60 ஆண்டு வரலாற்றை மாற்றிய கவிதா! – சுமதி

பதிவு செய்த நாள் : 10 அக்டோபர் 2019

சென்னை ஐஐ­டி­யின் 60 ஆண்டு கால வர­லாற்­றில் முதல் முறை­யாக கவிதா கோபால் என்ற மாணவி ஒரு­வர் ஜனா­தி­பதி விருது உட்­பட மூன்று உய­ரிய விரு­து­க­ளைப் பெற்று புதிய சாதனை புரிந்­துள்­ளார்.

உல­கின் தலைச் சிறந்த நிறு­வ­னங்­க­ளுக்கு பல நல்ல ஊழி­யர்­களை, தலை­வர்­க­ளைக் கொடுத்த பெருமை சென்­னை­யில் உள்ள இந்­திய தொழில்­நுட்­பக் கல்வி நிறு­வ­ன­மான ஐஐ­டிக்கு உண்டு. அதன் 56வது பட்­ட­ம­ளிப்பு விழா நடை­பெற்­றது. இந்த விழா­வில் பிர­த­மர் நரேந்­தி­ர­மோடி பங்­கேற்று, மாணவ, மாண­வி­க­ளுக்கு பட்­டம் வழங்­கி­னார்.

இதில், 2,140 பேருக்கு, 2,585 பட்­டங்­கள் வழங்­கப்­பட்­டன. 10க்கும் மேற்­பட்­ட­வர்­கள், தங்­கப் பதக்­கம் பெற்­ற­னர். அவர்­க­ளில் கவிதா கோபால் என்ற 21 வயது பி.டெக்., மாணவி ஜனா­தி­பதி விருது உட்­பட மூன்று விரு­து­க­ளைப் பெற்­றுள்­ளார். இதன் மூலம் கடந்த 60 ஆண்டு கால சென்னை ஐஐடி வர­லாற்­றில் புதிய அத்­தி­யா­யம் படைத்­துள்­ளார் கவிதா. ஏனென்­றால் இது­வரை இந்த விருதை மாண­வி­கள் யாரும் பெற்­ற­தில்லை. தொடர்ந்து மாண­வர்­கள் மட்­டுமே பெற்று வந்­த­னர். இந்த விரு­தோடு விஸ்­வேஸ்­வ­ரய்யா விருது மற்­றும் ரவிச்­சந்­தி­ரன் விரு­தை­யும் கவிதா பெற்­றுள்­ளார். மூன்று விரு­து­க­ளைப் பெற்ற அந்த மாண­விக்கு முதல் ஆளாக பதக்­கம் அணி­வித்து, பாராட்டி பட்­ட­ம­ளிப்பு விழா­வைத் துவக்கி வைத்­தார் பிர­த­மர் மோடி. படிப்­பில் சிறந்து விளங்­கி­ய­தற்­காக கவி­தா­விற்கு ஜனா­தி­பதி விருது வழங்கி கவு­ர­விக்­கப்­பட்­டது. 9.95 என்ற சிஜி­பிஏ பெற்­றி­ருந்­த­தற்­காக அவ­ருக்கு மற்ற இரண்டு விரு­து­கள் தரப்­பட்­டது. கடந்த கல்­வி­யாண்­டில் அவர் தனது பி.டெக் படிப்பை முடித்­தார். தற்­போது கூகுள் நிறு­வ­னத்­தில் நல்ல சம்­ப­ளத்­தில் மென்­பொ­ருள் பொறி­யா­ள­ராக பெங்­க­ளூ­ரு­வில் பணி புரிந்து வரு­கி­றார்.

“இந்த விரு­து­க­ளைப் பெற்­ற­தில் நான் மிக­வும் மகிழ்ச்­சி­ய­டை­கி­றேன். ஐஐடி மெட்­ராசில் பட்­டம் பெறு­வது என்ற என் கனவு தற்­போது நிஜ­மாகி விட்­டது. எனது எதிர்­கா­லத்­திற்­கான சில திட்­டங்­களை நான் வைத்­தி­ருக்­கி­றேன். குறிப்­பாக கோடிங் முறை­யில் சில திட்­டங்­கள் உள்­ளது,” என்­றார் அனு­பு­ரம் அணு­சக்தி மத்­திய பள்­ளி­யில் பத்­தாம் வகுப்பு வரை படித்த கவிதா, அத­னைத் தொடர்ந்து கல்­பாக்­கம் கேந்­தி­ரிய வித்­யா­லயா பள்­ளி­யில் பதி­னொன்­றாம் வகுப்பு சேர்ந்­தார். அங்கு கணினி அறி­வி­யல் பாடத்தை ஒரு பகு­தி­யாக படித்­துள்­ளார். அத­னைத் தொடர்ந்து கடந்த 2015ம் ஆண்டு சென்னை ஐஐ­டி­யில் பி.டெக் சேர்ந்­தார். அங்­கும் தனது கணினி அறிவை நிரூ­பித்த கவிதா, பல்­வேறு போட்­டி­க­ளில் கலந்து கொண்டு பரி­சு­க­ளை­யும் தட்­டிச் சென்­றுள்­ளார்.

சென்னை ஐஐ­டி­யில் தான், சி++, ஜாவா மற்­றும் பைதான் உள்­ளிட்ட மென்­பொ­ருள்­க­ளைக் கற்­றுத் தேர்ந்து, நிபு­ண­ர“­எ­னது பள்ளி மற்­றும் கல்­லூ­ரிக் காலங்­க­ளில் படிப்­பைப் போலவே மற்ற பொழுது போக்­கு­க­ளுக்­கும் சரி­யாக நேரத்தை திட்­ட­மிட்டு செல­வ­ழிப்­பேன். அத­னா­லேயே கூடைப்­பந்து விளை­யாட்­டி­லும் கவ­னம் செலுத்த முடிந்­தது. தேசிய விளை­யாட்டு கழ­கத்­தின் ஒரு பகு­தி­யாக நான் கூடைப்­பந்து போட்­டி­க­ளில் கலந்து கொண்­டேன்,” என்­கி­றார் கவிதா.

பொது­வாக ஸ்டெம் எனப்­ப­டும் அறி­வி­யல், தொழில்­நுட்­பம், பொறி­யி­யல் மற்­றும் கணி­தத் துறை­யில் பெண்­க­ளின் பங்­க­ளிப்பு குறைவு தான் என்ற கருத்து பர­வ­லாக உள்­ளது. கவி­தா­வின் ஐஐடி வகுப்­பில் கூட 60 மாண­வர்­க­ளும், பத்து மாண­வி­க­ளும் தான் இருந்­துள்­ள­னர். இதி­லி­ருந்தே இத்­த­கைய துறை­க­ளில் ஆண், பெண் பாலின விகி­தம் எப்­படி உள்­ளது என்­பதை நம்­மால் அறிந்து கொள்ள முடி­யும்.

சமூ­கம், பாலின பாகு­பாடு, கணி­தம் மற்­றும் பொறி­யி­யல் துறை­யின் சூழல் போன்­ற­வையே இந்­தத் துறை­யில் பெண்­கள் அதி­கம் முன்­வ­ரா­த­தற்கு முக்­கி­யக் கார­ண­மா­கக் கரு­தப்­ப­டு­கி­றது. ஆனால் சமீ­ப­கா­ல­மாக இத்­து­றை­க­ளில் மாண­வி­க­ளின் பங்­க­ளிப்­பும் மெல்ல மெல்ல அதி­க­ரித்து வரு­கி­றது. இனி வரும் காலங்­க­ளில் இந்த நிலை இன்­னும் மாறும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

எத்­த­கைய மாற்­றத்­திற்கு தான் ஒரு முன்­னோடி ஆகி இருக்­கி­றோம் என்­பதை கவிதா அறிந்­தி­ருக்­க­வில்லை. ஆனால், நிச்­ச­யம் இனி இத்­து­றை­யில் சாதிக்க விரும்­பும் பெண்­க­ளுக்கு கவிதா நல்ல ஒரு வழி­காட்­டி­யாக இருப்­பார் என்­ப­தில் சந்­தே­க­மே­யில்லை.

“கணினி துறை­யில் இனி நிறைய பெண் நிபு­ணர்­கள் உரு­வா­கு­வார்­கள் என்ற நம்­பிக்கை எனக்­கி­ருக்­கி­றது. ஏனென்­றால் எதிர்­கா­லத்­தில் கணினி துறை­யில் நல்ல எதிர்­கா­லம் இருக்­கி­றது. குறிப்­பாக ஆர்ட்­டி­பி­சி­யல் இண்­ட­லி­ஜெண்ட் ஆகிய துறை­யைச் சொல்­ல­லாம்,” என நம்­பிக்­கை­யு­டன் கூறு­கி­றார் கவிதா.