![]() | ![]() |
* “நெஞ்சம் மறப்பதில்லை,” “ரன்” ஆகிய இரண்டு சீரியல்களில் நடித்து வருகிறார் ஸ்ரீதுர்கா.
* இது அவருடைய செகண்ட் இன்னிங்ஸ்.
* பர்ஸ்ட் இன்னிங்சில், ‘அழுவாச்சி’ கேரக்டர்களில் அவர் மிக மிக பிரபலம்.
* ஸ்ரீதுர்கா கவுதம் என்பது முழு பெயர்.
* பிறந்தது வளர்ந்தது சென்னை.
* 2015ல் திருமணம் நடந்தது. கணவர் கவுதம் ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை பார்க்கிறார்.
* ஸ்ரீதுர்கா ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி.
* சங்கீத குடும்பத்தை சேர்ந்தவர்.
* குழந்தைப்பருவத்திலேயே இசையை கற்றுக்கொண்டார்.
* சின்ன வயதிலேயே அவர் மாடலிங் பண்ண ஆரம்பித்துவிட்டார்.
* இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரின் “பிரேமி” சீரியலில் நடித்ததை பெருமையாக கருதுகிறார்.
* நடிகை ரேவதி டைரக்ட் செய்த “யாதுமாகி நின்றாய்” (1998) சீரியலில் முதன்முதலாக நடித்தார்.
* “அசோகவனம்,” “செல்வி,” “அபூர்வ ராகங்கள்,” “கல்யாண பரிசு,” “சொந்தபந்தம்,” “முந்தானை முடிச்சு,” “தியாகம்,” “உறவுகள்,” “சிகரம்,” “அலைகள்,” “ஊஞ்சல்,” “கொடிமுல்லை” போன்றவை அவர் நடித்துள்ள மற்ற சில சீரியல்கள்.
* “ஆதலால் காதல் செய்வீர்” படத்தில் கார்த்திக் தங்கையாக நடித்தார். மற்றும் “கதாநாயகன்” உட்பட சில படங்களிலும் நடித்திருக்கிறார்.
* பாசிட்டிவாக சிந்திக்கக்கூடியவர். “எந்தவொரு மோசமான சூழ்நிலையாக இருந்தாலும் நான் சோர்ந்து போகமாட்டேன். பிடிக்கவும் பிடிக்காது.”
* மகிழ்ச்சியாக இருந்தால், எந்த கவலையையும் உடைத்துவிடலாம் என நம்புபவர்.
* காமெடி கேரக்டர்களில் நடிப்பதற்கு மிகவும் விருப்பம் உண்டு. அப்படிப்பட்ட கேரக்டர்கள் தனக்கு இன்றுவரை கிடைக்காமல் இருப்பது குறித்து வருத்தப்படுகிறார்.
* ”எந்த கேரக்டராக இருந்தாலும் அதை திருப்தியாகவும், சிறப்பாகவும் கொடுக்க விரும்புவேன். ஹீரோயினாகத்தான் நடிப்பேன், பெரிய கேரக்டராக இருக்கவேண்டும் என்றெல்லாம் சொல்லமாட்டேன். அதே சமயத்தில், நிறைய சீரியல்களை ஒப்புக்கொண்டு கடமைக்காக என்னால் நடிக்கமுடியாது. இது என் தனிப்பட்ட ஸ்டைல்!”
* ‘மிசஸ் சின்னத்திரை,’ ‘செலபிரிட்டி சிக்கன்,’ சில ஆன்மிக நிகழ்ச்சிகள் ஆகிய டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
* ஒரு இசைப்பள்ளியை சொந்தமாக நடத்தி அதன் மூலம் நிறைய குழந்தைகளுக்கு இசையை சொல்லிக் கொடுக்கவேண்டும் என்பது ஸ்ரீதுர்காவின் லட்சியம்.
– இருளாண்டி