கலைமாமணி வாமனன் எழுதும் ‘ஆங்கிலம் ரொம்ப ஈஸி’ 10–10–19

பதிவு செய்த நாள் : 10 அக்டோபர் 2019

‘I’ யைத் தொடரும் ‘am’

நடிக்­கும் வாய்­பு­கள் இழந்தாலோ என்­னவோ, ஒரு பெண் படிக்­கப்­போய் விட்­டார்.

இந்த விஷ­யத்தை அவர் ஆங்­கி­லத்­தில் இப்­ப­டித் தெரி­வித்­தார்: ‘I am not acting any more and is focussing on my studies’. ஐ ஆம் நாட் ஆக்­டிங் எனி மோர் அண்ட் இஸ் ஃபோகஸ்­ஸிங் ஆன் மை ஸ்டடீஸ்.

இந்த ஆங்­கில வாக்­கி­யத்­தில் எங்கு தவறு இருக்­கி­றது என்று உங்­க­ளுக்­குத் தெரி­கி­றதா?

முத­லில், சரி­யாக இருக்­கும் வாக்­கி­யத்­தின் முதல் பகு­தி­யைக் கவ­னி­யுங்­கள்.

ஐ ஆம் நாட் ஆக்­டிங் எனி மோர்…I am not acting any more.

ஐ = நான்

எனி மோர் = இனி­யும்

நாட் ஆக்­டிங் = நடிக்­க­வில்லை.

இனி­யும் நான் நடிக்­க­வில்லை

இந்­தப் பகு­தி­யைப் போல் அமைந்த இன்­னும் சில சரி­யான வாக்­கி­யங்­க­ளைப் பார்ப்­போம்…

‘ஐ ஆம் நாட் ரிஸை­டிங் இன் திஸ் ஹவுஸ் எனி மோர்’. I am not residing in this house any more. இந்த வீட்­டில் நான் இனி­யும் வசிக்­க­வில்லை.

‘ஐ ஆம் நாட் ஹிஸ் ஃபிரெண்டு எனி மோர்’.  I am not his friend any more. இனி­யும் நான் அவ­னு­டைய நண்­பன் இல்லை.

‘ஐ ஆம் நாட் லிவிங் இன் த யூ.எஸ். எனி மோர்’. I am not living in the US anymore இனி­யும் நான் யூ.எஸ்­ஸில் வாழந்­து­கொண்­டி­ருக்­க­வில்லை.

‘ஐ ஆம் நாட் அ ஸ்டூடென்ட் இன் திஸ் காலேஜ் எனி மோர்’. I am not a student in this college any more. இந்­தக் கல்­லூ­ரி­யில் இனி­யும் நான் ஒரு மாண­வன் இல்லை.

இவை­யெல்­லம் இல்லை என்று கூறும் வாக்­கி­யங்­கள். நேர் மறை வாக்­கி­யங்­கள் என்­றால் இப்­படி அமைந்­தி­ருக்­கும்?:

‘ஐ ஆம் ஆக்­டிங்…’ I am acting. நான் நடித்­துக்­கொண்­டி­ருக்­கி­றேன்.

‘ஐ ஆம் ரிஸை­டிங் இன் திஸ் ஹவுஸ்…’ I am residing in this house. நான் இந்த வீட்­டில் வசித்­துக்­கொண்­டி­ருக்­கி­றேன்.

‘ஐ ஆம் ஹிஸ் ஃபிரெண்டு’. I am his friend. நான் அவ­னு­டைய நண்­பன்.

‘ஐ ஆம் லிவிங் இன் த யூ.எஸ்’. I am living in the US. நான் யூ.எஸ்­ஸில் வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கி­றேன்.

‘ஐ ஆம் அ ஸ்டூடென்ட் இன் திஸ் காலேஜ்’. I am a student in this college. நான் இந்­தக் கல்­லூ­ரி­யில் ஒரு மாண­வன்.

முதல் வாக்­கி­யத்­திற்கு வரு­வோம்: I am not acting any more and is focussing on my studies. ஐ ஆம் நாட் ஆக்­டிங் எனி மோர் அண்ட் இஸ் ஃபோகஸ்­ஸிங் ஆன் மை ஸ்டடீஸ்.

இதில் இரண்டு செய்­தி­கள் உள்­ளன.

நான் இனி­யும் நடிக்­க­வில்லை என்­பது ஒன்று.

நான் படிப்­பின் மீது கவ­னம் செலுத்­திக்­கொண்­டி­ருக்­கி­றேன் என்­பது இன்­னொன்று.

அண்ட் என்ற இணைப்­புச் சொல் இந்த இரண்டு வாக்­கி­யங்­க­ளை­யும் ஒரு வாக்­கி­ய­மாக இணைக்­கி­றது.

நான் மீண்­டும் மீண்­டும் கூறி­யி­ருக்­கிற சூத்­தி­ரம் என்ன? ‘ஐ’ என்று வரும் போது, நிகழ் கால வாக்­கி­யத்­தில் ‘ஆம்’ (am) தான் அடுத்­தாக வரும்.

இதன் படியே, ‘ஐ ஆம் நாட் ஆக்­டிங் எனி மோர்’ (I am not acting any more) என்­ப­தில் ‘ஆம்’ (am) தான் உடன் வந்­தி­ருக்­கி­றது.

ஆனால் அடுத்து ‘அண்ட்’ (and) என்ற இணைப்­புச் சொல்­லைப் பயன்­ப­டுத்தி இணை­யும் வாக்­கி­ய­மும், ‘ஐ ஆம் ஃபோகஸ்­ஸிங் ஆன் மை ஸ்டடீஸ்’ (I am focussing on my studies) என்­று­தான் இருக்­க­வேண்­டும்.

‘ஐ ஆம் நாட் ஆக்­டிங் எனி மோர்’ (I am not acting any more) + ‘ஐ ஆம் ஃபோகஸ்­ஸிங் ஆன் மை ஸ்டடீஸ்’ (I am focussing on my studies) என்று இரு வாக்­கி­யங்­கள் இணை­யும் போது,

‘ஐ ஆம் நாட் ஆக்­டிங் எனி மோர்  அண்ட்  (ஐ) ஆம் ஃபோகஸ்­ஸிங் ஆன் மை ஸ்டடீஸ்’ என்று வர­வேண்­டும்.

இரண்­டா­வ­தாக வரும் ‘ஐ’ என்ற சொல்லை விட்­டு­வி­ட­லாம். முத­லில் வரும் ஐ அங்­கும் இருப்­ப­தா­கக் கொள்­ளப்­ப­டும்.

ஆகவே. ‘ஐ ஆம் நாட் ஆக்­டிங் எனி மோர்  அண்ட் ஆம் ஃபோகஸ்­ஸிங் ஆன் மை ஸ்டடீஸ்’ (I am not acting any more and am focussing on my studies) என்று வர­வேண்­டும்.

ஆனால் ‘ஐ’ (I) விடு­ப­டு­கி­றது என்­ப­தற்­காக அங்கே ‘இஸ்’ (is) போடக்­கூ­டாது. ஏனென்­றால் ‘is’ என்­பது ‘ஐ’ வரு­கிற தன்மை (ஃபர்ஸ்ட் பர்­ஸன் first person) வாக்­கி­யத்­தில்  வராது). படர்க்கை (third person) வாக்­கி­யத்­தில் தான் வரும்.

மேலும் சில உதா­ர­ணங்­க­ளைப் பார்த்­தால் உங்­க­ளுக்­குப் புரி­யும்.

‘ஐ ஆம் அ ஸ்டூடென்ட்’ (I am a student). நானொரு மாண­வன்.

‘ஹீ இஸ் அ ஸ்டூடென்ட்’ (He is a student). அவன் ஒரு மாண­வன்.

‘ஐ ஆம் கோயிங் ஹோம்’ (I am going home). நான் வீட்­டுக்­குப்­போய்க்­கொண்­டி­ருக்­கி­றேன்.

‘ஹீ இஸ் கோயிங் ஹோம்’ (He is going home). அவன் வீட்­டுக்­குப்­போய்க்­கொண்­டி­ருக்­கி­றான்.

‘ஐ ஆம் கான்­ஸென்­டி­ரே­டிங் ஆன் மை வர்க்’ (I am concentrating on my work). நான் என் வேலை மீது கவ­னம் செலுத்­திக்­கொண்­டி­ருக்­கி­றேன்.

‘ஹீ இஸ் கான்­ஸென்­டி­ரே­டிங் ஆன் ஹிஸ் வர்க்’ (He is concentrating on his work). அவன் அவ­னு­டைய வேலை மீது கவ­னம் செலுத்­திக்­கொண்­டி­ருக்­கி­றான்.

- – தொடரும்

...vamanan81@gmail.com

vamananinsight.blogspot.in