மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் எழுதும் வாலிப கவிஞர் வாலி – 11

பதிவு செய்த நாள் : 06 அக்டோபர் 2019

அப்­போது அந்­தப் படத்­தின் நடன ஆசி­ரி­யர் `நம்ம இந்த படத்­துல பழைய பாடல் ஏதா­வது முத்­துத்­தாண்­ட­வர் பதம் மாதிரி ஒன்றை எடுத்­துப் போட்­டுக் கொள்­ள­லாம்’ என்று சுப்­பையா நாயு­டு­வு­டன் சொன்­னார்.

வாலிக்கு கோபம் வந்­து­விட்­டது. உடனே சுப்­பையா நாயுடு வாலி­யின் கோபத்தை கட்­டுப்­ப­டுத்தி அவர் காதில் ஒரு ரக­சி­யம் சொன்­னார். வாலி­யும் கேட்­டு­விட்டு அங்­கி­ருந்து நகர்ந்து போனார்.

சுப்­பையா நாயுடு வாலி­யின் காதில் சொன்ன ரக­சி­யம் “நீ பாட்டு எழு­திக் கொடு. நான் பழைய பாட்­டுன்னு சொல்லி உள்ளே நுழைச்­சி­ட­றேன்.. பிறகு 1986 – 87 வரு­டங்­க­ளில் இயல், இசை, நாடக மன்ற நிர்­வா­கக் குழு­வில் அந்த நடன ஆசி­ரி­யர் கமிட்டி மெம்­பர்.

 ஒரு­ நாள் பேசிக்­கொண்­டி­ருக்­கும்­போது “அந்­தப் படத்­தில் ஒரு பழைய பாடலை பார­தத்­திற்கு பயன்­ப­டுத்­த­லாம். வாலி பாடல் வேண்­டாம் என்று சொன்­ன­தற்­காக வாலி என்னை நீங்­கள் திட்­டக்­கூ­டாது’’ என்று வாலி­யி­டம் சொல்ல, அப்­போ­து­தான் அவ­ரி­டம்  உண்­மை­யைச் சொன்­னார். அவ­ருக்கு ஒரே ஆச்­ச­ரி­யம் அந்த நடன ஆசி­ரி­யர் வேறு யாரு­மில்லை வழு­வூர் ராமையா பிள்ளை.

வாலிக்கு தனக்கு முந்தைய கவி­ஞர்­க­ளு­டன் நல்ல பழக்­கம் இருந்­தது. அதில் ஒரு­வர்  கம்­ப­தா­சன். இவர் அந்­தக் காலத்­தில் இந்தி பாடல்­கள் தமி­ழில் வரும் போது அதற்­காக அதே இசைக்கு வாய­சைப்­பிற்­காக  தமிழ் பாட்டு எழு­து­வ­தில் பெயர் வாங்­கிய கவி­ஞர்.

 `வித்­யா­பதி’ `மங்­கை­யர்க்க­ரசி’ போன்ற படங்­க­ளில் நடித்­த­வர். மலை­யாள கவி­ஞர் வள்­ளத்­தோள் வீட்­டில்­தான் திரு­ம­ணம் செய்­தி­ருந்­தார். பிறகு விவா­க­ரத்து ஆகி­விட்­டது.

   1955- – 56` புலித்­தே­வன்’ ` மேக்­னெட்’ ராஜா­ராம் நண்­பர் மூல­மாக ஒரு டப்­பிங் படத்­திற்கு பாட்டு எழு­த­லாம் என்று உஸ்­மான் ரோட்­டில் திலக்  தெரு­வில் இருக்­கிற சினிமா ஆபீ­சுக்கு வாலி போனார்.

 தனக்கு வாய்ப்பு கிடைக்­கும் என்று அங்கே போய் உட்­கார்ந்து இருப்­பார்.

அங்கே பாட்டு எழு­து­வ­தற்கு இர­வில் கம்­ப­தா­சன் வரு­வார். அவர் சொல்­லு­வார். வாலி எழு­து­வார்.  வாலி, ஆதி­மூ­லம், கம்­ப­தா­சன் மூணு பேரும் அந்த அலு­வ­ல­கத்­தில் தங்­கி­யி­ருந்­தார்­கள்.

 ஒரு­ நாள் இரவு கம்­ப­தா­சன்` சும்மா காத்­தாட நடக்­க­லாம் ’என்று சொல்லி  வாலியை அழைத்­தார். இரு­வ­ரும் வாணி மஹால் வரை நடந்து போய்க் கொண்­டி­ருந்­தார்­கள். அப்­போது அவர் போதை­யில் இருந்­தார். அப்­போது ரோந்து வந்த போலீஸ்­கா­ரர்­கள் இரு­வ­ரை­யும் பிடித்து பாண்­டி­ப­ஜார் ஸ்டேஷன் லாக்­கப்­பில் வைத்து விட்­டார்­கள்.

 பிறகு மறு­நாள் அதி­காலை சப்-­–இன்ஸ்­பெக்­டர் இவர்­க­ளைப் பார்த்து அடை­யா­ளம் கண்டு கொண்­டார். பிறகுதான் இவர்­களை ரிலீஸ் செய்­தார்­கள்.

 ஒரு பெரிய கவி­ஞ­ரோடு சிறை­வா­சம் செய்­தார். ஆனால் கம்­ப­தா­சன் கடைசி காலத்­தில் மிக­வும் கஷ்­டப்­பட்­டார். அந்த நேரத்­தில் வாலி­யி­டம் வந்து பதி­னைந்து ரூபாய், இரு­பது ரூபாய் கேட்­பார். நூறு ரூபாய் கொடுத்­தால் வாங்க மாட்­டார். கலை­ஞரை பேர் சொல்­லித்­தான் அழைப்­பார். `கனவு கண்ட காதல் கதை கண்­ணீ­ராச்சே’ போன்ற பாடல்­களை தந்­த­வர் கம்­ப­தா­சன். வாலி கே. வி. மகா­தே­வ­னுக்கு  அறி­மு­க­மா­னது வேறு வகை. மா.ரா என்று ஒரு திரைப்­பட எழுத்­தா­ளர் இருந்­தார். அவர்­தான் வாலியை கே. வி. மகா­தே­வ­னி­டம் அறி­மு­கம் செய்து வைத்­தார்.

 ஆரம்­பத்­தில் கே. வி. – மகா­தே­வன் வாலியை சரி­யாக நடத்­த­வில்லை. என்­னையா வாலி, கோலின்னு  யார் யாரையோ கூட்­டிட்டு வறீங்க. உங்­க­ளுக்கு  பணம் பண்­ண­ணும்னு ஆசை இல்­லையா’ என்று வாலி காது­ப­டவே பேசி­னார் கே.வி. மகா­தே­வன். இருந்­தா­லும் அவர்­க­ளுக்கு வாலி பாட்டு எழுதி கொடுத்­து­விட்டு வந்­தார். அந்­தப் பாடல்­தான் வாலி கேவி மகா­தே­வ­னுக்கு  எழு­திய முதல் பாடல்.  அதற்­குப் பிறகு வாலி விஸ்­வ­நா­தன் – ராம­மூர்த்­தி­யால் `கற்­ப­கம் ’படம் மூலம் பாப்­பு­ல­ராகி விட்­டார். அப்­போது சரோ­ஜா­தேவி நடித்த `உடன்­பி­றப்­பு’ ­ப­டம் பூஜை போடப்­பட்­டது. அந்­தப்­ப­டத்­துக்கு டைரக்­டர் கே. பாலச்­சந்­தர்தான் வச­னம்.

 படபூஜை முடிந்­த­வு­டன் தட்­டில் பழம் எல்­லாம் வைத்து பணம் கொடுத்­தார்­கள். வாலி `விஸ்­வ­நா­தன் ராம­மூர்த்தி வர­வில்­லையா?’  என்று கேட்­டார். `இல்லை இந்­தப் ப­டத்­திற்கு மாமாதான் மியூ­சிக்’ என்­றார்­கள்.

 அந்த காலத்­தில் கே. வி. ­ம­கா­தே­வனை ‘மாமா’ என்­று­தான் சினிமா வட்­டா­ரத்­தில்  அழைப்­பார்­கள். வாலி பணத்தை எடுத்­துக் கொள்­ள­வில்லை. ‘நான் பாடல்  எழுதமாட்­டேன்’ என்று சொல்­லி­விட்­டார். அங்­கி­ருந்து கிளம்பி போய்­விட்­டார். உடனே இந்த செய்தி எம்.ஜி.ஆருக்கு  தெரி­ய­வர, அவர் வாலியை தோட்­டத்­திற்கு வரச்­சொன்­னார்.

வராத அந்த படத்­திற்கு கதா­நா­ய­கன் எம்.ஜி.ஆர் தான். வாலி­யும் போனார் `நீங்­காத நினைவு’ படத்­துக்கு பாட்டு எழுத போகும் போது கே. வி. ­எம் என்னை கிண்­டல் பண்ணது இன்­ன­மும் நீங்­காத நினை­வாக இருக்கு. அத­னால என்­னால எழுத முடி­யாது’ என்று எம்.ஜி.ஆரி­டம் சொன்­னார் வாலி. உடனே  எம்ஜி.ஆர்., `நீங்க கேவி­எம்­முக்­காக எழுத வேண்­டாம். எனக்­காக எழு­திக் கொடுங்க’ என்று கேட்­டார். வாலி இரண்டு  பாட்டு எழு­திக் கொடுத்­தார்.

ஒரு ­நாள் புக­ழேந்தி – இவர்­தான் கே.வி. மகா­தே­வ­னின் மன­சாட்சி, நிழல் எல்­லாமே அவ­ருக்கு புக­ழேந்­தி­தான்.

அவர் வாலி­யி­டம் போனார். `மாமா உங்­களை பார்க்­க­ணும்னு சொல்­கி­றார்’ என்றார். வாலி­யும் போனார். மகா­தே­வன் வாலி­யைப்  பார்த்து கண்­ணீர் விட்­டார்.` என்னை தப்பா நினைச்­சுக்­கா­தீங்க’ என்று சொன்­னார். வாலி அதற்கு இதுல தப்பா  என்ன நினைக்கி­றது’ என்றார் அடுத்து என்ன நடந்­தது?                                   – தொடரும்