டென்­ஷ­னி­லி­ருந்து விடு­தலை!

பதிவு செய்த நாள் : 16 அக்டோபர் 2019

கலை­ஞர் டிவி­யில் திங்­கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ‘தில்லு முல்லு’ புத்­தம் புதிய நகைச்­சுவை நிகழ்ச்சி ஒளி­ப­ரப்­பா­கி­றது.

கோபம், வெறுப்பு, ஆசை, துக்­கம், ஆத்­தி­ரம், இய­லாமை, சோம்­பே­றித்­த­னம் என பல குண­ந­லன்­கள் எப்­போது வேண்­டு­மா­னா­லும் நம்மை சூழ்ந்து கொள்­ளும். இவை அத்­த­னை­யை­யும் மறக்க குறு­நகை ஒன்றே போதும்.

 ஒரு­வரை கோபப்­ப­டுத்த சில நிமி­டங்­கள் போதும். ஆனால், ஒரு­வரை சிரிக்க வைப்­ப­தென்­பது எளி­தான காரி­யம் அல்ல. ‘வாய்­விட்­டுச் சிரித்­தால் நோய்­விட்­டுப் போகும்’ என்­பது சான்­றோர் மொழி. அந்த வகை­யில், இயந்­திர வாழ்க்­கை­யில் உலா­வும் ஒவ்­வொ­ரு­வ­ரை­யும் சிரிக்க வைப்­பதே இந்­நி­கழ்ச்­சி­யின் நோக்­க­மாக இருக்­கி­றது.

சிங்­கப்­பூர் தீபன், முல்லை, கோதண்­டம், கூல் சுரேஷ், அன்­ன­லட்­சுமி ஆகிய காமெடி பட்­டா­ளம் இடம்­பெற்­றுள்­ளது.