தமன்னா படத்தில் குட்டி கதை!

08 அக்டோபர் 2019, 07:01 PM

தமன்னா நடிப்­பில் தற்­போது உரு­வாகி இருக்­கும் படம் ‘பெட்­ரோ­மாக்ஸ்’. ஈகிள் ஐ புரொ­டக்­க்ஷன் தயா­ரித்­தி­ருக்­கும் இப்­ப­டத்தை 'அதே கண்­கள்' இயக்­கு­நர் ரோஹின் வெங்­க­டே­ஷன் இயக்­கி­யுள்­ளார். ‘யோகி’ பாபு, மன்­சூர் அலி­கான், பக­வதி, காளி வெங்­கட், சத்­யன், முனீஸ் காந்த் ஆகி­யோர் முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ள­னர். இந்த படத்­துக்கு ஜிப்­ரான் இசை­ய­மைக்க, டானி ரேமண்ட் ஒளிப்­ப­திவு செய்­துள்­ளார். இந்த படம் தெலுங்­கில் கடந்த 2017ம் ஆண்டு டாப்ஸி, வெண்­ணிலா கிஷோர் நடிப்­பில் வெளி­யாகி சூப்­பர் ஹிட்­டான 'அனந்தோ பிரம்மா' படத்­தின் அதி­கா­ரப்­பூர்வ தமிழ் ரீமேக்­கா­கும். இந்­நி­லை­யில் இப்­ப­டத்­திற்கு தணிக்கை குழு­வால் ‘யு/ஏ’ சான்­றி­தழ் வழங்­கப்­பட்­டுள்­ளது. மேலும், இப்­ப­டம் இம்­மா­தம் 11ம் தேதி வெளி­யா­கும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்த படத்­தின் டிரெய்­ல­ரின் ஆரம்­பத்­தில், விஜய்­யின் குட்டி கதை சொல்­வது போல் தொடங்­கு­கி­றது. அதன்­பின் கதை மற்­றும் கேரக்­டர்­கள் விளக்கி சொல்­லப்­ப­டு­கின்­றன.