ஒரு பேனாவின் பயணம் – 227 – சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 07 அக்டோபர் 2019

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினர்!

பிப்­ர­வரி பிற்­ப­கு­தி­யில், அர­சி­ய­ல­மைப்பு சபை­யின் முதன்­மு­த­லாக சேர்ந்த சமஸ்­தா­னம், பரோடா. பிகா­னே­ரின் வேண்­டு­கோ­ளின்­படி, அதன்­பின் மேலும் 12 சமஸ்­தா­னங்­கள் சேர்ந்­தன. அவற்­றுள் பெரும்­பான்­மை­யா­னவை ராஜஸ்­தா­னைச் சேர்ந்­தவை. பணிக்­க­வும், பிகா­னே­ரும் ராஜ­பு­தன ராஜாக்­களை, டெல்­லிக்கு பணிய வைத்­த­னர். அங்கே இனி முக­லாய அல்­லது பிரிட்­டிஷ் அர­சுக்கு பதி­லாக, ஒரு பண்­டிட் ஆட்சி செய்­யப்­போ­கி­றார்’­­அ­வர்­கள் சரி­யா­கவே காங்­கி­ர­சோடு ஒரு உடன்­ப­டிக்கை செய்து கொண்­ட­னர். பிகா­னே­ரைப் போல ராஜஸ்­தா­னில் உள்ள பல சமஸ்­தா­னங்­கள் பாகிஸ்­தா­னோடு எல்­லை­யைப் பகிர்ந்து கொள்­ளும் வகை­யில் அமைந்­தி­ருந்­தன. ஆனால் இஸ்­லா­மிய அர­சர்­க­ளோடு போரிட்ட பழைய நினை­வு­கள், அவர்­களை முன்­ன­தா­கவே காங்­கி­ர­ஸோடு சமா­தா­ன­மா­கப் போக செய்­தது. ஆனால் இன்­னும் உட்­ப­கு­தி­க­ளில் அமைந்த சமஸ்­தா­னங்­கள் பிரிட்­டி­ஷார் வெளி­யே­றிய பிறகு டில்­லி­யின் சட்­ட­திட்­டங்­கள் எவ்­வாறு அமை­யும் என்­பது குறித்து நிச்­ச­ய­மற்ற நிலை­யில் இருந்­த­னர். துணைக்­கண்­டம் பதி­னெட்­டாம் நூற்­றாண்­டுக்கு திரும்பி ஏறத்­தாழ 12 முழு உரிமை பெற்ற சுதேச ராஜ்­ஜி­யங்­க­ளுக்கு  இடையே பிரிந்து கிடக்­கும் சூழ்­நிலை அமை­ய­லாம் அல்­லவா?

இந்­திய அரசு ஜூன் 27 அன்று ராஜாங்க இலாகா ஒன்றை அமைத்­தது. இது பழைய அர­சி­யல் இலா­கா­வுக்கு மாறாக அமைக்­கப்­பட்­டது. அந்த இலா­கா­வின் சமஸ்­தான ஆத­ர­வும், எதிர்ப்­பும் அதி­க­மான கேடு­களை விளை­வித்­தி­ருந்­தன. படேல் அதன் அமைச்­சர் பொறுப்பை ஏற்­றார். அவர் வி.பி மேனன் என்ற இளைய, துடிப்­பான புத்­தி­சா­லி­யான மல­பா­ரைச் சேர்ந்த மலை­யாள இளை­ஞரை செய­ல­ராக தேர்ந்­தெ­டுத்­துக் கொண்­டார். அவர் ஒரு ஐபி­எஸ் அதி­கா­ரி­யாக இல்­லா­மல் ஒரு குமாஸ்­தா­வாக சேர்ந்து படிப்­ப­டி­யாக மேல் பத­விக்கு உயர்ந்­த­வர். அவர் பல வைஸ்­ராய்­க­ளின்­கீழ் அர­சி­யல் சட்ட ஆலோ­ச­க­ரா­க­வும், சீர்­தி­ருத்த ஆணை­ய­ரா­க­வும் பணி­யாற்­றி­ய­வர். இந்­திய சுதந்­திர  மசோ­தா­வுக்கு உரு­வம் உரு­வம் கொடுப்­ப­தில் முக்­கிய பங்­காற்­றி­ய­வர்.

 அவர் கீழ்­நி­லை­யில் இருந்து வந்­த­வர் என்­ப­தற்­காக அவ­ரோடு பணி­யாற்­றிய ஐசி­எஸ் அதி­கா­ரி­கள், கிண்­ட­லாக அவரை `பாபு மேனன்’ என்று அழைத்­தார்­கள்.பிரிட்­டிஷ் அரசு காங்­கி­ரஸ் அர­சுக்கு வழி­விட்டு விலகி சென்ற போது, அந்த சிக்­க­லான மாற்­றல் விவ­கா­ரங்­களை மேற்­பார்­வை­யிட அவ­ரை­விட சிறந்த மனி­தர் எவ­ரும் இல்லை என்று சொல்­ல­லாம். மேன­னு­டைய  முதல் பணி பிரிட்­டிஷ் அர­சாங்­கத்தை, சமஸ்­தா­னங்­க­ளின் சுயாட்சி கோரிக்கை எதை­யும் ஆத­ரிக்க வேண்­டாம் என்று கேட்­டுக் கொண்­ட­து­தான்.` பிரிட்­டிஷ் அரசு சமஸ்­தா­னங்­கள் சுதந்­திர  அங்­கீ­கா­ரம் அளிப்­ப­தாக சிறி­த­ளவு சமிக்ஞை  கொடுத்­தா­லும் அவற்றை இந்­தி­யா­வு­டன் இணைக்க செய்­யும் முயற்சி முடி­வற்ற தொல்­லை­க­ளுக்கு உள்­ளாகி விடும்’ என்று அவர் லண்­ட­னுக்கு அறி­வு­றுத்­தி­னார்.

மேனன் அவ­ரது பழைய அதி­காரி மவுன்ட்­பேட்­ட­னுக்­கும்,  வல்­ல­பாய் படே­லுக்­கும்  இடையே இணக்­க­மா­ன­மா­கச் செயல்­பட பொருத்­த­மா­ன­வ­ராக இருந்­தார். சமஸ்­தா­னங்­க­ளின் பாது­காப்பு அய­லு­றவு, தொலைத்­தொ­டர்பு, ஆகி­ய­வற்­றின் பொறுப்பு காங்­கி­ரஸ் அர­சாங்­கத்­து­டன் இருக்­கு­மாறு செய்­யும் இணைப்பு ஒப்­பந்­தத்தை தயா­ரிப்­ப­தில் அவர்­கள் ஈடு­பட்­டி­ருந்­த­னர். ஜூலை 5 அன்று, மன்­னர்­கள் இந்­திய யூனி­ய­னு­டன் இந்த மூன்று விஷ­யங்­க­ளில் இணக்­க­மாக இருக்­க­வும், அர­சி­யல் அமைப்­புச் சபை கலந்து கொள்­ள­வும் வேண்டி படேல் ஒரு அறிக்­கையை வெளி­யிட்­டார். அவர் குறிப்­பிட்­டது போல இந்த விஷ­யங்­க­ளில் கூட்­டு­றவு இல்­லா­விட்­டால் அரா­ஜ­க­மும் குழப்­ப­முமே நில­வும். படேல் இந்த புனித பூமியை உலக நாடு­க­ளி­டையே உரிய இடத்­துக்கு உயர்த்த, மன்­னர்­க­ளின் உத­வியை நாடி, அவர்­க­ளது தேச­பக்­திக்கு வேண்­டு­கோள் விடுத்­தார்.

ஜூலை 9 அன்று படேல், நேரு இரு­வ­ரும் வைஸ்­ரா­யைச் சந்­தித்­த­னர். சமஸ்­தா­னங்­க­ளுக்­கும்,  இந்­தி­யா­வுக்­கு­மான உறவு குறித்த மிக நெருக்­க­டி­யான அந்­தப் பிரச்­னைக்கு உதவ வைஸ்­ராய் என்ன செய்­யப் போகி­றார் என்று கேட்­ட­னர். இந்த விஷ­யத்தை தன் தலை­யாய பணி­யாக ஏற்­ப­தற்கு மவுன்ட்­பேட்­டன் சம்­ம­தித்­தார். பிறகு அதே நாளில் மவுண்ட்­பேட்­ட­னைச் சந்­திக்க காந்­தி­யும் வந்­தார். மவுன்ட்­பேட்­டன் பதிவு செய்­துள்­ளது போல மன்­னர்­கள் ஆகஸ்ட் 15 அன்று தம் சமஸ்­தா­னங்­களை சுதந்­தி­ர­மா­னவை   என்று அறி­வித்து அதன் மூலம் இந்­தி­யா­வில் ஒன்­றுக்­கொன்று பகைமை பாராட்­டும் பல துண்டு நாடு­கள் உரு­வா­வதை தடுக்க உங்­க­ளால் முடிந்த அனைத்­தை­யும் செய்ய வேண்­டும்’ என்று மகாத்மா கேட்­டுக்­கொண்­டார். மவுன்ட்­பேட்­டனை, காங்­கி­ரஸ் மூவர் சமஸ்­தா­னங்­க­ளுக்கு எதி­ராக தங்­கள் அணி­யில் விளை­யா­டு­மாறு அறி­வு­றுத்­தி­னர் ஜூலை 25 அன்று மன்­னர்­கள் அரங்­கில் உரை­யாற்­றும்­போது மவுண்ட்­பேட்­டன் மிகச்­சி­றப்­பாக செய்­தார். அந்த நிகழ்ச்­சிக்கு வைஸ்­ராய் மிக அலங்­கா­ர­மாக, தம் மார்­பில் நேர்த்­தி­யாக, வரி­சை­யாக ராணு­வப் பதக்­கங்­களை அணிந்து வந்­தி­ருந்­தார்.  அவ­ரு­டைய உத­வி­யா­ளர் ஒரு­வர் `ஆடம்­ப­ரங்­க­ளுக்­குப் பெயர்­பெற்ற ராஜாக்­க­ளையே அதி­ர­வைக்க திட்­ட­மிட்டு விரு­து­க­ளை­யும் பதக்­கங்­க­ளை­யும் அணிந்து வந்­தி­ருந்­தார்’ என்று நினை­வு­கூர்­கி­றார்.

இந்­திய சுதந்­திர சட்­டம், சமஸ்­தா­னங்­களை பிரிட்­டிஷ் அர­சுக்கு செய்ய வேண்­டி­யி­ருந்த கட­மை­கள் அனைத்­தி­லும் இருந்து விடு­வித்து விட்­ட­தாக கூறி அவர் தன் உரை­யைத் தொடங்­கி­னார். அவர்­கள் இனி சுதந்­தி­ர­மா­ன­வர்­கள்  என்­றும், வேறு­வி­த­மா­கச் சொன்­னால் கட்­டுப்­பா­டு­கள் ஏதும் அற்­ற­வர்­கள் என்­றும் கூறி­னார். பழைய சங்­கி­லி­கள் உடைத்­தெ­றி­யப்­பட்டு விட்­டன என்­றும் ஆனால் அதற்கு பதி­லாக வேறு எதை­யும் வைத்­துக் கொள்­ளா­விட்­டால் குழப்­பம் மட்­டுமே விளை­யும் என்­றும் சொன்­னார். சமஸ்­தா­னங்­களை அவற்­றுக்கு மிக நெருக்­க­மாக உள்ள ஒரு தேசத்­து­டன் தொடர்பு ஏற்­ப­டுத்­திக் கொள்­ளு­மாறு அறி­வுரை கூறி­னார். `நீங்­கள் எப்­படி உங்­கள் குடி­மக்­க­ளி­டம் இருந்து ஓடி­விட முடி­யாதோ, அதே­போல உங்­கள் அண்டை தேசத்­தி­லி­ருந்து ஓடி­விட முடி­யாது ’என்று வெளிப்­ப­டை­யா­கவே கூறி­னார்.  இணைப்பு ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­டால் மன்­னர்­கள் கையில் பாது­காப்­புத்­துறை இருக்­காது. ஆனால் எப்­ப­டி­யும் சமஸ்­தா­னங்­க­ளுக்கு பிரிட்­டிஷ் அர­சி­ட­மி­ருந்து இனி போர்க்­க­ரு­வி­க­ளும், ஆயு­தங்­க­ளும் கிடைக்­கப்­போ­வ­தில்லை. அய­லு­ற­வும் அவர்­க­ளி­டம் இருக்­காது. ஆனால் மன்­னர்­க­ளால் வெளி­நா­டு­க­ளில் தூதர்­களை பெரும் செலவு செய்து நிய­மித்து நிர்­வ­கிக்க முடி­யாது, அவர்­க­ளி­டம் தொலை தொடர்­பும் இருக்­காது. ஆனால்  துணைக்­கண்­டம் முழு­மைக்­கு­மான ஒரே அமைப்­பின் மூலம் தொலைத்­தொ­டர்பு வழங்க உதவி செய்­யும். காங்­கி­ரஸ் மன்­னர்­க­ளுக்கு அளிக்­கும் வாய்ப்பு மன்­னர்­க­ளால் செய்­ய­மு­டி­யாத கடி­ன­மா­ன­வற்றை கையில் எடுத்­துக்­கொண்டு, அதி­க­பட்­ச­மான உள்­அ­தி­கா­ரத்தை மன்­னர்­க­ளி­டமே விட்டு வைக்­கி­றது என்­றார் வைஸ்­ராய்.

 சுதேச மன்­னர்­கள் அரங்­கில் மவுன்ட்­பேட்­டன்  ஆற்­றிய உரை, என் கருத்­தில் ஒரு இமா­லய சாதனை. இந்­தி­யா­வில் அவர் ஆற்­றிய முக்­கி­ய­மான பணி­க­ளின் வரி­சை­யில் முதன்­மை­யா­னது. முடி­வாக, அது பிரிட்­டி­ஷார் இனி­மேல் அந்த மன்­னர்­களை காப்­பாற்­றவோ, ஆத­ரிக்­கவோ போவ­தில்லை; அவர்­க­ளு­டைய  சுதந்­தி­ரம் என்­பது கானல் நீரே என்­பதை தெளி­வாக வற்­பு­றுத்தி சொல்­லி­விட்­டது. மவுன்ட்­பேட்­டன்  தன் உரையை ஆற்­று­வ­தற்கு முன் அதன் சுருக்­க­மான தக­வலை சில முக்­கி­ய­மான மன்­னர்­க­ளுக்கு கடி­த­மாக அனுப்பி இருந்­தார். பின்­னர் அவர், அந்த மன்­னர்­களை இணைப்பு ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­தி­டு­மாறு  வற்­பு­றுத்­தத் தொடங்­கி­னார். அவர்­கள் ஆகஸ்ட் 15க்கு முன் அவ்­வாறு செய்­தால் அவர்­க­ளுக்கு கவு­ர­வ­மான வச­தி­களை செய்து கொடுக்க முடி­யும் என்­றார். அவர்­கள் தன் பேச்சை கேட்­கா­விட்­டால் சுதந்­தி­ரத்­திற்கு பிறகு மன்­னர்­க­ளுக்கு எதி­ரான தேசி­ய­வா­தி­க­ளின் கோபத்­தின் முழு தாக்­கு­த­லும் வெடித்­து­வி­டும் நிலையை சந்­திக்க நேரி­டும்.

 ஆகஸ்ட் 15 வாக்­கில் ஏறக்­கு­றைய எல்லா சமஸ்­தா­னங்­க­ளும் ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­டன. பிரிட்­டி­ஷா­ரும் வெளி­யே­றி­விட்­ட­னர். இப்­போது மன்­னர்­கள் மூன்று அம்­சங்­க­ளில் சம்­ம­தித்து ஒப்­ப­மிட்ட விஷ­யத்­தில் காங்­கி­ரஸ் அளித்­தி­ருந்த உறு­தி­மொ­ழி­யி­லி­ருந்து பின்­வாங்­கி­யது.` அவர்­க­ளு­டைய சுயேச்­சை­யான நிலைப்­பாட்டை சிறி­தும் மாறா­மல் மதிக்­கும் என்ற வாக்­கு­று­தி­யி­லி­ருந்து பின்­வாங்­கி­யது. பிரஜா மண்­ட­லங்­கள் மீண்­டும் தீவி­ர­மான செயல்­பாட்­டில் இறங்­கின. மைசூ­ரில் முழு­மை­யான ஜன­நா­யக அர­சாங்­கம் வேண்டி ஒரு இயக்­கம் தொடங்­கப்­பட்­டது. 3 ஆயி­ரம் மக்­கள் சிறை சென்­ற­னர். ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் கத்­தி­ய­வா­ரி­லும், ஒரி­சா­வி­லும் அரசு அலு­வ­ல­கங்­கள், நீதி­மன்­றங்­கள், சிறைச்­சா­லை­கள் ஆகி­ய­வற்­றைக் கைப்­பற்­றி­னர். வல்­ல­பாய் படே­லும் காங்­கி­ரஸ் கட்­சி­யும் புத்­தி­சா­லித்­த­ன­மாக மக்­க­ளது எதிர்ப்பை சுதேச அர­சர்­க­ளைத் தம் வழிக்­குக் கொண்­டு­வர பயன்­ப­டுத்­திக்­கொண்­ட­னர். மன்­னர்­கள் ஏற்­க­னவே நட்­பு­ற­வுக்கு சம்­ம­தித்து விட்­ட­னர். இப்­போது அவர்­களை முழு­வ­து­மாக இணைந்து விட வற்­பு­றுத்­தி­னர். அதா­வது அவர்­கள் தம் சமஸ்­தா­னங்­க­ளின் சுய அடை­யா­ளங்­களை விட்­டு­விட்டு இந்­திய யூனி­ய­னு­டன் சேர்ந்து விட வேண்­டும். இதற்கு பதி­லாக அவர்­கள் தங்­கள் பாரம்­ப­ரிய பட்­டப் பெயர்­களை வைத்­துக் கொள்­வ­தோடு வரு­டாந்­தர ராஜ மானிய தொகை ஒன்­றை­யும் தொடர்ந்து பெற்று வர­லாம். அவர்­கள் இதனை ஏற்­கா­விட்­டால் ஒடுக்­கப்­பட்ட மக்­க­ளு­டைய உணர்ச்­சி­கள் விடு­விக்­கப்­பட்ட நிலை­யில் கட்­டுப்­ப­டாத அல்­லது கட்­டுப்­ப­டுத்த முடி­யாத அவர்­க­ளு­டைய கிளர்ச்­சியை சந்­திக்க நேரி­டும். 1947  பிற்­ப­கு­தி­யில் விபி மேனன் மன்­னர்­களை சரி­கட்­டும் வகை­யில் இந்­தியா முழு­வ­தும் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்­டார்.  அவ­ரது முயற்­சி­க­ளின் முன்­னேற்­றம் பற்றி நியூ­யார்க் டைம்­சில் டில்லி நபர் பின்­வ­ரு­மாறு எழு­தி­னார் : `முத­லில் சிறிய தலைப்­புச்­செய்தி,  மேனன் சோட்டா ஹாஸ்ரி ராஜ்­ஜி­யத்­துக்கு விஜ­யம். அடுத்து கவர்­னர் ஜென­ர­லு­டைய தின­சரி அலு­வ­லக சுற்­ற­றிக்­கை­யில் ஒரு சிறு குறிப்பு `மாட்­சிமை தங்­கிய சோட்டா ஸ்ரீ மகா­ராஜா வந்­தி­ருக்­கி­றார்.

 உடனே கொட்டை எழுத்­துக்­க­ளில் ஒரு பெரிய தலைப்­புச்­செய்தி` சோட்டா ஹாஸ்ரி இணைந்­தது. இதற்­கான அடிப்­படை பணியை பட்­டே­லும் வp.பி. மேன­னும் செய்­த­னர். என்­பது மேலே கண்ட குறிப்­பி­லி­ருந்து வெளிப்­ப­டும் .ஆனால் இதற்­கான இறுதி பூச்சு வேலை­களை மவுன்ட்­பேட்­டன் செய்­தார். சில சம­யங்­க­ளில் அவ­ரு­ட­னான சந்­திப்பு ராஜ­க­வு­ர­வத்­துக்­குத் தேவை­யான சலு­கை­யாக இருந்­தது. கவர்­னர் ஜென­ர­லும் மிக முக்­கி­ய­மான சமஸ்­தா­னங்­க­ளுக்கு நேர­டி­யா­கச் சென்று அந்த மன்­னர்­கள் இந்­தி­யா­வு­டன் இணை­வது எடுத்த புத்­தி­சா­லித்­த­ன­மான முடி­வுக்கு வாழ்த்­தும் தெரி­வித்­தார்.

இந்­தி­யா­வு­டன் சமஸ்­தா­னங்­கள் இணைக்­கப்­ப­டு­வது மேல் பூச்சை மவுண்ட்­பேட்­டன்  கவ­னித்­துக்­கொள்ள அதன் உள்­ள­டக்­கத்தை வி.பி. மேனன் கவ­னித்­துக்­கொண்­டார். மேனன் அந்த மன்­னர்­க­ளு­ட­னான கடி­ன­மான பேச்­சு­வார்த்­தை­களை பற்றி சற்று விவ­ர­மாக தன் புத்­த­கத்­தில் குறிப்­பி­டு­கி­றார். அவர்­க­ளு­டைய சுய­க­வு­ர­வத்­துக்கு நிறைய ஒத்­த­டம் கொடுக்க வேண்­டி­யி­ருந்­தது. ஓர் அர­சர் தாம் ராமர் வம்­சத்­தில் வந்­த­தா­க­வும், மற்­றொ­ரு­வர் கிருஷ்­ணர் வழி வந்­த­தா­க­வும், மூன்­றா­ம­வர் அவ­ரது மரபு சீக்­கிய குருக்­க­ளால் ஆசீர்­வ­திக்­கப்­பட்ட ஒன்று என்­ப­தா­லும் தங்­கள் ராஜ்­ஜி­யம் அழி­வற்­றது’ என்று உரிமை கோரி­னார்­கள்.

 அவர்­க­ளு­டைய  நிலப்­ப­ரப்­புக்கு பதி­லாக ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் ராஜா மானி­யம் வழங்­கப்­பட்­டது. அது அந்த சமஸ்­தா­னம் ஈட்­டிய வரு­வாயை கொண்டு தீர்­மா­னிக்­கப்­பட்­டது. பெரிய அர­சி­யல் முக்­கி­யத்­து­வம் வாய்ந்த சமஸ்­தா­னங்­க­ளுக்கு அதி­கப்­ப­டி­யான சலு­கை­களை கொடுக்க வேண்­டி­யி­ருந்­தது. அவர்­க­ளு­டைய பழமை வாய்ந்த வம்­சம், அவற்­றுக்­கு­ரிய தனி­யான சமய பெருமை, திரு­மண மர­பு­கள் ஆகி­ய­வற்றை கருத்­தில் கொண்டு பார்த்­த­போது சலு­கை­கள் பொருத்­த­மா­க­வும் இருந்­தன. அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட ராஜ மானி­யங்­கள் தவிர அவர்­கள்­தம் அரண்­ம­னை­கள், சொந்த சொத்­துக்­கள் மற்­றும் பட்­டப் பெயர்­களை தாங்­களே வைத்­துக் கொள்ள அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். சோட்டா ஹாஸ்ரி மகா­ராஜா தொடர்ந்து சோட்டா ஹாஸ்ரி மகா­ரா­ஜா­வா­கவே இருப்­ப­து­டன், அந்த கவு­ரவ பெயரை தன் மக­னுக்­கும் அளிக்­க­லாம்.

மகா­ரா­ஜாக்­க­ளின் ராஜ­மா­னி­யத்தை உறுதி செய்­யும் வகை­யில் படேல் அர­சி­ய­ல­மைப்­பில் ஒரு ஷரத்தை கொண்­டு­வர விரும்­பி­னார். வி.பி.மேனன் குறிப்­பிட்­ட­து­போல, கிடைத்த லாபத்­து­டன் ஒப்­பி­டும்­போது மன்­னர்­க­ளுக்கு கொடுக்­கப்­பட்­டது அற்­ப­மா­னவை. அர­சி­யல்­ரீ­தி­யான இணைப்பு உறு­தி­யான எகு போன்­ற­தாக அமைந்­தது. மேன­னின் கணக்­குப்­படி இந்­திய அரசு மன்­னர்­க­ளுக்கு பத்­தாண்­டு­க­ளில் மொத்­த­மாக 150 மில்­லி­யன் ரூபாய் அளிக்க வேண்­டும். அதே கால­கட்­டத்­தில் சமஸ்­தா­னங்­க­ளி­ருந்து இந்­தியா பெரும் தொகை அதைப் போன்று பத்து மடங்­காக இருக்­கும்.

சமஸ்­தா­னங்­களை பெற்ற பிறகு, அவற்­றின் நிர்­வாக ஒருங்­கி­ணைப்­புப் பணி  அவ்­வ­ளவு எளி­தாக இருக்­க­வில்லை. பல ராஜ்­ஜி­யங்­க­ளில் நில­வரி வசூல் முறை­யும் நீதி நிர்­வா­க­மும் பழங்­கால முறை­யில் இருந்­தன. மக்­கள் பிர­தி­நி­தித்­து­வம் எந்த வகை­யி­லும் இல்லை. பழைய நிர்­வா­கத்­துக்­குப் பதி­லாக பிரிட்­டிஷ் இந்­தி­யா­வில் பயிற்­சி­பெற்ற அலு­வ­லர்­களை மாறு­தல் செய்ய புதிய முறை நிர்­வா­கத்தை உரு­வாக்க வேண்­டி­யி­ருந்­தது. முழு­மை­யான தேர்­தல் நடை­பெ­று­வ­தற்­கு­முன் இடைக்­கால மந்­தி­ரி­கள் பதவி ஏற்­ப­தை­யும் அரசு மேற்­பார்­வை­யிட்­டது.

பிரிட்­டிஷ் புத்­த­கத்­தி­லி­ருந்து, படே­லும் மேன­னும் பல பக்­கங்­களை எடுத்­துப் பயன்­ப­டுத்­திக் கொண்­ட­னர். சில மன்­னர்­களை முன்­ன­தா­கவே தங்­கள் பக்­கத்­துக்கு இழுத்­துக் கொண்டு, மற்­ற­வர்­களை தவிக்­க­விட்­டுப் பிரித்­தா­ளும் தந்­தி­ரத்தை மேற்­கொண்­ட­னர். அவர்­க­ளு­டைய பட்­டங்­களை வைத்­துக்­கொள்ள அனு­ம­தித்து, சில சம­யங்­க­ளில் புதி­தா­க­வும் கொடுத்து, மன்­னர்­க­ளின் குழந்­தைத்­த­ ன­மான ஆடம்­ப­ரங்­க­ளைத் தங்­க­ளுக்­குச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திக் கொண்­ட­னர். பல மன்­னர்­களை மாகாண கவர்­னர்­க­ளாக நிய­மித்­த­னர். ஆனால் 18ம் நூற்­றாண்டு பிரிட்­டி­ஷா­ரைப் போல அவர்­க­ளது முக்­கி­ய­மான கவ­னம் பொரு­ளி­யல் ரீதி­யாக இருந்­தது. படேல் உள்­துறை அதி­கா­ரி­க­ளி­டம் கூறி­னார் ` நமக்கு அவர்­க­ளு­டைய ஆசை­நா­ய­கி­களோ நகை­களோ தேவை­யில்லை. நமக்­குத் தேவை அவர்­க­ளு­டைய நிலம்­தான்.’  

இரண்டே ஆண்­டு­க­ளில் 500க்கும் மேற்­பட்ட பழம்­பெ­ரும் சுதேச சமஸ்­தா­னங்­க­ளெல்­லாம் கலைக்­கப்­பட்டு, இந்­தி­யா­வின் புதிய பதி­னான்கு நிர்­வா­கப் பகு­தி­க­ளா­யுன. இது எந்­தக் கணக்­கின்­ப­டி­யும் மகத்­தான சாத­னையே. இது, புத்­தி­சா­லித்­த­னம், தீர்க்­க­த­ரி­ச­னம், கடி­ன­மான உழைப்பு ஆகி­ய­வற்­று­டன் நிறைய தந்­தி­ரத்­தை­யும் பயன்­ப­டுத்தி அடை­யப்­பெற்­றது.

                                          (தொட­ரும்)