மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

பதிவு செய்த நாள் : 07 அக்டோபர் 2019 17:18

ஸ்டாக்ஹோல்ம்,

2019ம் ஆண்டுக்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அமெரிக்க ஆய்வாளர்களான வில்லியம்.ஜி. கேலின், கிரெக் செமன்சா மற்றும் பிரிட்டன் ஆய்வாளரான பீட்டர் ரேட்கிளிஃப் ஆகிய 3 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

ஆக்சிஜன் எனப்படும் பிராண வாயு அளவு மனித உடலில் செல்களின் இயக்கம் மற்றும் உடலின் செயல்பாடுகளில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை கண்டறிந்ததற்காக இந்த மூன்று பேருக்கும் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

இவர்களின் ஆராய்ச்சி முடிவுகள் ரத்தசோகை, புற்றுநோய் போன்ற பல நோய்களை குணப்படுத்துவதற்கான வழிகளை கண்டறிய உதவும் என்று நோபல் பரிசுக்கான நடுவர் குழு தெரிவித்துள்ளது.