பாரம்பரிய நகைகள்தான் அழகு! – குட்டிக்கண்ணன்

பதிவு செய்த நாள் : 10 அக்டோபர் 2019

பண்­டிகை காலங்­க­ளில் வித­வி­த­மான பேஷன்­க­ளில் டிரஸ் வந்­தா­லும் எத்­னிக் உடைக்கு எது­வும் இடா­க்காது. எத்­னிக் என்­பது நமது பாரம்­ப­ரிய உடையை குறிக்­கும் ஆங்­கில சொல்­லா­கும். நமது வெளிப்­புற உடல் தோற்­றம் அத்­த­னை­யை­யும் அணி­க­லன்­க­ளால் அலங்­க­ரிக்­கும் சிறப்பு எத்­னிக் உடை­க­ளில் மட்­டுமே சாத்­தி­யம். குறிப்­பாக பாரம்­ப­ரிய உடை­யான பெண்­கள் பட்டு புடவை அணி­யும் போது அதற்­கு­ரிய அணி­க­லன்­களை அணி­ந­தால் அழ­காக காட்சி அளிக்க முடி­யும். அதனை பற்றி முழுமை­யாக விவ­ரிக்­கி­றார் பேஷன் டிசை­னர் தபு.

“என்­னு­டைய வாட்­ரோப் முழு­வ­தும் டசன் கணக்­கில் ஆடை­களை வைத்­தி­ருக்­கி­றேன் என்று சொல்­லிக் கொள்­வ­தில் பெரு­மை­யில்லை. அதற்கு ஏற்ற அணி­க­லன்­களை அணிந்­தால்­தான் அந்த ஆடை­க­ளுக்­குச் சிறப்பு. உட­லுக்கு ஆடை எப்­படி முக்­கி­யமோ அதே­போல் ஆடைக்கு அணி­க­லன்­கள் அவ­சி­யம். அவை­தான் ஆடைக்கு முழுமை சேர்­கின்­றன. குறிப்­பாக வெஸ்­டர்ன் ஆடை­க­ளை­விட எத்­னிக் ஆடை­க­ளுக்கு ஏற்ற அணி­க­லன்­களை தேர்ந்­தெ­டுப்­ப­து­தான் சுவா­ரஸ்­ய­மா­னது. நமது வெளிப்­புற உடல் தோற்­றம் அத்­த­னை­யை­யும் அணி­க­லன்­க­ளால் அலங்­க­ரிக்­கும் சிறப்பு எத்­னிக் உடை­க­ளில் மட்­டுமே சாத்­தி­யம். எனவே எத்­னிக் ஆடை­க­ளுக்கு என்­னென்ன அணி­க­லன்­கள் பொருத்­த­மாக இருக்­கும் என்­பது தெரி­யுமா?

சோக்­கர் நெக்­லஸ் : எத்­னிக் ஆடை­கள் என்­றாலே சோக்­கர் நெக்­லெ­ஸைத் தவிர்க்க முடி­யாது. ஆனால் அவை எத்­னிக் ஆடை­க­ளுக்கு ஏற்ப எவ்­வாறு அணி­வது என்­ப­து­தான் பல­ருக்­கும் தெரி­வது இல்லை. சோக்­கர் நெக்­லஸ் அணி­யும் போது டீப் நெக் பிள­வுஸ் என்று சொல்­லப்­ப­டும் முன் பக்­கக் கழுத்து டிசைன் சற்று இறக்­க­மாக இருக்க வேண்­டும். அப்­போ­து­தான் பொருத்­த­மாக இருக்­கும். அதே­போல் ஸ்ட்ராப் லைன் இல்­லாத பிள­வுஸ் டிசைன்­க­ளுக்­குக் கூடப் பொருத்­த­மாக இருக்­கும். வெளி­நா­டு­க­ளில் கூட தங்­க­ளின் எத்­னிக் விய­ரான கவுனை ஸ்ட்ராப் இன்றி அணி­யும் போது நிச்­ச­யம் கழுத்து ஒட்­டிய சோக்­க­ரைத்­தான் அணி­வார்­கள். நீங்­கள் கூடப் பார்த்­தி­ருக்­கக் கூடும். எனவே லெஹங்கா , எத்­னிக் சாரி போன்ற ஆடை­களை அணி­யும்­போது டீப் நெக் பிள­வு­சிர்க்கு சோக்­கர் நெக்­லஸை அணி­யுங்­கள்.

முத்து நகை­கள் : புட­வை­க­ளுக்கு முத்து நகை­கள் சரி­யான சாய்ஸ். அவை உங்­கள் அழகை பிர­கா­சிக்­கச் செய்­யும். தற்­போது டைமண்ட் நகை­க­ளோடு முத்­துக் கற்­க­ளும் பொறித்து வடி­வ­மைக்­கின்­ற­னர். அந்த இரு கற்­க­ளின் கல­வை­யும் பிரம்­மாண்ட வேலைப்­பா­டாக தோற்­ற­ம­ளிக்­கின்­றன. அவை நிச்­ச­யம் உங்­கள் எத்­னிக் உடை­க­ளுக்கு அட்­ட­கா­ச­மாக இருக்­கும். தற்­போ­தைய எத்­னிக் காம்­பி­னே­ஷன் டிரெண்ட் இது­தான். அதே­போல் குந்­தன் நகை­க­ளும் அணி­ய­லாம். இது வட மாநில பாரம்­ப­ரிய நகை­யா­னா­லும் இங்கு பர­வ­லா­கிக் கொண்­டி­ருக்­கி­றது. பல திரு­மண நிகழ்­சி­க­ளி­லும் காணக் கூடும்.

தலைக்கு நெத்­திச்­சூடி : முன்­பெல்­லாம் நெத்­திச்­சூடி அணி­யும் பழக்­கம் அதி­க­மாக இருந்­தது. கால­மாற்­றத்­தால் திரு­ம­ணத்­திற்கு மட்­டுமே அணி­யப்­ப­டும் நகை­யாக மாறி­விட்­டது. இல்­லை­யெ­னில் குழந்தை பரு­வம் வரை­தான் இந்த நெத்­திச்­சூடி, என்­கிற அள­வில்­தான் பார்க்­கப்­ப­டு­கி­றது. உண்­மை­யி­லேயே எத்­னிக் உடை­க­ளுக்கு இந்த நெத்­திச்­சூ­டியை அணிந்து பாருங்­கள். உங்­களை அறி­யா­ம­லேயே முகத்­தில் வித்­யா­சத்தை உண­ரு­வீர்­கள். அதிக வேலை­பா­டு­க­ளின்றி ஆடைக்கு ஏற்ப மினி­ம­லான டிசைன்­க­ளில் அணி­யுங்­கள்.

வளை­யல் : கைக்­க­டி­கா­ரம் அணி­வதை தவிர்த்து இரு கைக­ளி­லும் வளை­யல் அணி­யுங்­கள். கை நிறைய வளை­யல்­கள் அது­வும் மெட்­டல் அல்­லது கண்­ணாடி வளை­யல் அணி­யுங்­கள். அவை­தான் உங்­கள் அசை­வு­க­ளுக்­கெல்­லாம் சத்­தம் கொடுக்­கும்.

இடுப்­பில் செயின் : பலர் ஒட்­டி­யா­னம் அணி­வ­தற்­குத் தயக்­கப்­ப­டு­வார்­கள். அவர்­க­ளுக்கு மாற்று இந்த இடுப்­புச் செயின் தான். முன்பு சாவிக் கொத்தை இடுப்­பில் சொருகி வைப்­பார்­கள். பின் அதை சவு­க­ரி­ய­மாக மாடிக் கொள்ள வந்­த­து­தான் இந்த செயின் கொத்து. இன்று இது பேஷ­னிற்­கா­கப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. புடவை மற்­றும் லெஹங்கா அணி­யும்­போது இதை இடுப்­பில் சொரு­கிக் கொண்டு நடந்­தால் கர்­வம் தரு­வ­தாக இருக்­கும்.

தலைக்­கும் அணி­க­லன் : தலை­யில் கொண்­டைப் போட்­டுக் கொண்டு அதற்கு அம்­ச­மான ஜோரா பின் பொருத்­தி­னால் கண் அச­ரா­மல் ரசிக்­க­லாம். அத்­தனை நேர்த்­தி­யாக இருக்­கும். அது­மட்­டு­மன்றி உங்­க­ளுக்கு ராய­லான தோற்­றத்தை ஏற்­ப­டுத்­தும். இப்­போது வகை­வ­கை­யான டிசைன்­க­ளில் ஆன்­லை­னி­லேயே கிடைக்­கின்­றன. எனவே அலைந்து திரி­யா­மல் அமர்ந்த இடத்­தில் ஆர்­டர் செய்­ய­லாம்.

காது­ம­டல் கட்­டா­யம் : என்­னது ஜிமிக்கி இல்­லா­மல் எத்­னிக் வியர்ரா..? இந்த அணி­க­லன் தான் அன்­றும் இன்­றும் என்­றும் பெண்­க­ளின் ஆல்­டைம் பேவ­ரட். தென் இந்­தி­யப் பெண்­கள் மட்­டு­மல்­லாது வட இந்­தி­யா­வில் கூட ஜிமிக்­கி­தான் பிரிக்க முடிய எத்­னிக் அணி­க­லன். இவை தற்­போது வகை வகை­யாக பல டிசைன்­க­ளில் குவிந்து கிடைக்­கின்­றன. அவற்­றில் உங்­க­ளுக்கு விருப்­ப­மா­னதை தேர்வு செய்து அணிந்து கொண்­டா­டுங்­கள்.

மூக்­குத்தி முக்­கி­யம் : தென் இந்­தி­யப் பெண்­கள் மட்­டு­மன்றி வட இந்­தி­யப் பெண்­கள் வரை கொள்ளை அழகை நொடி­யில் பெற இந்த மூக்­குத்­தி­தான் உத­வு­கி­றது. இது இல்­லா­மல் முழு­மை­யான எத்­னிக் தோற்­றத்தை அடைந்­து­விட முடி­யாது. மூக்­குத்தி அணி­யப் பிடிக்­காது என்று கூறு­வோர் கூட ஒரு­முறை அணிந்து பார்த்­தால் கழட்­டவே மனம் இருக்­காது. அப்­ப­டி­யான ஈர்ப்பு இந்த நகை­யில் இருக்­கி­றது. இது­வரை முயற்சி செய்­ய­வில்­லை­யெ­னில் அடுத்­த­முறை எத்­னிக் வியர் அணி­யும்­போது மூக்­குத்­தி­யை­யும் அணிந்து பாருங்­கள். அன்­றைய நாள் பேஸ்­புக்­கில் ஒரு செல்பி நிச்­ச­யம்.