மாடர்னா தெரி­ய­ணும்னு தலை­மு­டியை வெட்­டி­னேன்! – அனன்யா

பதிவு செய்த நாள் : 09 அக்டோபர் 2019

“இயல்­பா­கவே நான் ஒரு கிரா­மத்து பொண்ணா இருக்­கி­ற­தால, என் கேரக்­டர் ரொம்ப பொருத்­தமா அமைஞ்­சி­டுச்சு!” என்­கி­றார் அனன்யா. ‘வந்­தாள் ஸ்ரீதேவி’ ஹீரோ­யின் அவர்­தான்.

   அவ­ரு­டைய பேட்டி:-

   “ஊட்­டிக்கு பக்­கத்­திலே இருக்­கிற மசி­ன­குடி கிரா­மம்­தான் எங்க பூர்­வீ­கமே. அப்பா, அம்மா, ஒரு அண்­ணன், நான், ஒரு தம்பி இது­தான் எங்க குடும்­பம். அவங்க எல்­லோ­ருமே ஊர்­லயே இருக்­காங்க. நான் மட்­டும்­தான் சென்­னை­யிலே தங்கி நடிச்­சுக்­கிட்டு இருந்­தேன்.

   எனக்கு சின்ன வய­சிலே இருந்தே ஆக்­டிங் மேலே பயங்­கர ஆர்­வம் இருந்­துச்சு. நான் ஒரு பிகாம் பட்­ட­தாரி. படிப்பு முடிஞ்­ச­தும் ஒரு பிரை­வேட் கம்­பெ­னி­யிலே வேலை பார்த்­தேன். அங்கே வேலை பார்த்­துக்­கிட்டு இருந்­தா­லும், என் நினைப்­பெல்­லாம் சினி­மா­விலே நடிக்­கி­ற­தி­லேயே இருந்­துச்சு. நான் ஒரு கிரா­மத்து பொண்ணா இருக்­கி­ற­தால, என் தோற்­றமே ஒரு மைனஸ்­பாய்ண்ட்டா போயி­டு­மோன்னு பயந்து தோற்­றத்தை சினி­மா­வுக்கு தகுந்­த­படி மாத்­திக்க டிரை பண்­ணேன். என் நீள­மான தலை­மு­டியை சுட்­டிக்­காட்டி பாராட்­டா­த­வங்­களே இல்லே. நாக­ரி­கமா தெரி­ய­ணும்ங்­கி­ற­துக்­காக  தலை­மு­டியை வெட்­டிக்­கிட்டு மாடர்னா ஒரு தமிழ் பட போட்­டோ­ஷூட்ல கலந்­துக்­கிட்­டேன். ஆனா, என்னை பல தடவை அவங்க செலக்ட் பண்­ணவே இல்லே. அப்­பு­றம் எப்­ப­டியோ என்னை செலக்ட் பண்ணி நடிக்க வச்­சாங்க. அந்த படம்­தான் ‘தாதா 87.’

   சினி­மா­விலே நடிச்­சுக்­கிட்டு இருக்­கும்­போதே அப்­ப­டியே சீரி­யல்­ல­யும் நடிச்சா என்­னன்னு மன­சிலே தோணுச்சு. அத­னால, அதுக்­கான முயற்­சி­யிலே இறங்­கி­ன­போ­து­தான் ‘வந்­தாள் ஸ்ரீதேவி’ ஆடி­ஷன்ல கலந்­துக்க முடிஞ்­சிச்சு. அதிலே செலக்ட்­டாகி நடிச்­சேன். கிராம பின்­ன­ணியை கொண்ட கதை. அது எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. ஆரம்­பத்­திலே, நான் நடிக்­கி­ற­துக்கு எங்க வீட்ல ரொம்ப எதிர்ப்பு தெரி­விச்­சாங்க. ஆனா, அதிலே நான் ஸ்டிராங்கா இருந்­த­தால, இஷ்­ட­மில்­லாம சம்­ம­திச்­சாங்க. என்னை ஸ்கிரீன்ல பார்த்த பின்­னாடி, நான் நல்லா நடிக்­கி­றதா எல்­லா­ரும் பாராட்­டு­றதை பார்த்­துட்டு எங்­கம்­மா­வால சந்­தோ­ஷம் தாங்க முடி­யலே.

   சாதா­ர­ணமா, நான் நல்லா வாய் பேசக்­கூ­டி­யவ. ஆனா, இந்த சீரி­யல்ல ரொம்ப அமை­தி­யான பொண்ணா நடிக்­க­வேண்டி இருந்­த­தால, வாய் பேசு­றதை அடக்­கிக்­கிட்டு நடிச்­சேன்.

   ஜனங்க மத்­தி­யிலே ஒரு நல்ல நடி­கைன்னு பேரு வாங்­க­ணும்ங்­கி­றது என் குறிக்­கோள். சினிமா உல­கத்­திலே நல்லா பிர­கா­சிக்­க­ணும். இது­தான் என் ஆசை.”