ஆன்மிக கோயில்கள்: தமிழகத்தில் தனிப்பெரும் சரஸ்வதி கோயில்!

பதிவு செய்த நாள் : 06 அக்டோபர் 2019

தல வர­லாறு :

பிரம்­ம­னும், சரஸ்­வ­தி­யும் சத்­தி­ய­லோ­கத்­தில் வாழ்ந்து தேவர்­க­ளுக்கு அருள்­பா­லித்து வந்­த­னர். அப்­போது கலை­வாணி, இந்த சத்­தி­ய­லோ­கமே, கல்­விக்­க­ர­சி­யான தன்­னால்தான் பெரு­மை­ய­டை­கி­றது, என்­றாள். பிரம்­மாவோ, தான் படைக்­கும் தொழி­லைச் செய்­வ­தால்தான் பெரு­மை­ய­டை­கி­றது என்­றும், தனது துணைவி என்­ப­தா­லேயே சரஸ்­வதி பெரு­மை­ய­டை­கி­றாள் என்­றும் சொன்­னார். இரு­வ­ருக்­கும் இது­கு­றித்து வாதம் ஏற்­பட்­டது. இது பெரும் பிரச்­னை­யாகி பிரம்­ம­னும், சரஸ்­வ­தி­யும் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் சபித்­துக் கொண்­ட­னர். இத­னால் இரு­வ­ரும் பூலோ­கத்­தில் சோழ­நாட்­டில் புண்­ணி­ய­கீர்த்தி, சோபனை என்­னும் அந்­தண தம்­ப­தி­யி­ன­ருக்கு பகு­காந்­தன் என்ற மக­னா­க­வும், சிரத்தை என்ற மக­ளா­க­வும் அவ­த­ரித்­த­னர். இவர்­க­ளுக்கு திரு­மண வயது வந்­த­தும் பெற்­றோர் இவர்­க­ளுக்­கேற்ற வரன் தேடி­னர். அப்­போது இவர்­கள் இரு­வ­ருக்­கும் தாங்­கள் யார் என்­பது நினை­வுக்கு வந்­தது. சகோ­தர நிலை­யி­லுள்ள தாங்­கள் திரு­ம­ணம் செய்து கொண்­டால் உல­கம் பழிக்­குமே என அஞ்­சி­னர். தம்­ப­தி­கள் ஒற்­று­மை­யாக இல்­லா­விட்­டால், இப்­ப­டிப்­பட்ட இக்­கட்­டான சூழ்­நி­லை­க­ளைச் சந்­திக்க நேரி­டும் என்­பதை உல­கத்­திற்கு எடுத்­துக்­காட்­டவே இப்­படி ஒரு நாட­கத்தை உல­கத்­தின் முன்­னால் அவர்­கள் நடத்­திக்­காட்­டி­னர். பெற்­றோ­ருக்கு இவ்­வி­ஷ­யம் தெரி­ய­வந்­தது. அவர்­களை சமா­தா­னம் செய்­யும் விதத்­தில், சிவனை நினைத்து உள்­ளம் உருகி பிரார்த்­தனை செய்­த­னர். சிவ­பெ­ரு­மான் அவள்முன் ­தோன்றி, ‘‘இப்­பி­ற­வி­யில் சகோ­த­ரர்­க­ளாக அவ­த­ரித்த நீ, திரு­ம­ணம் செய்­வ­தென்­பது இய­லாத காரி­யம். எனவே, நீ மட்­டும் இங்கே தனி­யாக கோயில் கொண்­டிரு. இங்கு வரும் பக்­தர்­க­ளுக்கு கல்­விச்­செல்­வத்தை வழங்கு’’, என்று அருள்­பா­லித்­தார். அதன்­படி கன்னி சரஸ்­வ­தி­யாக இக்­கோ­யி­லில் இவள் அருள்­பா­லிக்­கி­றாள்.

தமி­ழ­கத்­தில் சரஸ்­வ­திக்­கென மிகப்­பெ­ரிய தனிக்­கோ­யில் கூத்­த­னூர் மட்­டுமே. பிரம்­மா­வுக்கு அதி­க­மாக கோயில்­கள் ­அமை­யா­த­தால் அவ­ரது மனை­வி­யான சரஸ்­வ­திக்­கும் இந்­தி­யா­வில் அதிக கோயில்­கள் அமை­யா­தது இயற்­கையே. கூத்­த­னூர் சரஸ்­வதி கோயி­லி­லும் பிரம்­மா­வுக்கு சிலை இல்லை. திரு­வா­ரூர் மாவட்­டத்­தில் உள்ள இக்­கோ­யில் மிக­வும் பிர­சித்தி பெற்­றது.

சிறப்­பம்­சம்: சரஸ்­வதி இங்கு கோயில் கொண்­டி­ருப்­பதை அறிந்­த­தும், இன்று காணா­மல் போன சரஸ்­வதி நதி இங்கே வந்­தது. இரண்­டும் இணைந்து ருத்ர கங்கை என பெயர் பெற்­றது. இதே ஊரி­லுள்ள ஆபத்­ச­கா­யேஸ்­வ­ரர் கோயி­லில் சிவ­னுக்கு அபி­ஷேக நீர் இத்­தீர்த்­தத்­தில் இருந்தே எடுக்­கப்­ப­டு­கி­றது. தற்­போது அரி­சி­லாறு  என்ற பெய­ரில் ஓடு­கி­றது. பித்ரு தர்ப்­ப­ணத்­திற்கு இந்­நதி மிகச்­சி­றந்த நதி­யா­கும். தற்­போது இந்­நதி பல­ நாட்­கள் காய்ந்தே கிடக்­கி­றது. மழைக்­கா­லத்­தில் தண்­ணீர் வரு­கி­றது.

தல­ பெ­ருமை: இத்­த­லம் ஞான பீடம்­என்­றும் தெட்­சிண  திரி­வேணி சங்­க­மம் என்­றும் புகழ் பெற்­றது. இவ்­வூர் சிவன் கோயி­லில் துர்க்­கை­யும், பெரு­மாள் கோயி­லில் மகா­லட்­சு­மி­யும், தனி கோயி­லில் சரஸ்­வ­தி­யும் அருள்­பா­லிக்­கின்­ற­னர். ஒரே ஊரில் முப்­பெ­ரும் தேவி­ய­ரை­யும் தரி­சிக்க முடி­யும் என்­ப­தும் வித்­தி­யா­ச­மான விஷ­யம்.

பொது தக­வல்: இவ்­வூர் இரண்­டாம் ராஜ ராஜ சோழ­னால் தன் அவைப்­பு­ல­வ­ரான ஒட்­டக்­கூத்­த­ருக்கு தான­மாக வழங்­கப்­பட்­டது. எனவே அவ­ரது பெய­ரால் ‘கூத்­த­னூர்’ ஆனது. ஒட்­டக்­கூத்­தர்தான் இக்­கோ­யி­லைக் கட்­டி­னார் என்று தல­ பு­ரா­ணம் சொல்­கி­றது. இவ்­வூர் சரஸ்­வ­தியை மகா­கவி பார­தி­யார் பல­முறை வந்து வழி­பட்டு சென்­றுள்­ளார். அதன் கார­ண­மா­கவே அவர் புகழ் பெற்ற கவி­ஞ­ராக முடிந்­தது என்­கி­றார்­கள். இக்­கோ­யி­லின் அரு­கில் புகழ் பெற்ற மாப்­பிள்ளை சுவாமி கோயில் இருக்­கி­றது. இந்த தலத்து சிவனை வழி­பட்­டால், திரு­ம­ணத்­த­டை­யுள்ள ஆண், பெண்­க­ளுக்கு திரு­ம­ணம் நடக்­கும் என்­பது நம்­பிக்கை. மூலஸ்­தா­னத்­தில் கல்­யா­ணப்­பந்­தலே இருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

பிரார்த்­தனை: கல்­விக்­க­ட­வு­ளான சரஸ்­வ­தியை முறைப்­படி மன­தார வணங்­கு­ப­வ­ருக்கு தேனும் பாலும் திராட்­சை­யும் போன்ற இனிய சொற்­கள் சித்­திக்­கப்­பெ­றும். அத்­து­டன் ‘காவிய நாய­க’­னா­க­வும் திகழ்­வார்.

நேர்த்­திக்­க­டன்: அம்­பா­ளுக்கு  அபி­ஷே­கம் செய்­தும், வஸ்­தி­ரம் அணி­வித்­தும், நேர்த்­திக்­க­டன் நிறை­வேற்­ற­லாம்.

திரு­விழா: புரட்­டாசி மாதத்­தில் சாரதா நவ­ராத்­தி­ரி­யும், வசந்த நவ­ராத்­தி­ரி­யும் சிறப்­பாக கொண்­டா­டப்­ப­டு­கின்றன. சாரதா நவ­ராத்­திரி 12 நாட்­க­ளுக்கு பின் 10 நாள் ஊஞ்­சல் உற்­ச­வம் கொண்­டா­டப்­ப­டு­கி­றது.

அம்­பா­ளுக்­கு­ரிய பவுர்­ணமி மூல நட்­சத்­தி­ரத்­தில் மாதம் தோறும் சிறப்பு பூஜை­க­ளும், ஆண்டுதோறும் தமிழ் வரு­டப்­பி­றப்­பி­லி­ருந்து 45 நாட்­க­ளுக்கு லட்­சார்ச்­ச­னை­யும் நடக்­கி­ன்றன.

திறக்­கும் நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4  மணி முதல் இரவு 9 மணி வரை.

முக­வரி: சரஸ்­வதி திருக்­கோ­யில், கூத்­த­னூர்- 609 503, திரு­வா­ரூர் மாவட்­டம்.