08 அக்டோபர் 2019, 06:49 PM
கடந்த சில ஆண்டுகளாக படத்தயாரிப்பிலிருந்து ஒதுங்கி இருந்த ராதிகா, தனது ராடான் நிறுவனத்தின் மூலம் மீண்டும் படம் தயாரிக்க வருகிறார். இந்த முறை அவர் தயாரிப்பது குடும்ப படம். படத்திற்கு ‘பிறந்தாள் பராசக்தி’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். இதில் சரத்குமார், ராதிகா, சரத்குமாரின் மகள் வரலட்சுமி ஆகியோர் நடிக்கிறார்கள். ஓ.எம். விஜய் என்பவர் இயக்குகிறார். என்.ஆர். ரகுநந்தன் இசையமைக்கிறார். வைரமுத்து பாடல்களை எழுதுகிறார், வீரமணி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் முன்னோட்டம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். இது மதுரையை சுற்றியுள்ள கிராமத்தில் சண்டை ஆடுகளை வளர்க்கும் குடும்பத்தை பற்றியது. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.