கவர்ச்­சியை குறைக்க யாஷிகா முடிவு!

08 அக்டோபர் 2019, 07:11 PM


சமூக வலை­த­ளங்­க­ளில் சினிமா பிர­ப­லங்­களை சீண்டி பார்ப்­பது சில­ரின் வேலை­யாக இருக்­கி­றது. அப்­படி சீண்­டு­ப­வர்­க­ளுக்கு உட­னுக்­கு­டன் பதி­லடி கொடுத்து விடு­கி­றார் யாஷிகா ஆனந்த். இது குறித்து அவர் கூறி­ய­தா­வது:-

“சினி­மா­வில் நடிப்­பது போலத்­தான் நிஜத்­தி­லும் நடி­கர்­கள் இருப்­பார்­கள் என நினைக்­கும் வழக்­கம் இன்­னும் இருக்­கி­றது. சினி­மா­வில் நான் கவர்ச்­சி­யாக நடிப்­ப­தால், என்­னி­டம் என்ன வேண்­டு­மா­னா­லும் பேச­லாம் என அர்த்­தம் கிடை­யாது. இன்ஸ்­டா­கி­ராம் மூல­மாக ரசி­கர்­க­ளி­டம் பேசு­வது எனக்­குப் பிடிக்­கும். சிலர், போலி கணக்கு மூல­மாக வந்து தவ­றாக கமென்ட் செய்­யும்­போது கோபம் வந்­து­வி­டும். அது­தான் அவர்­கள் பாணி­யி­லேயே பதி­லடி கொடுக்­கி­றேன். அதுக்கு பிறகு அவர்­கள் வாலாட்ட மாட்­டார்­கள். ‘இருட்டு அறை­யில் முரட்டு குத்து’ படத்­தில் நான் நடித்­தது கூட இப்­ப­டிப்­பட்ட சீண்­டல்­க­ளுக்கு கார­ண­மாக இருக்­க­லாம். அந்த படத்­தில் நடித்­த­தற்­காக நான் வருத்­தப்­ப­டு­கி­றேன்.

அதில் நடிக்க ஒப்­புக்­கொண்­டது என்­னு­டைய தவ­று­தான். என்­னி­டம் கதை சொன்­ன­போது இல்­லாத விஷ­யங்­களை எல்­லாம், ‘இப்­படி பண்ணா நல்­லா­யி­ருக்­கும், அப்­படி பண்ணா நல்­லா­யி­ருக்­கும்’ என்று சொல்லி படம்­பி­டித்­த­னர். படப்­பி­டிப்பு தளத்­தில் அதை என்­னால் மறுக்க முடி­ய­வில்லை. ஆனால், இனி­மேல் இந்த மாதிரி தவ­று­களை செய்­ய­மாட்­டேன். கவர்ச்­சியை குறைத்­துக்­கொண்டு, நடிப்பை வெளிப்­ப­டுத்­து­கிற கதா­பாத்­தி­ரங்­களை மட்­டுமே தேர்ந்­தெ­டுப்­பேன்” என்­றார்.