சாதிய சக்திகளை மதிநுட்பத்துடன் எதிர்கொள்ளவேண்டும்: பகுஜன் சமாஜ் தொண்டர்களுக்கு மாயாவதி அறிவுரை

பதிவு செய்த நாள் : 09 அக்டோபர் 2019 16:21

புதுடில்லி

சாதிய சக்திகளை மதிநுட்பத்துடன் எதிர்கொள்ளவேண்டும் என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார்.

பகுஜன் ஜமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷி ராமின் 13வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள பிரேர்ன கேந்திராவில் உள்ள கன்ஷி ராமின் சிலைக்கு கட்சியின் தலைவர் மாயாவதி இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், கட்சித் தொண்டர்களிடம் பேசிய மாயாவதி,

”கன்ஷி ராமின் கனவுகளை நாம் நினைவாக்கவேண்டும். தலித்துகளுக்கான குரலாக திகழ்ந்த அவரின் கொள்கைகளை நாம் எடுத்துச்செல்லவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

டுவிட்டரில் மாயாவதி வெளியிட்டுள்ள செய்தியில்,

”பாம்செப், தலித் ஷோஷித் சமாஜ் சங்கர்ஷ் சமிதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய சிறுபான்மை சமூக குழுக்களின் நிறுவனரான கன்ஷி ராமுக்கு நாடு முழுவதும் மரியாதை செலுத்தப்படும். குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்படும். அவரது போராட்டம், புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருந்தது.

பீமாராவ் அம்பேத்கர் எடுத்துரைத்த கண்ணியம் மற்றும் சுய மரியாதை இயக்கத்திற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் கன்ஷி ராம். விலை, தண்டனை, பாகுபாடு போன்ற காரணிகளை பயன்படுத்தி சாதிய மற்றும் குறுகிய சக்திகள், பகுஜன் சமாஜ் கட்சிக்கு பல சவால்கள் ஏற்படும் என்று அவர் முன்னரே உணர்ந்திருந்தார். அவற்றை நாம், மதிநுட்பத்தால் வெல்லவேண்டும்” என்று மாயாவதி பதிவிட்டுள்ளார்.