காசு முக்­கி­ய­மில்லே! – காயத்ரி புவ­னேஷ்

பதிவு செய்த நாள் : 16 அக்டோபர் 2019

“என்னை பொறுத்­த­வரை, ஒரு பொண்ணா இருக்­கி­றது மிக பெரிய பலம். பத்து வரு­ஷமா ரொம்ப கஷ்­டப்­பட்­டி­ருக்­கேன். இன்­னைக்கு என்னை எல்­லா­ருக்­கும் தெரி­யு­துன்னா, அதுக்கு கார­ணம் என் உழைப்பு மட்­டுமே!” என்­கி­றார் காயத்ரி புவ­னேஷ்.

   ஜெயா டிவி­யில் ‘கில்­லாடி ராணி’ நிகழ்ச்­சியை தொகுத்து வழங்­கிக்­கொண்­டும், ‘சிவா மன­சுல சக்தி,’ ‘ஈர­மான ரோஜாவே’ ஆகிய இரண்டு சீரி­யல்­க­ளில் நடித்­துக் கொண்­டு­மி­ருக்­கும் அவரை சந்­தித்­த­போது...

   “விஷு­வல் கம்­யூ­னிக்­கே­ஷன் படிக்­கி­ற­துக்­காக எங்க ஊர்ல (மதுரை) இருந்து சென்­னைக்கு புறப்­பட்டு வந்­தேன். அதை படிச்­சுக்­கிட்டு இருக்­கும்­போதே சில தமிழ் சேனல்­கள்ல நிகழ்ச்சி தொகுப்­பா­ளரா இருந்­தேன். பட்­டப்­ப­டிப்பு முடிஞ்­ச­தும், ‘கனா காணும் காலங்­கள்’ சீரி­யல்ல நடிக்­கிற வாய்ப்பு கிடைச்­சிச்சு.  ஏறக்­கு­றைய 9 சேனல்­கள்ல நிகழ்ச்­சி­களை தொகுத்து வழங்­கி­யி­ருக்­கேன், 10 வரு­ஷத்­துக்­கும் அதி­கமா கார்ப்­ப­ரேட் நிகழ்ச்­சி­களை தொகுத்து வழங்­கிக்­கிட்டு இருக்­கேன். நிகழ்ச்­சியை தொகுத்து வழங்­கும்­போது நிறைய பேர் இப்­படி இப்­படி பண்­ண­லாம்னு சில ஐடி­யாக்­களை சொல்­வாங்க. அப்­பு­றம், ஒரு கால­கட்­டத்­திலே சொந்­தமா ஒரு ஈெவண்ட் மேனேஜ்­மெண்ட் ஆரம்­பிக்­க­லாம்னு தோணுச்சு. அப்­படி ‘லெட் அஸ் டான்ஸ் ஸ்டூடியோ’ (நாம் ஆட­லாம் ஸ்டூடியோ) அப்­ப­டீங்­கிற பேர்ல சென்னை அண்ணா நகர்ல ஒரு டான்ஸ் கம்­பெ­னியை ஆரம்­பிச்­சேன். ஈவெண்ட்­சுக்கு டான்ஸ் அதி­கமா தேவைப்­ப­டும்ங்­கி­ற­தால அப்­படி ஆரம்­பிச்­சேன். ஜும்பா டான்சை சென்­னை­யிலே அறி­மு­கப்­ப­டுத்­தி­ன­தும், ரெண்டு வய­சுல இருந்து குட்­டீ­சுக்கு ‘ஹிப் ஹாப்’ டான்ஸ் பயிற்சி கொடுக்­கி­ற­தும் எங்க நிறு­வ­னம்­தான். பொது­வாவே டான்­சுன்னா எனக்கு ரொம்ப பிடிக்­கும். என் மூஞ்­சி­யிலே நிஜ­மான சிரிப்பை டான்ஸ் ஆடும்­போ­து­தான் பார்க்க முடி­யும். நம்­மால முடி­யும் அப்­ப­டீங்­கிற எண்­ணம் எனக்கு அதி­க­மாவே இருந்­துச்சு. இதெல்­லாம் ஒரே நாள்ல என்­கிட்ட வரலே. டிவி நிகழ்ச்சி தொகுப்­பா­ளர்ன்னு ஆரம்­பிச்சு அப்­பு­றம் வீடியோ ஜாக்கி, சீரி­யல் நடிகை, ஈவெண்ட் மேனே­ஜர், டான்ஸ் ஸ்டூடியோ ஓனர்ன்னு ஸ்டெப் பை ஸ்டெப்பா முன்­னே­றி­னேன். என்­னோட பிசி­னஸ்ல எப்­படி கவ­னமா இருந்­தேனோ, அதே அள­வுக்கு என் மீடியா தொழி­லை­யும் விட்­டுட கூடா­துங்­கி­ற­திலே ரொம்ப உறு­தியா இருந்­தேன். இது எது­வுமே நான் திட்­டம் போட்டு வந்­தது கிடை­யாது. எனக்கு வந்த வாய்ப்பை புத்­தி­சா­லித்­த­னமா பயன்­ப­டுத்­திக்­கிட்­டேன். மேலும், இதுக்­கெல்­லாம் எங்க குடும்­பத்­தோட ஒத்­து­ழைப்­பும் இருந்­துச்சு. அது இல்­லாம, என்­னால எது­வுமே பண்­ணி­யி­ருக்க முடி­யாது. அது இருந்­த­தா­ல­தான் நம்­மால முடி­யா­தது ஒண்­ணு­மில்லே அப்­ப­டீங்­கிற நம்­பிக்­கையே எனக்கு வந்­துச்சு.

   நடிப்பை பொறுத்­த­வரை, நான் ரொம்ப ‘சூசி’­­­­யாத்­தான் இருக்­கேன். நடிப்­புக்கு ‘ஸ்கோப்’ இல்­லாத கேரக்­டர்­களை எவ்­வ­ளவு காசு கொடுத்­தா­லும் ஒத்­துக்க மாட்­டேன். எனக்கு நேம்­தான் முக்­கி­யம்.”