எல்லை தாண்டி மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் சிங்கள கடற்படையால் கைது

பதிவு செய்த நாள் : 10 அக்டோபர் 2019 13:12

ராமேஸ்வரம்,

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை கைது செய்து, அவர்களது 2 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைப் பிடித்துச் சென்ற சம்பவம் மீனவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 7 தமிழக மீனவர்கள் 2 விசைப் படகுகளில் கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்கள் 7 பேரையும் கைது செய்து, அவர்களது 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 7 பேரையும் இலங்கை காங்கேசன் துறைமுக கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று  இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.