ஆட்சிக்கு வருவோம் என ஸ்டாலின் லட்சம் முறை சொல்லிவிட்டார் : அமைச்சர் உதயகுமார் கிண்டல்

பதிவு செய்த நாள் : 09 அக்டோபர் 2019 12:15

நாங்குநேரி,

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு வருவோம் என ஒரு லட்சத்து 11,000முறை சொல்லிவிட்டார் என்று அமைச்சர் உதயகுமார் கிண்டல் செய்துள்ளார்.

அக்டோபர் 21ம் தேதி நடைபெறவுள்ள நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரைக்காகவும் வாக்கு சேகரிப்பிற்காகவும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நாங்குநேரி பகுதிக்குச் சென்றார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஆட்சி மாற்றம் எனும் பலாப்பழத்தை காட்டி தொண்டர்களை ஸ்டாலின் வழிநடத்துகிறார்; ஆனால், என்றைக்கும் அந்த பலாப்பழம் அவருக்கு கிடைக்காது.

இதுவரை ஆட்சிக்கு வந்து விடுவோம் என 1 லட்சத்து, 11,000 முறை சொல்லிவிட்டார் ஸ்டாலின். இனிமேல் சொன்னாலும் ஆட்சிக்கு ஸ்டாலின் வர மாட்டார் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.