபி சிம்ஹா) இருந்து வாங்­கிய கடனை திருப்­பிக் கொடுக்க முடி­ய­வில்லை. வேணி­யின் தந்­தை­யான சர­வ­ணர் (தம்பி ராமையா) வேலை இல்­லாத கார­ணத்­தைக் கூறி வெற்­றியை மாப்­பிள்­ளை­யாக்க மறுக்­கி­றார். வெற்­றியை திரு­ம­ணம் செய்­வ­தற்­காக வேணி வீட்டை விட்டு ஓடி­ வ­ரு­கி­றாள். வட்­டி­ரா­ஜா­வின் கடனை அடைப்­ப­தற்கு வெற்­றி­யின் நண்­பன் ஜான் பணம் தந்து உத­வு­கி­றான். வெற்­றியை சந்­திக்­கச் செல்­லும் வேணி­யின் செயினை திரு­டன் பறித்­துக் கொள்­கி­றான். வெற்­றி­யி­ட­மி­ருந்த பண­மும் திரு­டப்­ப­டு­கி­றது. மகளை கடத்­திச்­சென்­ற­தாக வெற்­றி­யின் மீது சர­வ­ணர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கட்­ட­குஞ்­சு­வி­டம் (ஜான் விஜய்) புகார் அளிக்­கி­றார். வேணி­யு­டன் போலீஸ் ஸ்டேஷ­னுக்கு 5 மணிக்­குள் வர­வேண்­டும் என்று வெற்­றிக்கு உத்­த­ர­வி­டு­கி­றார் கட்­ட­குஞ்சு. இதற்­கி­டை­யில் வெற்­றியை சந்­திக்­க­ வ­ரும் அவ­னது தங்கை கண­வன் தனக்கு தர­வேண்­டிய மீதி வர­தட்­சணை பணத்தை மாலை 5 மணிக்­குள் தரு­மாறு அறி­வு­றுத்­து­கி­றான். செல்­வாக்­கான மனி­த­ரான தண்­ட­பா­ணியின் (நாசர்) தம்பி மாணிக் (ஆனந்த் நாக்) வட்டி ராஜா­வி­டம் வாங்­கிய கடனை திருப்­பித் தரா­மல் இருக்­கி­றான். வழி­யில் சந்­திக்­கும் வேணியை மாணிக் பின்­தொ­டர, அவ­னது காதலி என்று நினைத்து வட்டி ராஜா­வின் ஆட்­கள் வேணியை கடத்­து­கின்­ற­னர்.

வட்­டி­ ரா­ஜா­வின் பணத்­தை­யும் 5 மணிக்­குள் திருப்­பித் தர­வேண்­டிய நெருக்­கடி நிலை­யில், மாணிக்­கின் செயினை பறிக்­கும் எண்­ணத்­து­டன் அவனை நெருங்­கு­கி­றான் வெற்றி. ஆனால் விபத்­தில் சிக்­கும் அவனை மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­கி­றான். தம்­பியை காப்­பாற்­றிய வெற்­றிக்கு வேலை தரு­வ­தாக உறு­தி­ய­ளிக்­கி­றார் தண்­ட­பாணி. மருத்­து­வ­ம­னை­யில் சந்­திக்­கும் கட்­ட­குஞ்சு வட்­டி ­ராஜா விபத்­தில் இறந்த அதிர்ச்சி தக­வலை அனை­வ­ரி­ட­மும் தெரி­விக்­கி­றான். பிளாஷ்­பேக்­கில் வேணி­யின் செயி­னை­யும், வெற்­றி­யின் பணத்­தை­யும் திரு­டிய திரு­டன் லைட் ஹவுஸ் (ரமேஷ் திலக்) தனது கூட்டா­ ளிக­ளோடு சேர்ந்து வட்­டி­ரா­ஜா­வின் காரை­யும் திரு­டு­கி­றான். காரின் பின்­னால் தனது ஆட்­க­ளோடு துரத்­தும் போது ஆட்டோ மோதி அதே இடத்­தில் இறக்­கி­றான் வட்­டி ­ராஜா. வட்­டி­ரா­ஜா­வி­டம் கடன் வாங்­கி­யி­ருந்த அந்த ஆட்­டோ­வின் டிரை­வ­ரும் ஆட்­டோ­வில் பய­ணிக்­கும் வெற்­றி­யின் மச்­சா­னும் அங்­கி­ருந்து தப்­பிக்­கி­றார்­கள்.

லைட் ஹவுஸ் மற்­றும் கூட்­டா­ளி­களை பார்க்­கும் வெற்றி அவர்­களை அடித்து துவைக்­கி­றான். அவர்­க­ளது காரி­லி­ருந்து திரு­டிய பண­மும், வேணி­யின் நகை­யும் கிடைக்­கின்றன. வட்­டி­ ரா­ஜா­வின் அந்த காரில் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கும் வேணி­யை­யும் மீட்­கி­றான். மச்­சா­னி­டம் பணத்தை கொடுத்­த­னுப்­பும் வெற்­றிக்கு துன்­ப­மான நேரத்­திற்கு பிறகு நிச்­ச­யம் இன்­ப­மான நேர­மும் அமை­யும் என்ற நம்­பிக்கை பிறக்­கி­றது.