சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 414 – எஸ்.கணேஷ்

15 அக்டோபர் 2019, 06:14 PM

நடி­கர்­கள் : தனுஷ், பார்­வதி, ஜெகன், சலீம் குமார், விநா­ய­கன், உமா ரியாஸ், அப்­புக்­குட்டி, கிறிஸ்­டோ­பர் மின்னீ மற்­றும் பலர். இசை : ஏ.ஆர். ரஹ்­மான், ஒளிப்­ப­திவு : மார்க் கோனிக்ஸ், எடிட்­டிங் : விவேக் ஹர்­ஷன், தயா­ரிப்பு : ஆஸ்­கார் பிலிம்ஸ் வி. ரவிச்­சந்­தி­ரன், வச­னம் : ஜோ டி’கு­ருஸ், திரைக்­கதை,  இயக்­கம் : பரத் பாலா.

மீன­வ­னான மரி­யான் ஜோசப் (தனுஷ்) கிராம மக்­க­ளால் ‘நீரோடி’ என அழைக்­கப்­ப­டு­கி­றான். கட­லோடு கொண்ட பந்­தத்­தி­னால் தன்னை ’கடல் ராசா’ என கூறிக்­கொள்­ப­வன். அதே ஊரைச் சேர்ந்த பனி­ம­லர் (பார்­வதி) மரி­யான் மீது கொண்ட காத­லால் அவ­னையே சுற்றி வரு­கி­றாள். பனி­ம­ல­ரி­ட­மி­ருந்து வில­கியே இருக்­கும் மரி­யா­னும் அவள் காதலை புரிந்து ஏற்­றுக்­கொள்­கி­றான். கட­லோ­டும் நண்­பர்­க­ளோ­டும் மகிழ்ச்­சி­யாக வாழ்ந்து வரும் மரி­யா­னின் வாழ்க்­கை­யில் திருப்­பம் ஏற்­ப­டு­கி­றது. பனி­ம­ல­ரோடு சேர இருக்­கும் நேரத்­தில் அவ­ளது தந்­தைக்கு (சலீம் குமார்) கடன் கொடுத்த வட்­டிக்­கா­ர­னின் (விநா­ய­கன்) கடனை திருப்­பிச்­செ­லுத்த வேண்­டிய கட்­டா­யம் மரி­யா­னுக்கு ஏற்­ப­டு­கி­றது.

கட­லைப் பிரி­யாத மரி­யான் காத­லியை காப்­பாற்ற பணம் சம்­பா­திப்­ப­தற்­காக சூடா­னுக்கு ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் வேலைக்கு செல்­கி­றான். அங்கு சாமி­யோடு (ஜெகன்) நட்பு ஏற்­பட, அங்கு பணி­பு­ரி­யும் நான்கு வரு­டங்­க­ளும் அவனே துணை­யா­கி­றான். அவ­னது ஒப்­பந்­தம் முடிந்து காத­லியை பார்க்க ஆவ­லோடு தயா­ரா­கி­றான். கடைசி நேரத்­தில் மரி­யான் உட்­பட மூன்று தொழி­லா­ளர்­கள் சூடான் தீவி­ர­வா­தி­க­ளால் கடத்­தப்­ப­டு­கி­றார்­கள். தொழி­லா­ளர்­களை விடு­விக்க பணம் கேட்­கும் தீவி­ர­வா­தி­க­ளின் தலை­வன் (கிறிஸ்­டோ­பர் மின்னீ) ஒரு தொழி­லா­ளியை கொன்று விடு­கி­றான்.

இவர்­க­ளது நிறு­வ­னம், அர­சாங்­கம் என அனை­வ­ரது பேச்­சு­வார்த்­தை­யும் தொடர, இரு­பத்­தோரு நாட்­கள் கழிந்த நிலை­யில் மரி­யா­னும், சாமி­யும் அங்­கி­ருந்து தப்­பிக்­கி­றார்­கள். தப்­பிக்­கும் வழி­யில் பிரிந்து விடும் நண்­பன் சாமி கொல்­லப்­பட, மரி­யான் பாலை­வ­னத்­தில் மாட்­டிக் கொள்­கி­றான். பசி, தாகம், வெப்­பம், சிறுத்­தை­கள் என அனைத்து தடை­க­ளை­யும் தாண்டி காத­லியை சந்­திக்­கும் ஆசை­யில் மரி­யான் தனது பய­ணத்தை தொடர்­கி­றான். இறு­தி­யில் கடற்­க­ரையை பார்த்து மகி­ழும் நேரத்­தில் மறு­ப­டி­யும் தீவி­ர­வா­தி­யி­டம் மாட்­டு­கி­றான். கட­லில் தீவி­ர­வா­தியை கொல்­ப­வன் மயங்க, அங்­கி­ருக்­கும் மீன­வர்­க­ளால் காப்­பாற்­றப்­ப­டு­கி­றான். தனது ஊருக்கு வந்து சேரும் மரி­யான், அங்கு காத்­தி­ருக்­கும் காத­லி­யோடு சேர்ந்து மகிழ்­கி­றான்.