பள்ளிகளுக்கு 3 நாள் தீபாவளி விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 09 அக்டோபர் 2019 18:19

சென்னை,

தீபாவளிக்கு முந்தைய நாள் சனிக்கிழமை என்பதால், அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று சர்ச்சைகள் எழுந்த நிலையில், அதாவது, தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 27ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனால் 26, 27, 28 ஆகிய 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கள் கிழமை அன்று அளிக்கப்பட்டுள்ள விடுமுறை பின்னர் ஏதாவது ஒரு சனிக்கிழமையில் வேலை நாளாக பள்ளிகள் செயல்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளி கால அட்டவணைப்படி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 26ம் தேதி சனிக்கிழமை 5வது வாரம் என்பதால் அன்று வழக்கம் போல பள்ளி அலுவல் நாளாக இருக்கும் என பள்ளி அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
26ஆம் தேதி அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தால், தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்வோருக்கு பயனளிக்கும் என்று கோரிக்கைகள் முன் வைக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு

அக்டோபர் 26ம் தேதி (சனிக்கிழமை) மற்றும் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

அக்டோபர் 28ம் தேதி (திங்கட்கிழமை) விடுமுறை தேவைப்படும் மாவட்டங்கள் உள்ளூர் விடுமுறை அறிவித்துவிட்டு, வேறொரு சனிக்கிழமையில் பள்ளி வேலை நாளாக அறிவிக்கலாம் என்றும், தேவைப்படும் பள்ளிகளும் விடுமுறை அறிவிக்கலாம் என்றும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அனுமதி பெற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.