சிரியாவில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறுகிறது

பதிவு செய்த நாள் : 07 அக்டோபர் 2019 20:27

துருக்கி சிரியா எல்லைப் பகுதி,

சிரியாவில் வடகிழக்குப் பகுதியில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேற தொடங்கியது.துருக்கி சிரியா எல்லையில் தன்வசம் வைத்திருந்த இரு தளங்களை அமெரிக்க ராணுவம் கைவிட்டு விட்டு வெளியேறியது.

2011ம் ஆண்டு சிரியாப் பிரச்சினைகளில் அமெரிக்க தலையிடத் தொடங்கியது. சிரியா எல்லைப்பகுதிகளில் பல இடங்களை குர்துக்கள் ஆதரவுடன் கைப்பற்றி அங்கு தனது ராணுவ வீரர்களை நிறுத்தியது. சுமார் 1000க்கு மேல் அமெரிக்க ராணுவ வீர்ர்கள் சிரியாவில் இருந்ததாக மதிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்க ராணுவம் வசம் இருந்த பகுதிகளிலிருந்து குர்து கொரில்லாப் படையினர் வெளியேற துவங்கியுள்ளனர்.

சிரியாவின் வடக்கு பகுதியில் அமெரிக்க ராணுவம் வசம் இருந்த பகுதிகளில் இப்பொழுது துருக்கி இராணுவம் நுழையத்  தயாராக உள்ளது. எந்த நேரத்திலும் துருக்கி இராணுவம் சிரியாவுக்குள் நுழைய கூடும் என்று துருக்கி அதிபர் எர்டோகன் கூறினார்.

துருக்கி அரசை எதிர்த்து குர்துக்கள் பல ஆண்டு காலமாக போராடி வருகிறார்கள் அவர்களுக்கு அமெரிக்க அரசு உதவி வந்தது. இப்போது அமெரிக்க அரசின் உதவி கிடைக்காத நிலையில் சிரியாவில் இருந்து வெளியேற குர்துக்களும் தயாராகிவிட்டனர்.

ராணுவம் சிரியாவில் இருந்து வெளியேறுவதை அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

முடிவற்ற யுத்தங்களில் இனிமேல் அமெரிக்கா கலந்து கொள்ளாது. தனக்கு லாபம் தரக்கூடிய போர்களில் மட்டுமே அமெரிக்கா பங்குகொள்ளும். அமெரிக்கா போரில் இறங்கினால் வெற்றி பெற வேண்டும் அத்தகைய போர்களில் மட்டுமே அமெரிக்கா களம் இறங்கும்.

இப்பொழுது சிரியாவின் வடக்கு பகுதியில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேற தொடங்கிவிட்டது.

 இந்நிலையில் சிரியாவில் இருந்த துருக்கி, ஐரோப்பா, ஈரான், ஈராக், ரஷ்யா குர்துக்கள் ஆகியோர் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தாங்களாகவே முடிவு செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இனி அவர்கள் தான் தங்கள் பணியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் .என டிரம்ப் தன்னுடைய டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் .அமெரிக்கா வெளியேறுவதால் ஏற்கனவே ஓடுக்கப்பட்ட இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிக்ளும்  லெவாண்ட் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளும் இனிமேல் வலுப் பெற வாய்ப்பு உள்ளது என்று குர்துக்கள் தெரிவித்தனர்.