சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 413 – எஸ்.கணேஷ்

08 அக்டோபர் 2019, 07:00 PM

நடி­கர்­கள்  :  கிஷோர், சிநேகா, மாஸ்­டர் பிரித்­வி­ராஜ் தாஸ், சூரி, ப்ரதீப் ராவத், ராஜ்­க­பூர் மற்­றும் பலர். இசை : விஜய் ஆண்­டனி, ஒளிப்­ப­திவு : ஆர். ரத்­ன­வேலு, எடிட்­டிங் : ராஜா மொஹம்­மது, வச­னம் : ஏ.ஆர். வெங்­க­டேஷ், தயா­ரிப்பு :     வி. ராம­தாஸ், திரைக்­கதை, இயக்­கம் : ஜி.என்.ஆர். கும­ர­வே­லன்.

சிவ­தாஸ் (கிஷோர்) என்­க­வுண்­டர் குழு­வைச் சேர்ந்த கண்­டிப்­பான போலீஸ் அதி­காரி. லோக்­கல் தாதா ஆதியை (ப்ரதீப் ராவத்) குறி வைக்­கும் சிவ­தாஸ் அவ­ரது கும்­ப­லைச் சேர்ந்­த­வர்­களை என்­க­வுண்­டர் செய்­கி­றான். கட்­டுப்­பா­டு­கள் இல்­லா­மல் டிரை­வர் குண்­டா­சாமி (சூரி) மற்­றும் நன்­பர்­க­ளோடு வாழும் சிவ­தா­சின் வாழ்க்கை ஊரி­லி­ருந்து வரும் அழைப்­பால் மாறு­கி­றது. பிறந்­த­வு­டன் தாயை இழந்த ஹரி­தாசை (ப்ரித்­வி­ராஜ் தாஸ்) வளர்த்து வந்த சிவ­தா­சின் தாய் இறந்­து­விட மகனை கவ­னித்­துக் கொள்­ளும் பொறுப்பை ஏற்­கும் சிவ­தாஸ் போலீஸ் குடி­யி­ருப்­புக்கு திரும்­பு­கி­றான்.

நண்­பர்­க­ளின் ஆலோ­ச­னைப்­படி மருத்­து­வரை (யூகி சேது) சந்­திக்­கும் சிவ­தாஸ் தனது மகன் ஆட்­டி­சக் குழந்தை என்­பதை கண்­ட­றி­கி­றான். மக­னது உணர்­வு­களை புரிந்து கொள்ள இய­லாத தந்­தை­யாக கலங்­கு­கி­றான். அர­சுப்­பள்ளி ஒன்­றில் மக­னைச் சேர்ப்­ப­தோடு தானும் துணை­யா­கச் செல்­கி­றான். ஹரி­யின் ஆசி­ரி­யை­யான அமு­த­வள்ளி (சிநேகா) அவனை சரி­யாக புரிந்­து­கொள்­வ­தோடு சிவ­தா­சுக்­கும் உத­வு­கி­றாள். சமூ­கத்­தோடு ஒன்ற முடி­யாத ஹரி­யின் நிலை­யைக் கண்டு இரு­வ­ரும் வருந்­து­கி­றார்­கள்.

ஹரிக்கு பயிற்­சி­ய­ளிக்க முத­லில் மறுக்­கும் தட­கள பயிற்­சி­யா­ளர் (ராஜ்­க­பூர்) பின்­னர் அவ­னது திற­மையை அறிந்து ஆலோ­ச­னை­ய­ளிக்­கி­றார். சிவ­தா­சின் பயிற்­சி­யில் ஹரி மாரத்­தான் வீர­னாக உரு­வெ­டுக்­கி­றான். ஹரி மீதுள்ள பாசத்­தில் அவ­னுக்கு தாயாக நினைக்­கும் அமு­த­வள்­ளிக்கு, அவ­ரது தாயின் கவ­லையை எடுத்­துக்­கூறி மறுக்­கும் சிவ­தா­சின் மேல் மதிப்பு அதி­க­மா­கி­றது. சென்­னை­யில் நடக்­கும் சிறு­வர்­க­ளுக்­கான மாரத்­தான் போட்­டி­யில் பங்­கேற்க ஹரிக்கு அனு­மதி மறுக்­கப்­ப­டு­கி­றது. ஆட்­டி­சக் குழந்­தை­க­ளைப் பற்­றி­யும் அவர்­க­ளது பெற்­றோ­ரின் போராட்­டத்­தைப் பற்­றி­யும் எடுத்­துக்­கூறி சிவ­தாஸ் அனு­மதி வாங்­கு­கி­றான்.

போட்டி நடை­பெ­றும் நாளில், ஆதி­யால் கடத்­தப்­பட்ட சிவ­தாஸ் நண்­ப­னின் உடல் கிடைக்­கி­றது. மற்ற நண்­பர்­கள் தக­வலை மறைத்­தும் வழி­யில் ஆதியை பார்க்­கும் சிவ­தாஸ், அமு­த­வள்ளி, குண்­டா­சா­மி­யோடு ஹரியை போட்­டிக்கு அனுப்­பி­விட்டு ஆதியை பின்­தொ­டர்­கி­றான். போட்­டி­யில் முத­லில் ஓடத்­த­யங்­கும் ஹரி நினை­வில் உள்ள தன் தந்­தைக்­கு­ர­லின் வழி­காட்­டு­தல்­படி ஓடி வெல்­கி­றான். வெற்றி பெற்ற ஹரி ‘அப்பா’ என முதன்­மு­றை­யாக அழைக்­கி­றான். ஆதி­யு­ட­னான மோத­லில் அவர்­களை கூட்­டத்­தோடு கொல்­லும் சிவ­தாஸ், படு­கா­யத்­தோடு போனில் ஹரி­யின் வெற்­றிச் செய்­தியை கேட்­ட­ப­டியே இறக்­கி­றான்.

நிகழ்­கா­லத்­தில் சாதனை இளை­ஞ­னான ஹரி­தாஸ் (ராஜேஷ் குமார்) வாழ்­நா­ளில் தன்னை போட்­டி­யிட வைப்­பதே சாத­னை­யாக நினைத்த தனது அப்பா தனது வெற்­றியை காண­மு­டி­ய­வில்­லையே என்று நினைத்து கலங்­கு­கி­றான். தனது வாழ்வை ஹரி­யின் வளர்ச்­சிக்­கா­கவே கழித்த அமு­த­வள்ளி டீச்­ச­ரை­யும், சாதனை நாய­க­னான தனது அப்­பா­வை­யும் பெரு­மி­த­மாக நினைப்­ப­தோடு படம் நிறை­வ­டை­கி­றது.