ஸ்டார்ட் அப்: பிளிப்­கார்ட் ஆன்­லைன் சந்­தை­யில் உங்­கள் பொருட்­க­ளை­யும் விற்­க­லாம்

பதிவு செய்த நாள் : 07 அக்டோபர் 2019

ப்ளிப்­கார்ட் இந்­தி­யா­வின் புகழ்­பெற்ற ஆன்­லைன் கம்­பெ­னி­க­ளில் ஒன்று. நாம் எல்­லா­ருக்­குமே ஒரு ஆதங்­கம் எப்­போ­தும் இருக்­கும் நாம் பொருட்­க­ளின் விற்­ப­னையை எவ்­வாறு கூட்­டு­வது என்று.  உங்­க­ளின் இந்த ஆதங்­கத்தை போக்­கு­வ­தற்கு ஆபத்­பாந்­த­வ­னாக வரு­கி­றது ப்ளிப்­கார்ட்.

பிளிப்­கார்ட் மூல­மாக உங்­க­ளது பொருட்­களை எப்­படி விற்­பது?

பிளிப்­கார்ட் ஆன்­லைன் சந்­தை­யில் உங்­க­ளு­டைய பொருட்­களை விற்­ப­தற்கு உங்­க­ளுக்கு தேவை­யா­னது நான்கு தான்.  ஒன்று உங்­க­ளது ஜிஎஸ்டி நம்­பர், இரண்­டா­வது  உங்­க­ளுக்­கான பேங்க் அக்­க­வுண்ட், மூன்­றா­வது நீங்­கள் விற்க நினைத்து இருக்­கும் பொருட்­கள், உங்­க­ளது பான் கார்டு. சில வகை விற்­ப­னை­க­ளுக்கு ஜி.எஸ்.டி. எண் விலக்­கும் இருக்­கி­றது.

 ஏன் பிளிப்­கார்ட் ஆன்­லைன் சந்­தை­யில் நீங்­கள் விற்க வேண்­டும்?  ஆன்­லைன் சந்­தை­யில் பிளிப்­கார்ட் லீட­ராக இருக்­கி­றது. இன்­றைய தினம் அந்த கம்­பெ­னி­யில பத்து கோடி வாடிக்­கை­யா­ளர்­கள் இருக்­கி­றார்­கள். ஒரு மாதத்­திற்கு 80 லட்­சம் ஷிப்­மெண்ட்  அனுப்­பு­கி­றார்­கள். அது­வும் இந்­தி­யா­வில் ஆயி­ரம் ஊர்­க­ளுக்கு மேலாக.  அங்­கெல்­லாம் பொருட்­களை அனுப்­பும் வசதி அவர்­க­ளி­டம் இருக்­கி­றது.  நீங்­கள் அவர்­க­ளி­டம் பதிவு செய்து கொண்ட பிறகு, உங்­கள் பொருட்­களை விற்­ற­வு­டன் உங்­க­ளுக்கு பணம் 7 நாட்­கள் முதல் 10 நாட்­க­ளுக்­குள் கிடைத்­து­வி­டு­கி­றது.  உங்­க­ளு­டைய பொருட்­க­ளுக்­கான விலையை யார் நிர்­ண­யிப்­பார்­கள் என்ற சந்­தே­கம் உங்­க­ளுக்கு வர­லாம். ஆன்­லை­னில் விற்­கும்­போது உங்­கள் பொருட்­க­ளின் விலையை நீங்­களே நிர்­ண­யத்து கொள்­ளா­லம்.  ஆனால் ஒன்றை மட்­டும் ஞாப­கம் வைத்­துக்­கொள்ள வேண்­டும். உங்­க­ளைப் போலவே, உங்­கள் பொருட்­களை போலவே விற்­பனை செய்­யும் பலர் இந்த ஆன்­லைன் சந்­தை­யில் இருப்­பார்­கள். அப்­படி  இருக்­கும் பட்­சத்­தில் தான் உங்­க­ளு­டைய பொருட்­க­ளின் விலை நியா­ய­மாக இருக்­கும் பட்­சத்­தில் தான் உங்­க­ளுக்கு வியா­பார வாய்ப்­பு­கள் அதி­கம் இருக்­கும்.  பல­ருக்கு ஒரு சந்­தே­கம் இருக்­க­லாம் பிளிப்­கார்ட் ஆன்­லைன் சந்­தை­யில் உங்­க­ளது பொருட்­களை சந்­தைப்­ப­டுத்த பணம் கட்ட வேண்­டுமா என்­ப­து­தான். ஆன்­லைன் சந்­தை­யில் உங்­க­ளது பொருட்­களை காட்­சிப்­ப­டுத்த பணம் எது­வும் கட்ட வேண்­டாம். ஆனால் நீங்­கள் சரக்­கு­களை ப்ளிப்­கார்ட் ஆன்­லைன் சந்­தை­யின் மூல­மாக விற்ற பின் அவர்­க­ளுக்கு ஒரு கமி­ஷன் கொடுக்க வேண்­டி­யி­ருக்­கும் என்­பதை ஞாப­கத்­தில் வைத்­துக் கொள்­ள­வேண்­டும். அந்த கமி­ஷனை கழித்­துக்­கொண்டு மீதி பணத்தை உங்­க­ளுக்கு அனுப்­பு­வார்­கள்.

 பொரு­ளா­தா­ர­நிலை மந்­தமா?

பொரு­ளா­தார நிலை மந்­த­மாக இருக்­கி­றது என்று பல­ரும் கூறு­கி­றார்­கள். ஆனால் இந்த வரு­டம் பிளிப்­கார்ட் மற்­றும் அமே­சான் தசரா ஆன்­லைன் விற்­ப­னை­யில் முதல் நாள் விற்­பனை வைத்து பார்க்­கும்­போது அப்­படி தோன்­ற­வில்லை.  அந்த அள­விற்கு அமோக விற்­பனை நடந்­தி­ருக்­கி­றது. இத­னால் கூற விரும்­பு­வது என்­ன­வென்­றால் ஆன்­லைன் விற்­ப­னை­யில் உங்­களை இணைத்­துக் கொள்­ளும்­போது உங்­க­ளு­டைய பொருட்­க­ளின் விற்­பனை கூடு­வ­தற்கு நல்ல வாய்ப்­பு­கள் இருக்­கி­றது என்­று­தான்.

பிளிப்­கார்ட் செல்­ல­ரின் வெற்றி கதை

ப்ளிப் கார்ட்­டின் ஒரு வெற்றி கதையை பார்ப்­போம். ஹரி­யானா மாநி­லத்­தில் சோனி­பட் என்ற ஊருக்கு அரு­கில் வசிக்­கும்  ரித்து கவு­சிக்  ப்ளிப்­கார்ட்­டில் முத­லில் தான் தயா­ரித்த பெண்­க­ளுக்­கான கைப்­பை­களை விற்க ஆரம்­பித்­தார். பின்­னர் இவற்றை  "ரித்து பால்" என்ற பிராண்­டில் வைக்க ஆரம்­பித்­தார். இன்­றைய தினம் மாதம் ரூபாய் எட்டு லட்­சம் வரை ஆன்­லைன் மூல­மாக விற்­ப­தன் மூலம் லாப­மாக சம்­பா­திக்­கி­றார்.

உங்­க­ளுக்கு ப்ளிப்­கார்ட் மூல­மாக விற்க விருப்­பமா அப்­ப­டி­யெ­னில் seller.flipkart.com  என்ற இணை­ய­த­ளத்­தில் சென்று பாருங்­கள்.