நிலவுக்கு ராக்கெட் அனுப்புவதால் இளைஞர்களின் வயிறு நிறையாது - ராகுல்காந்தி பேச்சு

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2019 20:01

மும்பை

நிலவுக்கு ராக்கெட் அனுப்புவதால் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அது உணவளிக்காது என ராகுல்காந்தி மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தில் இன்று பேசியுள்ளார்.

88 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கும், 90 உறுப்பினர்களை கொண்ட அரியானா சட்டசபைக்கும் அக்டோபர் 21-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

24-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடை பெற உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இன்று ஒரே நாளில் தேர்தல் பிரசாரம் செய்தனர்.

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி மகாராஷ்டிரா மாநில லத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

நிலவுக்கு ராக்கெட் அனுப்புவதால் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அது உணவளிக்காது, இளைஞர்களின் வயிறு நிறையாது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் காங்கிரஸ் ஆட்சியில் நிறுவப்பட்டது.

இஸ்ரோவில் இருந்து ராக்கெட்டுகளை அனுப்ப பல ஆண்டுகள் தேவைப்பட்டன.

இஸ்ரோவின் நன்மைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார் பிரதமர் மோடி.

இவ்வாறு, ராகுல்காந்தி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசினார்.