பார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 06-10-19

பதிவு செய்த நாள் : 06 அக்டோபர் 2019

ஒரு செய்­தி­யைப் பார்த்­தேன்!

‘அகில இந்­திய தொழில்­நுட்ப கவுன்­சில் அறி­வு­றுத்­த­லின் பேரில்  பொறி­யி­யல் படிப்­பில் பக­வத்­கீ­தையை ஒரு பாட­மாக வைத்­துள்­ளார்­கள். இது மிகப்­பெ­ரிய தவறு இதை அடி­யோடு கைவிட வேண்­டும்’ என்று மதி­முக பொதுச்­செ­ய­லா­ளர் வைகோ பேசி­யி­ருக்­கி­றார்.

சில நாட்­க­ளுக்கு முன்­பு­தான் அவர் அறி­வு­பூர்­வ­மாக ஒரு அறிக்கை வெளி­யிட்­டார். அதில் இந்த பக்தி விஷ­யத்­தில் நாம் நிகழ்­கால நடப்­போடு  ஒத்­துப்­போக வேண்­டும் என்­பது மாதி­ரி­யாக இருந்­தது அவ­ரது அறிக்கை.இப்­போது மறு­ப­டி­யும் பக­வத்­கீதை எதிர்ப்பை கையி­லெ­டுத்­தி­ருக்­கி­றார் வைகோ.

இதே பாட­திட்­டத்­தில் பைபிள், குரான் படிக்க வேண்­டும் என்று சொல்­லி­யி­ருந்­தால் வைகோ  எதிர்ப்­புக் குரலை எழுப்பி இருப்­பாரா? பக­வத் கீதை என்ன அப்­படி தீண்­டத்­த­காத ஒரு நூலா? வைகோ பக­வத்­கீதை படிக்­கா­த­வரா? அவர் மன­சாட்­சி­யைத் தொட்­டுச் சொல்­லட்­டும்.  நான் இந்து மத  பக்தி இலக்­கி­யங்­களை படித்­ததே இல்லை என்று சொல்­வாரா? வைகோ மிகப்­பெ­ரிய படிப்­பாளி. அறி­வாளி.  நல்ல ரசனை உள்­ள­வர். சினிமா பாடல்­கள் முதல் பல நல்ல சங்­கீ­தங்­களை கேட்டு ரசிப்­ப­வர்.  அவர் ஒரு சிறந்த மேடைப்பேச்­சா­ளர் என்­பது எல்­லோ­ருக்­கும் தெரி­யும்.

ஆனால் அவர் இளை­ய­ரா­ஜா­வின் ‘திரு­வா­ச­கம்’ இசைத்­தட்டு வெளி­யீட்டு விழா­வின் போது பேசிய பேச்சசுத்தானே உல­கம் முழு­வ­தும்  வைகோ பக்­கம் திரும்ப வைத்­தது.  உல­க­மெங்­கும் இருக்­கும் பல கோடி தமி­ழர்­கள் வைகோ­வின் திரு­வா­சக பேச்­சைக் கேட்டு வியந்து போனார்­கள். வைகோ ஏன் திரு­வா­ச­கம் படித்­தார்? அது என்ன பகுத்­த­றிவு சிந்­தனை உள்ள நூலா?

 ஆனால், அவ­ருக்கு அவ்­வப்­போது பகுதி  ரீதி­யான பகுத்­த­றிவு சிந்­தனை தலைதூக்­கும். அது என்ன பகுதி ரீதி? அதா­வது இந்து மத நூல்­களை மட்­டும் தாக்­கு­வார்.  சரி முன்­பெல்­லாம் பள்­ளி ­க­ளில் கிறிஸ்தவு நூல்களான வீர ­மா­மு­னி­வ­ரின்  தேம்­பா­வணி, உம­றுப் புல­வர் எழு­திய சீறாப் பு­ரா­ணம் பாடங்­க­ளில் இருந்­தது. அவை எல்­லாம்  இப்­போது பள்ளி பாடங்­க­ளில் இல்லை. ‘தேம்­பா­வ­ணி’­யும், ‘சீறா­ப்பு­ரா­ண’த்­தில் நல்ல தமிழ் இருந்­ததே!  இதை ஏன்  பாடத்­தி­லி­ருந்து நீக்­கி­னார்­கள்  என்று வைகோ எப்­போ­தா­வது குரல் எழுப்­பி­யது உண்டா? வைகோ போன்­ற­வர்­கள்  மட்­டும் எல்­லா­வற்­றை­யும் படிப்­பார்­கள். ஆனால் அடுத்­த­வர்­கள் என்ன படிக்­க­வேண்­டும். படிக்கக் கூடாது என்­பதை இவர் போதிப்­பார்.

இது எந்த வகை­யில் நியா­யம்?

பக­வத்­கீதை வர்­ணா­சி­ரம தர்­மத்தை சொன்­னது என்­ப­து­தான் இந்த பகுத்­த­றி­வு­வா­தி­க­ளின் பொது­வான குற்­றச்­சாட்டு. இதற்கு நான் பதில் சொல்­வதை விட வைகோ மிக­வும் மதிக்­கிற கவிப்­பே­ர­ரசு கண்­ண­தா­சன் எழு­திய பக­வத் கீதை புத்­த­கத்­தின் முன்­னு­ரை­யில் என்ன சொன்­னார் என்­பதை மட்­டும் வாச­கர்­க­ளின் கவ­னத்­திற்கு கொண்டு வரு­கி­றேன்.  வைகோ கண்­ண­தா­ச­னின் பக­வத் கீதை நிச்­ச­யம் படித்து இருப்­பார் என்­பது எனக்கு தெரி­யும் `பக­வத்­கீ­தையை பற்றி தெரிந்து கொள்­வ­தற்கு முன் அதை சொன்ன கண்­ணன் பற்றி தெரிந்து கொள்­வோம். கண்­ணன் மனி­தனை தெய்வ புரு­ஷனா என்ற சந்­தே­கத்தை பக­வத்­கீதை தெளிய வைக்­கி­றது. மனி­த­னாக பிறவி எடுத்து மனித இயல்­பு­க­ளுக்கு தன்னை ஒப்­புக் கொடுத்து விட்ட ஒரு தெய்வ புரு­ஷனே கண்­ணன்.   தெய்­வம் மனித வாழ்க்­கை­யோடு நேரடி தொடர்பு கொள்­வ­தில்லை.

பக­வத்­கீதை பக்­தியை மட்­டுமா போதிக்­கி­றது?  மனி­த­னின் உணவு வகை­க­ளி­லி­ருந்து வாழ்க்கை முறை வரை அனைத்­தை­யும் ஒப்­புக்­கொண்டு பங்­கீடு செய்து காட்டி இதை ஏற்­றுக்­கொள்ள வேண்­டும் என்று தெளி­வு­ப­டுத்தி விளக்­கு­வ­து­தான் கண்­ண­னின் பக­வத்­கீதை.

 ரத்த பாசத்­தி­லி­ருந்து யுத்த தர்­மம் வரை போதிக்­கி­றான். தொழில் செய்­வ­தில் இருந்து தொழிலை துறப்­பது  வரை விளக்­கு­கி­றான். நித்­திய கர்­மங்­கள் இருந்து சத்ய தர்­மம் வரை தெளி­வு­ப­டுத்­து­கி­றான். அவன் வேதாந்­தம் மட்­டும் பேச­வில்லை சித்­தாந்­தம் பேசு­கி­றான். மருத்­து­வம் கூறு­கி­றான். மனோ­தத்­து­வம் சொல்­கி­றான். இயேசு கிறிஸ்­துவை கிறிஸ்­த­வர்­கள் எப்­படி இறை­வ­னின் தூது­வர் என்று அழைக்­கி­றார்­களோ அப்­ப­டியே இந்­துக்­கள் கண்­ணனை ஆதி­யாய் அநா­தி­யாய் நிற்­கும் ஆதி­மூ­லத்­தின் தூதன்; அவ­னது மறு­வ­டி­வம் என்று இந்­துக்­கள் நினைக்­கி­றார்­கள்  காந்­தியை, மகாத்மா, என்று சொல்­ல­வில்­லையா   ஒரு மனி­தன் போர்க்­க­ளத்­தில் நிற்­கும் தன் மக்­க­ளைப் பற்றி கவ­லைப்­ப­டா­மல் எதி­ரி­யின் தத்­து­வத்­தையா கேட்­டுக் கொண்­டி­ருப்­பான்?  கண்­ணன் சொல்­வதை பகை­வ­னும் வியந்து பார்க்­கி­றான், வியந்து கேட்­கி­றான் என்­பதே கீதை­யின் பெரு­மைக்­கு­ரிய தொடக்­க­மா­கும். அங்கே கண்­ணன் சொல்­லச்­சொல்ல அதே நேரத்­தி­லேயே திரு­த­ராஷ்­டி­ரன் முன்­னி­லை­யில் சஞ்­ச­யன் ஒலி­ப­ரப்­பு­கி­றான் .ஒரு போர்க்­க­ளத்­தில் இரண்டு பேர் இவ்­வ­ளவு நேரம் தத்­துவ விசா­ரணை நடத்த முடி­யுமா? இது பகுத்­த­றி­வா­ளர்­கள் எழுப்­பும் இன்­னொரு கேள்வி.

 குரு­ஷேத்­தி­ரத்­தில் நடந்­தது அறப்­போர். அது வானில் இருந்து குண்டு மழை பொழி­யும் போரல்ல. மறைந்­தி­ருந்து திடீ­ரென்று தாக்­கும் மறப்­போ­ரு­மல்ல. அறப்­போ­ரில் யுத்த தர்­மம் என்­ன­வென்­றால் போருக்கு தயா­ராகி விட்­ட­வர்­கள் முத­லில் தங்­கள் கொடி அசைக்க வேண்­டும். எதி­ரி­யும் தன் கொடியை அசைத்­தால்தான் போரைத் துவக்க வேண்­டும். எதி­ரி­யின் கொடி அசை­வ­தற்கு எத்­தனை நாள் ஆனா­லும் அத்­தனை நாளும் காத்­துக் கொண்­டு­தான் இருக்க வேண்­டும். குரு­ஷேத்­தி­ரத்­தில் இரு­பா­ல­ரும் தாரை தப்­பட்­டை­கள் முழங்­கிய பிறகு பாண்­ட­வர்­க­ளின் கொடி அசை­கி­றதா என்று துரி­யோ­தன­னின் படை­கள் பார்த்­துக் கொண்­டி­ருந்­தன. கீதோ­ப­தே­சம் முடி­யும் வரை அந்­தக் கொடி அசை­ய­வில்லை. அது­வரை காத்­துக்­கொண்­டி­ருந்­த­னர். துரி­யோ­த­ன­னுக்கு பீஷ்­மர் உப­தே­சத்தை செய்ய இந்த நேரத்தை எடுத்­துக் கொண்டு இருந்­தால் கண்­ண­னும் அர்­ஜு­ன­னும் காத்­துக் கொண்­டு­தான் இருந்­தி­ருப்­பார்­கள். கொடிய பகை­வர்­கள் கூட தர்­மங்­க­ளுக்கு கட்­டுப்­பட்ட கால­மது.

ஏன் ஆகாய போர் வலுத்­து­விட்ட இந்­தக் காலத்­தி­லும்­கூட செஞ்­சி­லுவை வண்­டியை யாரும் தாக்­கக்கூடாது என்ற கட்­டுப்­பாடு எல்லா நாடு­க­ளி­லும் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கி­ற­தில்­லையா? தர்­மமே இல்­லாத இன்­றைய போரி­லும்­கூட தர்­மம் இருக்­கு­மா­னால் அறப்­போ­ரில் பக­வா­னுக்கு அவ­கா­சம் கொடுக்­கப்­பட்­டது. பிள்­ளையே ராம காதை­யில் பகை­வ­னுக்கு ‘இன்று போய் நாளை வா’ என்று தவ­ணையை கொடுக்­கப்­பட்­ட­தில் வியப்

பில்­லையே! ஆகவே போர்க்­க­ளத்­தில் கண்­ணன் உப­தே­சம் செய்­த­தும் அது­வரை கவு­ர­வர் படையை அமைதி­யுற்­றி­ருந்­த­தும்  கேள்­விக்கு இட­மில்­லாத நியா­யங்­கள்.

அடுத்து பகுத்­த­றி­வா­ளர் எழுப்­பக்­கூ­டிய ஒரு கேள்வி எல்­லோ­ருக்­கும் ஒரு நிலை என்று ஒப்­புக்­கொள்­ளும் பக­வானே ஓரி­டத்­தில் வர்­ணா­சி­ரம தர்­மத்தை வலி­யு­றுத்­து­வது, கீதை மேல்­சா­திக்­கா­ரர்­க­ளுக்­கான நூல்­தான் என்­பதை காட்­டு­வ­தா­காதா என்­ப­தா­கும். நல்­லது! பக­வான் வர்­ணா­சி­ரம தர்­மம் பற்றி கூறு­கி­றார். அதை வலி­யு­றுத்­து­கி­றார் என்றே வைத்­துக் கொள்­வோம். விருப்பு வெறுப்­பின்றி பார்த்­தால் வர்­ணா­சி­ரம தர்­மம் என்­பது நால்­வகை அற­நெ­றியை குறிக்­கும். வர்­ணா­சி­ரம பிரிவு ஜாதி­க­ளில் மேல்­தட்டு கீழ்­தட்டு உண்­டாக்­கு­வ­தற்கு ஏற்­பட்­ட­தல்ல ஒரு சமு­தா­யத்­தின் மொத்த தேவையை நான்கு வகை­யான தொழில் வர்க்­கங்­கள்தான்.

ஒன்று: நாட்­டின் ஒழுக்­கத்­தை­யும் தர்­மத்­தை­யும் கட்­டுப்­பாட்­டை­யும் கல்­வி­யும் வளர்ப்­பது. இரண்டு: போர்­பு­ரிந்து நாட்­டைப் பாது­காப்­பது.

மூன்று: வாணி­கம் தொழில் நடத்தி நாட்­டின் பொரு­ளா­தா­ரத்தை வளர்ப்­பது.

நான்கு:  உடல் உழைப்பை மேற்­கொண்டு குடி­யி­ருப்­புகள், சாலை­கள், தொழிற்கூடங்­கள், உலைக்கூடங்­களை அமைத்து மேற்­கூ­றிய மூவ­கை­யி­ன­ருக்­கும் உத­வு­வது. இந்த நான்­கா­வது வகை­யில் விஞ்­ஞா­னி­கள் மருத்­து­வர்­கள் அனை­வ­ருமே அடங்­கு­கி­றார்­கள்.

 அப்­ப­டிப் ப­குக்­கப்­பட்­ட­து­தான் வர்­ணா­சி­ர­மம் .அறம் காப்­பது பிரா­ம­ணன் கடமை. போர் புரி­வது சத்­ரி­யன் கடமை, வாணி­பம் நடத்தி செல்­வம் சேர்ப்­பது வாணி­க­னின் கடமை. கட்ட­டக்­கலை முதல் மருத்­து­வக்­க­லை­ வரை யாவை­யும் கட்­டிக்­காப்­பது சூத்­தி­ரன் கடமை. வட­மொ­ழி­யில் `சூத்­தி­ரன்’ `ஷுத்­ரஹா ‘ என்று அழைக்­கப்­பட்­டா­லும் இயக்­கு­வோர் என்ற பொரு­ளில் சூத்­தி­ர­தாரி என்று கொள்­வதே பொருந்­தும். சூத்­தி­ரம் என்­பது விதி­முறை. சூத்­தி­ரன் என்­ப­வன் செயல்­ப­டு­ப­வன். இதில் தீண்­டாமை வந்து புகுந்­தது பிற்­கால மனி­தர்­கள் தாங்­க­ளா­கவே வலிந்து தேடிக்­கொண்ட வினையை தவிர அது இந்து மதத்­தின் நோக்­க­மல்ல. அதி­லும் பிரா­ம­ணன்­தான் தீண்­டா­மையை வளர்த்­தான் என்­ப­தும் அவன்தான் மற்­ற­வர்­களை தீண்­டு­வ­தில்லை என்­பதும் முழுப் பொய். நாலாம வரு­ணத்­தி­ரி­லேயே  முத­லி­யார் வீட்­டில் செட்­டி­யார் சாப்­பி­ட­மு­டி­யாது. பிள்­ளை­கள் வீட்­டில் பிற ஜாதி­யி­னர் சாப்­பிட முடி­யாது. செட்­டி­யார் வீட்­டுக்­குள் நாடார் நுழைய முடி­யாது. நாடார் வீட்­டுக்­குள் சிகை­ய­லங்­கார தொழி­லாளி போக முடி­யாது’ அந்த தொழி­லா­ளியை கூட அரி­ஜ­னங்­கள் தீண்ட முடி­யாது .இதை­யும் மதமா போதித்­தது? இது யானைக்கு பிடிப்­ப­து­போல் மனி­த­னுக்கு பிடித்­ததே மதம் தவிர இந்து மதம் போதித்­த­தல்ல. ‘வர்­ணம்’, ‘ஆசி­ர­மம்’, ‘தர்­மம்’ என்று சொல்­லப்­ப­டு­வ­தில் இருந்தே அது தொழில்­முறை பங்­கீடே  தவிர மேல், கீழ் ஏற்­றத்­தாழ்வு அல்ல என்­பது புரி­யும் அடிப்­படை நோக்­கம் இது­தான். பின்­னால் ஏற்­பட்ட மாற்­றங்­க­ளுக்கு ஆதி­மூ­லம் பொறுப்­பேற்க முடி­யாது’ என்­கி­றார் கண்­ண­தா­சன்.