விஜய்­யின் பிரம்­மாண்­ட­மான கேம் ஷோ!

பதிவு செய்த நாள் : 16 அக்டோபர் 2019

40 அடி உய­ரத்­தில் வடி­வ­மைக்­கப்­பட்ட சுவர் போன்ற டிஜிட்­டல் போர்­டில் விளை­யா­டக்­கூ­டிய அறிவு மற்­றும் அதிர்ஷ்­டம் சார்ந்த விளை­யாட்டு நிகழ்ச்சி ‘தி வால்.’ இது விஜய் டிவி­யில் சனி மற்­றும் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­க­ளில் இரவு 9 மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கி­றது.

இரண்டு பேர் ஜோடி­யாக விளை­யாட வேண்­டும்.  இதன் பரி­சுத்­தொகை இது­வரை யாரும் கொடுத்­தி­ராத பிரம்­மாண்ட தொகை­யா­கும்.  இதில் அதிர்ஷ்­ட­மும் அறி­வும் கைகொ­டுத்­தால் இரண்­டரை கோடி ரூபாயை கூட வெல்­ல­லாம்.  ஒரே குடும்­பத்தை சார்ந்­த­வர்­கள், நண்­பர்­கள் இந்த போட்­டி­யில் ஜோடி­யாக கலந்­து­கொள்­ள­வேண்­டும்.

ஒரு பிரம்­மாண்ட  டிஜிட்­டல் போர்­டின் மேல் மட்­டத்­தில் ஏழு ஸ்லாட்­டு­கள் இருக்­கும். அதில் ஒன்றை தேர்ந்­தெ­டுத்து வெள்ளை, பச்சை, சிவப்பு பந்­து­களை ஆட்­டத்­திற்கு ஏற்­ற­வாறு அதி­லி­ருந்து செலுத்த வேண்­டும். அந்த பந்­து­கள் இடை­யி­டையே அமைக்­கப்­பட்­டுள்ள இட­று­களை தாண்டி கீழே வந்து விழும்.  கீழ் வரி­சை­யில் பல கூடை­கள் அமைக்­கப்­பட்டி­ ருக்­கும். அதில் பல­த­ரப்­பட்ட பரிசுத் தொகை­கள் ஒரு ரூபா­யி­லி­ருந்து இரண்­டரை கோடி ரூபாய் வரை பண­ம­திப்பு அமைக்­கப்­பட்­டி­ருக்­கும்.

மேலே­யி­ருந்து கீழே வந்து விழும் பந்து எந்த கூடை­யில் விழு­கி­றதோ, அதன்­படி பரி­சுத்­தொ­கை­கள் நிர்­ண­யிக்­கப்­ப­டும்.  இந்த போட்­டி­யில் மூன்று நிற பந்­து­கள் அளிக்­கப்­ப­டும்.  வெள்ளை பந்­து­கள், பச்சை பந்­து­கள் ஆகி­யவை பரி­சுத் தொகையை அதி­க­ரிக்­கும். சிவப்பு பந்­து­கள் வென்ற தொகை­யில் இருந்து பரி­சுத்­தொ­கையை கழித்­து­வி­டும்.  போட்­டி­யா­ளர்­கள் சொல்­லும் சரி­யான – தவ­றான பதில்­க­ளின் அடிப்­ப­டை­யில் இந்த பந்­து­க­ளின் நிறங்­கள் நிர்­ண­யிக்­கப்­ப­டும்.

 இவ்­வா­றாக போட்டி விறு­வி­றுப்­பாக நடை­பெ­றும். மேலும் முதல் இரண்டு ரவுண்­டு­க­ளில் மட்­டுமே இரண்டு போட்­டி­யா­ளர்­கள் இணைத்து விளை­யாட முடி­யும். மூன்­றா­வது சுற்­றி­லி­ருந்து இரு­வ­ரும் பிரிக்­கப்­ப­டு­வார்­கள். ஒரு­வர் போர்டு முன்பு நின்­று­கொண்­டும் மற்­றொ­ரு­வர் தனி­ய­றை­யில் இருந்­தும் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் பார்த்­துக்­கொள்­ளா­மல் விளை­ யாட்டை தொட­ர­வேண்­டும்.  

கடை­சி­யாக வரும் கட்­டத்­தில் ஒரு ஒப்­பந்த கடி­தம் தனி­ய­றை­யில் இருக்­கும் போட்­டி­யா­ள­ருக்கு கொடுக்­கப்­ப­டும். அவர் அதில் கையெ­ழுத்து போடு­கி­றாரா அல்­லது அதை கிழித்­துப்­போ­டு­கி­றாரா என்­பதை பொறுத்து தாங்­கள் சேர்த்த பரிசு தொகை­களை அவர்­கள் எடுத்­துப்­போக முடி­யும்.