சீன அதிபருடனான சந்திப்பை திறமையாக கையாள பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் – கமல் பேட்டி

பதிவு செய்த நாள் : 10 அக்டோபர் 2019 17:21

சென்னை,

சீன அதிபருடனான சந்திப்பை திறமையாக கையாள பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

சென்னை - ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில், தலைவர் கமல்ஹாசனை பேட்மின்டன் வீராங்கனை  பி.வி.சிந்து இன்று திடீரென சந்தித்தார்.

பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

கமல்ஹாசனுடன் சந்திப்பு குறித்து பி.வி.சிந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். கமல் ஒரு நல்ல நடிகர், நல்ல அரசியல் தலைவர் என்பதால் அவரை சந்தித்தேன் என்றார்.

பின்னர், கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சீன அதிபர் தமிழ்நாட்டிற்கு வருவது வரவேற்கத்தக்கது.

60 ஆண்டுகளுக்கு பிறகு சீன அதிபர் தமிழ்நாட்டிற்கு வருவது மகிழ்ச்சி. சீன அதிபரின் வருகையை வெற்றி விழாவாக மாற்றுவது நம் கடமை.

பேனர் வைப்பதை நான் எதிர்க்கவில்லை. தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர்.

சட்டப்பூர்வ அனுமதி பெற்ற இடங்களில் பேனர் வைக்கலாம்.

அனைத்து நல்ல காரியங்களும் அரசால் மட்டுமே நடைபெறுவது இல்லை. சீன அதிபருடனான சந்திப்பை திறமையாக கையாள பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள்.

இவ்வாறு, கமல்ஹாசன் செய்தியாளர்கள் கூறினார்.