மாதுரி தீட்சித் நடித்த கேரக்டரில் நடிக்க ஆசை!

08 அக்டோபர் 2019, 07:10 PM

தமி­ழில் ‘வன­ம­கன்,’ ‘கடைக்­குட்டி சிங்­கம்,’ ‘ஜுங்கா,’ ‘கஜி­னி­காந்த்,’ ‘காப்­பான்’ படங்­க­ளில் நடித்­துள்ள சாயிஷா, நடி­கர் ஆர்­யாவை காதல் திரு­ம­ணம் செய்து கொண்டு, தொடர்ந்து படங்­க­ளில் நடித்து வரு­கி­றார். இந்­நி­லை­யில், அவர் அளித்­துள்ள பேட்டி:–

‘‘சினி­மா­வில் நடிப்­ப­தற்கு, கண்­கள் மட்­டும் போதும். இரு கண்­க­ளில் எத்­த­கைய உணர்­வு­களை வேண்­டு­மா­னா­லும் வெளிப்­ப­டுத்­த­லாம். அதற்கு  மொழி தேவை இல்லை. நான் சினிமா குடும்ப பின்­ன­ணி­யில் வந்­த­வள். இருந்­தா­லும், வீட்­டில் சினிமா பற்றி பேசு­வது குறை­வு­தான். பழைய படங்­க­ளை­யும் இப்­போது ரீமேக் செய்­கின்­ற­னர்.

அந்த வகை­யில், 'ராம் லக்­கன்' இந்தி படத்தை ரீமேக் செய்­தால், அதில் மாதுரி தீட்­சித் நடித்த ‘ராதா’ கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க ஆசை உள்­ளது. நட­னத்­துக்கு நிறைய வாய்ப்பு இருக்­கும் படம். நான், பயிற்சி பெற்ற நடன கலை­ஞர். முழு நடன திற­மை­யை­யும் வெளிப்­ப­டுத்­தும் படத்­தில் நடிக்க ஆசைப்­ப­டு­கி­றேன். அப்­ப­டி­யொரு படத்­துக்­கா­க­வும் காத்­தி­ருக்­கி­றேன்.’’