தக­வல் துகள்­கள்! ஒளிர்ந்த கருந்­துளை

பதிவு செய்த நாள் : 06 அக்டோபர் 2019

அமை­தி­யாக இருந்த ஒரு கருந்­துளை, திடீ­ரென சுறு­சு­றுப்­பாகி, அரு­கில் கடக்­கும் நட்­சத்­தி­ரங்­களை கப­ளீ­க­ரம் செய்­வ­துண்டு. இப்­படி ஒரு கருந்­துளை, பிர­கா­சிக்­கும் அணு கரு­வாக மாறி­னால், அதை, 'குவா­சார்' என்­பர். அத்­த­கைய ஆறு குவா­சார்­கள் ஒளிர்­வதை, அமெ­ரிக்­கா­வின் பாலோ­மர் தொலை­நோக்­கி­ய­கத்­தில், விஞ்­ஞா­னி­கள் பார்த்­துள்­ள­னர்.பல்­லா­யி­ரம் ஆண்­டு­க­ளாக நிகழ வேண்­டிய இது, ஆறே மாதங்­க­ளுக்­குள் நடந்­து­விட்­ட­தும் விஞ்­ஞா­னி­களை ஆச்­ச­ரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஈறு கெட்­டால் ரத்­தம் கொதிக்­கும்

பற்­களை தாங்­கும் ஈறு­க­ளுக்­கும், ரத்த அழுத்த நோய்க்­கும் தொடர்பு இருக்­க­லாம் என்­கி­றது, 'கார்­டியோ வாஸ்­கு­லர் ரிசர்ச்' ஆய்­வி­தழ். ஈறு­களை ஆரோக்­கி­ய­மாக வைத்­தி­ருக்­கா­த­வர்­க­ளுக்கு, உயர் ரத்த அழுத்­தம் வரும் வாய்ப்பு அதி­கம் என்­கி­றது, அந்த இத­ழில் வெளி­யான ஆய்வு.

கரி­யு­றிஞ்சி பெட்டி

நிறைய மரங்­களை வளர்க்க வேண்­டும் என்­ப­தற்கு, அவை காற்­றி­லுள்ள கார்­பன் - டை -ஆக்­சைடை உள்­வாங்கி, ஆக்­சி­ஜனை வெளி­யி­டு­பவை என்­பது தான். ஆனால், 'ஹைப்­பர்­ஜை­யன்ட் இன்­டஸ்ட்­ரீஸ்' உரு­வாக்­கி­யுள்ள, 'இயோஸ்' என்ற, 'பயோ ரியாக்­டர்' கருவி, 1 ஏக்­கர் மரங்­கள் உள்­வாங்­கும் கார்­பன் - டை - ஆக்­சை­டை­விட, பன்­ம­டங்கு கார்­பன் - டை - ஆக்­சைடை உள்­வாங்­கு­கி­றது.

குளிர்­சா­த­னப் பெட்டி போல இருக்­கும் இயோஸ் பயோ ரியாக்­ட­ருக்­குள் வள­ரும், 'குளோ­ரெல்லா வல்­கா­ரிஸ்' என்ற பாசிதான், கார்­பன் - டை - ஆக்­சைடை உள்­வாங்­கு­கி­றது.

எண்­ணத்தை படிக்­கும் தொழில்­நுட்­பம்

மூளை­யில் நினைப்­பதை, கணி­னிக்கு புரி­ய­வைக்­க­வும், கரு­வி­களை எண்­ணத்­தா­லேயே இயக்­க­வும் உத­வு­வதுதான், கணினி- மனித இடைமுக தொழில்­நுட்­பம். கடந்த சில ஆண்­டு­க­ளா­கவே, இத்­தொ­ழில்­நுட்­பத்தை மேம்­ப­டுத்­தும் ஆராய்ச்­சி­யில், நேர­டி­யா­கவே இறங்­கி­யது பேஸ்­புக்.

அடுத்­த­டுத்து பல புதிய கண்­டு­பி­டிப்­பு­களை, 'பேஸ்­புக்' அறி­விக்­க­வும் செய்­தது. இதன் தொடர்ச்­சி­யாக, அண்­மை­யில், 'கண்ட்­ரோல் லேப்ஸ்' (CTRL -Labs) என்ற, 'ஸ்டார்ட் அப்' நிறு­வ­னத்தை, பேஸ்­புக் விலைக்கு வாங்­கி­யுள்­ளது. விபத்­தால் அங்­கங்­கள் பாதிக்­கப்­பட்­டோர், மூளை தாக்­கு­த­லால் பேச்சு, செயல் இழந்­தோர் போன்­றோ­ருக்கே இந்த தொழில்­நுட்­பத்தை ஆராய்­வ­தாக பேஸ்­புக் சொல்­கி­றது. சமூக வலை­த­ளத்­தில் பதி­வு­கள் இடு­வது முதல், மெய்­நி­கர் தொழில்­நுட்­பங்­களை எளி­தாக பயன்­ப­டுத்­து­வது வரை சொந்த நோக்­கிற்கு தான் மனித- கணினி இடை­மு­கத்­திற்கு, பேஸ்­புக் முக்­கி­யத்­து­வம் தரு­கி­றது என்ற விமர்­ச­ன­மும் எழுந்­துள்­ளது.