மம்தா பானர்ஜியின் தயக்கம்!

பதிவு செய்த நாள் : 05 அக்டோபர் 2019

மேற்கு வங்­கத்­தைச் சேர்ந்த பல திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­க­ளும், ஐ.பி.எஸ் அதி­கா­ரி­க­ளும் சிட்­பண்ட் மோசடி வழக்­கில் சிக்­கி­யுள்­ள­னர். இத­னால் எப்­போ­தும் ஆணித்­த­ர­மாக பேசும் திரி­ணா­முல் காங்­கி­ரஸ் தலை­வ­ரும், மேற்கு வங்க முதல்­வ­ரு­மான மம்தா பானர்ஜி, தயக்­கத்­து­டன் பின்­வாங்­கு­கின்­றார்.

மம்தா பானர்ஜி செப்­டம்­பர் 12ம் தேதி நாடு முழு­வ­தும் தேசிய குடி­மக்­கள் பதிவை எதிர்த்து கொல்­கத்­தா­வில் மாபெ­ரும் பேர­ணியை நடத்­தி­னார். அப்­போது “நான் உயி­ரு­டன் இருக்­கும் வரை மேற்கு வங்­கா­ளத்­தில் ஒரு­வர் மீதும் பா.ஜ. நட­வ­டிக்கை எடுக்க முடி­யாது” என்று எச்­ச­ரித்­தார். செப்­டம்­பர் 18ம் தேதி மம்தா பானர்ஜி, டில்­லி­யில் பிர­த­மர் நரேந்­திர மோடியை நேரில் சந்­தித்­தார். அப்­போது தேசிய குடி­மக்­கள் பதி­வேடு பிரச்னை பற்றி எது­வும் கூற­வில்லை. அடுத்த நாள் மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித்­ஷாவை சந்­தித்­தார். அப்­போது தேசிய மக்­கள் பதி­வேடு பற்றி பேசி­னார். இந்த சந்­திப்பு பற்றி செய்­தி­யா­ளர்­க­ளி­டம் மம்தா பானர்ஜி கூறு­கை­யில், “நான் அஸ்­ஸாம் குடி­மக்­கள் பதி­வேடு பற்றி கூறி­னேன். அஸ்­ஸாம் குடி­மக்­கள் பதி­வேட்­டில் 19 லட்­சம் பேர் விடு­பட்­டுள்­ள­னர். இவர்­க­ளில் இந்தி, பெங்­காலி, கூர்க்கா மொழி பேசு­ப­வர்­கள், வாக்­கா­ளர் அடை­யாள அட்டை பெற்று இருப்­ப­வர்­க­ளும் உள்­ள­னர்” என்று கூறி­ய­தாக தெரி­வித்­தார். அத்­து­டன் மேற்கு வங்­கா­ளத்­தில் தேசிய குடி­மக்­கள் பதி­வேடு பற்றி விவா­திக்­கப்­ப­ட­வில்லை என்று கூறி­ய­து­டன், அவர் (அமித்ஷா) மேற்கு வங்­கா­ளத்­தில் குடி­மக்­கள் பதி­வேடு பற்றி பேச­வில்லை. மேற்கு வங்­கத்­திற்கு குடி­மக்­கள் பதி­வேடு தேவை­யில்லை” என்­றும் தெரி­வித்­தார்.

சென்ற லோக்­சபா தேர்­த­லின் போது நரேந்­திர மோடி­யை­யும், அமித்­ஷை­வை­யும் கடு­மை­யாக தாக்கி பேசி­னார். இப்­போது மம்தா பானர்ஜி தனது நிலை­யில் இருந்த சிறிது இறங்­கி­வந்­துள்­ளார். இதற்கு கார­ணம் என்ன? மேற்கு வங்­கத்­தில் ஏற்­பட்­டுள்ள அர­சி­யல் மாற்­றங்­களே என­லாம். மோடி அரசு மத்­தி­யில் இரண்­டா­வது முறை பதவி ஏற்ற பின், சிட்­பண்ட் மோச­டி­க­ளில் ஈடு­பட்­டுள்ள  திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த பல மூத்த தலை­வர்­கள், எம்.பி.,க்கள், கட்­சிக்கு நெருக்­க­மாக உள்ள ஐ.பி.எஸ் அதி­கா­ரி­கள் மீது நட­வ­டிக்கை பாய்ந்­துள்­ளது. இதற்கு முன் சிட்­பண்ட மோசடி புகா­ரில் சுதிப் பந்­தோ­பாத்யா எம்.பி., தபாஸ் பால் எம்.பி., முன்­னாள் அமைச்­சர் மதன் மித்ரா உட்­பட பலர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். பலர் பல முறை விசா­ரிக்­கப்­பட்­டுள்­ள­னர். தற்­போது சி.பி.ஐ., அம­லாக்­கத்­துறை விசா­ரணை வளை­யத்­திற்­குள் அர­சி­யல்­வா­தி­கள், கலை­ஞர்­கள், பத்­தி­கை­யா­ளர்­கள், மற்­றும் பலர் சிக்­கி­யுள்­ள­னர்.

இதில் குறிப்­பி­டத்­தக்­க­வர் கொல்­கத்தா நகர முன்­னாள் போலீஸ் கமி­ஷ­னர் ராஜீவ் குமார். இவர் தற்­போது சி.ஐ.டி பிரிவு கூடு­தல் டைரக்­டர் ஜென­ர­லாக உள்­ளார். இவர் மம்தா பானர்­ஜிக்கு மிக நெருக்­க­மா­ன­வர். இவர் மூல­மாக தான் மம்தா பானர்­ஜி­யும், அவ­ரது குடும்­பத்­தா­ரும் பலன் அடைந்­துள்­ள­னர் என்று மாநில பா.ஜ.,வினர் கூறு­கின்­ற­னர். மேற்கு வங்க அரசு சாரதா சிட்­பண்ட் மோசடி பற்றி விசா­ரிக்க நிறு­விய சிறப்பு விசா­ரணை பிரிவு தலை­வ­ராக இருந்­தார். இது பற்றி சி.பி.ஐ விசா­ரிக்­கும்­படி சுப்­ரீம் கோர்ட் உத்­த­ர­விட்­டது. தங்­க­ளது விசா­ர­ணைக்கு ராஜீவ் குமார் ஒத்­து­ழைப்பு தரு­வ­தில்லை என்று சி.பி.ஐ., சுப்­ரீம் கோர்ட்­டில் முறை­யிட்­டது. அத்­து­டன் சாராதா சிட்­பண்ட், ரோஸ் வாலி சிட்­பண்ட், டவர் குரூப் ஆகி­யவை சம்­பந்­தப்­பட்ட மோச­டி­க­ளில் தொடர்­பு­டைய முக்­கி­ய­மான சாட்­சி­யங்­களை அழித்­துள்­ளார். முக்­கிய குற்­ற­வா­ளி­கள் இடையே நடத்த போன் உரை­யா­டல் பற்­றிய விப­ரங்­களை ஒப்­ப­டைக்­கா­மல் வைத்­துள்­ளார் என்று சி.பி.ஐ குற்­றம் சாட்­டி­யது. இந்த சிட்­பண்ட் நிறு­வ­னங்­கள் எல்­லாம் திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்­சி­யின் நன்­கொ­டை­யா­ளர்­கள்.

சிட்­பண்ட் மோசடி தொடர்­பாக சி.பி.ஐ அதி­கா­ரி­கள், ராஜீவ் குமா­ரி­டன் அவ­ரது அதி­கா­ர­பூர்வ இல்­லத்­தில் விசா­ரணை நடத்த சென்­ற­னர். அப்­போது மாநில போலீ­சார் அவர்­களை அப்­பு­றப்­ப­டுத்தி, அரு­கில் உள்ள போலீஸ் ஸ்டேஷ­னில் வைத்­தி­ருந்­த­னர். மாநில பிரச்­னை­யில் தேவை­யில்­லா­மல் மத்­திய அரசு தலை­யி­டு­வ­தாக குற்­றம் சாட்­டி­னார். இதற்கு எதிர்ப்பு தெரி­வித்து மூன்று நாட்­கள் தர்ணா போராட்­டம் நடத்­தி­னார். சென்ற பிப்­ர­வரி மாதம் சுப்­ரீம் கோர்ட் தலை­யிட்டு, ஷில்­லாங்­கில் ராஜீவ் குமா­ரி­டம் சி.பி.ஐ அதி­கா­ரி­கள் விசா­ரணை நடத்­து­மாறு கூறி­யது. அதன்­படி விசா­ரணை நடத்­தி­னர்.

தற்­போது சி.பி.ஐ., ராஜீவ் குமா­ரி­டம் மேலும் விசா­ரணை நடத்த பல தடவை நோட்­டீஸ் அனுப்­பி­யுள்­ளது. ஆனால் தலை­ம­றை­வாக இருக்­கும் ராஜீவ் குமார், தனது வழக்­க­றி­ஞர்­கள் மூலம் ஏதா­வது கார­ணங்­களை கூறி விசா­ர­ணையை தவிர்த்து வரு­கி­றார். இதற்கு பிறகு முன்­ஜா­மீன் கோரி, செஷன்ஸ் கோர்ட்­டில் மனு தாக்­கல் செய்­தார். இந்த மனு தள்­ளு­படி செய்­யப்­பட்­டது. இவ­ரது முன்­ஜா­மீன் மனு விசா­ரித்த உயர்­நீ­தி­மன்­றம், ராஜீவ் குமாரை காவ­லில் வைத்து விசா­ரிக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. அவர் சி.பி.ஐ.,அழைக்­கும் நேரத்­தில் ஆஜ­ராகி விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைப்பு கொடுக்க வேண்­டும் என்று கூறி­யுள்­ளது. இதில் இருந்து சி.பி.ஐ, கைது செய்­வ­தில் இருந்து ராஜீவ் குமார் தப்­பி­யுள்­ளார்.

தற்­போது சி.பி.ஐ., சாரதா சிட்­பண்ட் மோசடி தொடர்­பாக பல அர­சி­யல் வாதி­க­ளி­ட­மும், பிர­ப­லங்­க­ளி­ட­மும் விசா­ரணை நடத்தி வரு­கி­றது. ஏற்­க­னவே திரைப்­பட நட்­சத்­தி­ரங்­கள் பிர­சன்­ஜிட் சட்­டர்ஜி, ரிட்­டு­பர்னா சென்­குப்தா ஆகி­யோ­ரி­டம் விசா­ரணை நடத்­தி­யுள்­ளது.

மம்­தா­வின் நெருங்­கிய உற­வி­ன­ரும், கட்­சி­யில் மம்தா பானர்­ஜிக்கு அடுத்த இடத்­தில் உள்ள அபி­ஷேக் பானர்­ஜி­யின் மனைவி ருஜிரா நரோ­லா­வி­டம், சுங்­கத்­துறை (கஸ்­டம்) அதி­கா­ரி­கள் தீவி­ர­மாக விசா­ரணை நடத்த தொடங்­கி­யுள்­ள­னர். சென்ற மார்ச் மாதம் பாங்­காக்­கில் இருந்து கொல்­கத்தா வரும் விமா­னத்­தில் ருஜிரா நரோலா இரண்டு கிலோ தங்­கத்­து­டன் வந்­தி­றங்­கி­னார். அவர் விமான நிலை­யத்தை விட்டு தங்­கத்­து­டன் வெளி­யேற முயற்­சிக்­கை­யில், சுங்­கத்­துறை அதி­கா­ரி­க­ளால் தடுத்து நிறுத்­தப்­பட்­டார். அப்­போது மூத்த போலீஸ் அதி­கா­ரி­கள் விமான நிலை­யத்­திற்கு விரைந்து வந்து, சுங்­கத்­துறை அதி­கா­ரி­க­ளி­டம் இருந்து, ருஜிரா நரோ­லாவை விடு­வித்­த­னர். அவர் தங்­கம் அடங்­கிய பையு­டன் வெளி­யே­றி­னார்.

இவை எல்­லாம் மம்தா பானர்­ஜி­வுக்­கும், அவ­ரது கட்­சிக்­கும் சிக்­கலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இத­னால் அவர் தற்­போது ‘சுரு­தி’யை குறைத்­துள்­ளார். சில மாதங்­க­ளுக்கு முன் நிதி ஆயோக் கூட்­டத்­தில் பங்­கேற்க முதல்­வர் மம்தா பானர்­ஜிக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டது. அப்­போது நரேந்­திர மோடி, அமித்­ஷாவை சந்­திக்க நேரம் ஒதுக்­கித்­த­ரும்­படி கேட்­டார். அந்த நேரத்­தில் பா.ஜ..தேசிய பொதுச் செய­லா­ளர் கைலாஷ் விஜய்­வர்­கியா, இது ராஜீவ் குமார் கைதா­வது தடுக்க செய்­யும் கடைசி முயற்சி. ராஜீவ் குமா­ருக்கு தெரிந்த உண்­மை­கள் வெளி­வ­ரும் போது, மம்தா பானர்­ஜி­யின் பல அமைச்­சர்­கள் சிறைக்கு செல்ல வேண்­டி­ய­தி­ருக்­கும் என்­பதை அவர் அறி­வார் என்று கூறி­னார்.

எப்­போ­தும் தைரி­ய­மாக, எதை­யும் எதிர் கொள்­ளும் துணிச்­சல் உள்ள மம்தா பானர்ஜி, தற்­போது தயக்­கம் காட்­டு­வ­தற்கு கார­ணம் இல்­லா­மல் இல்லை.

நன்றி: அவுட்­லுக் இத­ழில் ரஜத் ராய் எழு­திய கட்­டு­ரை­யின் உத­வி­யு­டன்.