நான்கு கில்­லா­டி­கள்!

பதிவு செய்த நாள் : 16 அக்டோபர் 2019

வேந்­தர் டிவி­யில் முழுக்க முழுக்க இளை­ஞர்­களை மைய­மாக வைத்து உரு­வாக்­கப்­பட்­டுள்ள நிகழ்ச்சி ‘கில்­லாடி கேர்ள்ஸ்’. இந்த நிகழ்ச்­சி­யின் போட்­டி­யா­ளர்­க­ளாக நான்கு பெண்­கள் பங்­கேற்­கின்­ற­னர். அவர்­க­ளுக்கு சுவா­ரஸ்­ய­மான போட்­டி­கள் நடத்­தப்­ப­டும்.  இது சனி­தோ­றும் இரவு 10.30 மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கி­றது. அமு­த­வா­ணன் நடத்­து­கி­றார்.

 ‘தில் இருந்தா ரவுண்ட்ல நில்லு’  –  இந்த சுற்­றில் ஒரு வட்­டம் சுற்­றிக்­கொண்டு இருக்­கும். அதன் மேல் நின்­ற­படி 4 போட்­டி­யா­ளர்­க­ளும் நட­ன­மாட வேண்­டும். அதில் இருந்து தவறி விழு­ப­வர்­கள் இந்த சுற்­றில் இருந்து வெளி­யேற்­றப்­ப­டு­வார்­கள். அவர்­க­ளுக்­கான மார்க்­கு­க­ளும் குறை­யும்.

அடுத்து ஒரு பல­கை­யில் நான்கு நடி­கர்­க­ளின் புகைப்­ப­டங்­கள் ஒட்­டப்­பட்­டி­ருக்­கும். போட்­டி­யா­ளர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரின் இடுப்­போடு கயிறு கட்­டப்­பட்டு கயிற்­றின் மறு­முனை சற்று தள்ளி அங்­கி­ருக்­கும் ஒரு பயில்­வா­னின் இடுப்­பில் கட்­டப்­பட்­டி­ருக்­கும். போட்­டி­யா­ளர்­கள் தங்­கள் பலத்தை உப­யோ­கித்து கயிற்றை இழுத்­த­படி பல­கை­யில் ஒட்­டப்­பட்­டுள்ள நாய­கர்­க­ளுக்கு முத்­தம் கொடுக்க வேண்­டும். ஒவ்­வொ­ரு­வ­ரும் எத்­தனை முத்­தம் கொடுக்­கி­றார்­கள், யார் அதி­கப்­ப­டி­யான நாய­கர்­க­ளுக்கு முத்­தம் கொடுக்­கி­றார்­கள் என்­பதை வைத்து போட்­டி­யின் வெற்­றி­யா­ளர் தீர்­மா­னிக்­கப்­ப­டு­வார்.

‘முடிஞ்சா பதில் சொல்லு’ – ஒரு சிறிய தொட்­டி­யில் தண்­ணீ­ரில் மிதக்­கும் நெல்­லிக்­காயை, போட்­டி­யா­ளர் தனது வாயால் கவ்வி எடுக்­க­வேண்­டும். பின் தொகுப்­பா­ளர் சொல்­லும் ஒரு புகழ்­பெற்ற வச­னத்தை நெல்­லிக்­காயை வாயில் வைத்­த­ப­டியே சொல்­ல­வேண்­டும். இரண்­டை­யும் சரி­செய்­ப­வரே, வெற்­றி­யா­ளர்.