பொங்கல் ரேஸ் படங்கள்!

08 அக்டோபர் 2019, 07:02 PM

வரும் பொங்­கல் பண்­டி­கை­யில் ஏ.ஆர். முரு­க­தாஸ் இயக்­கத்­தில் ரஜி­னி­காந்த்- – நயன்­தாரா ஜோடி­யாக நடிக்­கும் ‘தர்­பார்’ படம் ரிலீ­சா­வதை உறு­திப்­ப­டுத்தி உள்­ள­னர்.

பொங்­க­லுக்கு வெளி­யா­கும் விஷால் படத்­துக்கு இன்­னும் பெயர் வைக்­க­வில்லை. ஆனந்த் இயக்­கு­கி­றார். ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா ஆகி­யோர் கதா­நா­ய­கி­க­ளாக நடிக்­கின்­ற­னர்.

கார்த்தி படத்­துக்­கும் பெயர் வைக்­கா­ம­லேயே படப்­பி­டிப்பு நடந்து வரு­கி­றது. இதில் ஜோதி­கா­வும் நடிக்­கி­றார். இந்த படத்தை கமல்­ஹா­ச­னின் ‘பாப­நா­சம்’ படத்தை இயக்கி பிர­ப­ல­மான ஜீத்து ஜோசப் டைரக்ட் செய்­கி­றார்.

கடந்த பொங்­கல் பண்­டி­கை­யில் ரஜி­னி­காந்­தின் ‘பேட்ட,’ அஜீத்­கு­மா­ரின் ‘விஸ்­வா­சம்’ ஆகிய 2 படங்­கள் வெளி­வந்­தன. இந்த இரண்டு படங்­க­ளுமே வெற்றி பெற்­றன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.