பிரீலான்சர் மூலம் லட்சங்கள் குவிக்கலாம்! – லட்சுமி

பதிவு செய்த நாள் : 10 அக்டோபர் 2019

காற்று மாசு..தூசி...பேருந்து  நெரி­சல் என்று பணிக்கு செல்­லும் அனை­வ­ரும் சந்­திக்­கும் பிரச்­னை­கள் ஏரா­ளம். இதில் பெரும்­பா­லும் அவஸ்­தைப் படு­கி­ற­வர்­கள் பெண்­கள்­தான்.

வீட்டு வேலை, குழந்­தை­களை பள்­ளிக்கு அனுப்­பு­வது, கண­வரை அலு­வ­ல­கத்­துக்கு அனுப்­பு­வது என்று எல்­லா­வற்­றை­யும் செய்­து­விட்டு கடை­சி­யாக சாப்­பி­டா­மல் கூட வேலைக்கு செல்­லும் பெண்­கள் இன்­றும் இருக்­கி­றார்­கள்.சிலர் பேருந்து, ரயில்­க­ளில் சாப்­பி­டு­வதை நாம் பார்த்து இருக்­கி­றோம். இவர்­க­ளுக்கு சம்­ப­ள­மும் அதி­க­மா­க­கி­டைத்து, வீட்­டி­லேயே வேலை செய்­யும் வாய்ப்பு அமைந்­தால் எப்படி இருக்­கும்?!

துல்­லிய ஆய்­வின்­படி  15 மில்­லி­யன் பேர் நம் நாட்­டில் பிரீலான்­சர்­க­ளாக  வீட்­டில் இருந்­த­ப­டியே பணி செய்து வரு­வாய் ஈட்­டு­கின்­ற­னர் என்­கி­றது. உல­கி­லேயே பிரீலேன்­சிங் வேலை வாய்ப்பு முறை­யில்   இந்­தியா இரண்­டாம் இடத்­தில் உள்­ளது என்று அந்த கணக்­கெ­டுப்பு சொல்­கி­றது.இதில் இரு பாலா­ரும் அடக்­கம் என்­றா­லும், பெண்­களே பிரீலான்­சிங் அதி­கம் செய்­கி­றார்­கள் என்று கணக்­கெ­டுப்பு சொல்­கி­றது.

வீட்­டில் இருந்து கொண்டே புராஜ்க்ட் அடிப்­ப­டை­யில் வெவ்­வேறு நிறு­வ­னங்­க­ளுக்கு பணி­பு­ரிந்து  அதிக வரு­வாய் ஈட்­டு­கின்­ற­னர் பல இளை­ஞர்­கள்.இளம்­பெண்­கள். அமெ­ரிக்கா, ஐரோப்பா மற்­றும் ஆஸ்­தி­ரே­லிய நிறு­வ­னங்­க­ளுக்கு பணி­பு­ரிந்து பலர் நல்ல வரு­மா­னம் பெறு­கின்­ற­னர் என்று ஆய்வு தெரி­விக்­கின்­றது.

திற­னுள்ள பிரீலான்­சர்­கள் இந்­தி­யா­வில் ஒரு நாளைக்கு 20 டாலர் அதா­வது குறைந்­தது 1000 ரூபாய் சம்­பா­திக்க முடி­யும். மும்­பை­யைச் சேர்ந்த நந்­திதா பால் வெற்­றி­க­ர­மான பிரீலான்­ச­ருக்கு ஒரு சிறந்த எடுத்­துக்­காட்டு.

டிசை­னர் ஆன நந்­திதா மும்­பை­யில் பிறந்து வளர்ந்­த­வர். அவ­ருக்கு கலை மற்­றும் டிசை­னிங்­கில் ஆர்­வம் அதி­கம். வெப் டிசை­ன­ரான அவர், இளம் வயது முதல் டிஜிட்­டல் டிசை­னிங் மற்­றும் பாரம்­ப­ரிய முறை­யில் டிசை­னிங் செய்து வரு­கி­றார். பல பிர­பல நிறு­வ­னங்­க­ளுக்கு விளம்­பர டிசை­னிங் செய்­துள்­ளார் நந்­திதா. நிறங்­க­ளென்­றால்­யா­ருக்­குத்­தான் பிடிக்­காது. நந்­தி­தா­விற்­கும் அப்­ப­டித்­தான். அத­னால் அதையே தன் பணி வாழ்க்கை ஆக்­கிக்­கொண்­டார். ஆரம்­பத்­தில் ஒரு தனி­யார் நிறு­வ­னத்­தில் வெப் டெவ­லப்­ப­ராக இருந்­தார். பின் 2012ல் தான் சுய­மாக பணி செய்ய முடி­வெ­டுத்து வெப்­சைட் டிசை­னிங், லேபில் டிசைன், லோகோ, பேக்­கே­ஜிங் டிசை­னிங் என்று தன் திற­மையை வெளிப்­ப­டுத்த பிரீலான்­சர் ஆனார்.

இன்று நந்­திதா 4-5 லட்­சம் ரூபாய் வரை வீட்­டில் பணி­பு­ரிந்­த­படி வரு­வாய் ஈட்­டு­கி­றார்.

“முழு­மை­யான பேசிய தொகை கையில் வரும்­வரை, நீங்­கள் முழு புராஜக்­டை­யும் ஒப்­ப­டைக்­கா­தீர்­கள்,” என்று ஆலோ­ச­னை­யும் தரு­கி­றார்.

இன்று சிறு தொழில் முனை­வர் முதல் பெரிய நிறு­வ­னங்­கள் வரை அனை­வ­ரும் தங்­க­ளுக்­கான வெப்­சைட்டை ரெடி செய்ய ஆர்­வ­மாக உள்­ள­னர். அத­னால் நந்­திதா போன்ற வெப் டிசைக்­னர்­க­ளுக்கு நல்ல டிமாண்ட் இருந்து கொண்டே இருக்­கி­றது. அதி­லும் தர­மான டிசை­னர்­க­ளுக்கு எப்­போ­தும் வர­வேற்­பும், அதிக வரு­வா­யும்  காத்­தி­ருக்­கி­றது.

டிசை­னிங் தவிர, இன்று சுயேட்­சை­யாக செய்ய பல பணி வாய்ப்­பு­கள் உள்­ளது. உல­க­மெங்­கும் பல பணி­க­ளுக்கு பிரீலான்­சிங் முறை­யில் சில வேலை­க­ளுக்கு ஆட்­களை நிய­மிக்­கின்­ற­னர்.

வெப் மற்­றும் மொபைல் டெவ­லப்­மெண்ட், டேட்டா எண்ட்ரி, இண்­டெர்­நெட் ரிசர்ச், அக்­க­வுண்­டிங், கன்­சல்­டன்சி பணி­கள், உள்­ள­டக்க எழுத்­தா­ளர்­கள் என்று பல்­வேறு பணி­களை வீட்­டில் இருந்­த­ப­டியே செய்­ய­மு­டி­யும். புராஜக்ட் அல்­லது அசைன்­மெண்ட் அடிப்­ப­டை­யில் வேலையை ஒப்­புக்­கொண்­டும், மாதம் அல்­லது வரு­டக்­க­ணக்­கில் ஒப்­புக்­கொண்­டும் பிரீலான்­சிங் செய்­ய­மு­டி­யும்.

நந்­திதா பால் பிரீலான்­சிங் மூலம் பெரிய வெற்­றியை அடைந்­தி­ருந்­தா­லும் அவர் அதற்­கான அடியை பய­மின்றி எடுத்து வைத்­ததே அவ­ரின் இந்த நிலைக்­குக் கார­ணம். அவ­ரைப்­போல பல­ரும் இன்று இந்­தி­யா­வில் தனிச்­சை­யாக லட்­சங்­க­ளில் வரு­மா­னம் ஈட்டி தங்­க­ளின் விருப்­பத்­து­றை­யில் கோலோச்சி உள்­ள­னர்.நீங்­க­ளும் முயற்­சிக்­க­லாமே!