சொல்லாமல் சொல்கிறது!

பதிவு செய்த நாள் : 04 அக்டோபர் 2019

பேசவும், உணவு உண்ணவும் உதவும் உறுப்பு மட்டுமல்ல நாக்கு. அது, அதிசயிக்கத்தக்க ஆற்றலை பெற்றுள்ளது. சுவை அரும்புகளால், நுாற்றுக்கணக்கான சுவைகளைக் கண்டறிந்து, மூளைக்கு அனுப்புகிறது. உண்ணும் உணவு நன்கு ஜீரணிக்க, உமிழ்நீரை சுரக்கிறது. பற்களின் இடையே சிக்கும் உணவுப் பொருட்களை அகற்றும் சக்தியையும் பெற்றிருக்கிறது.

நாக்கும், வாயும் இணைந்தே உள்ளன. ருசி நிறைந்த ஒரே வகை உணவை அதிகம் சாப்பிட்டால், திகட்ட வைத்து, 'தேவைக்கு மிஞ்சி விட்டது; இனி வேண்டாம்' என்று சொல்லாமல் சொல்கிறது.

காய்ச்சலின் போது, இட்லியும், சட்னியும் ருசிக்காது. அதற்கு காரணம் நாக்குத்தான். சுவையை தடுத்து உடல் நலன்பெற உதவுகிறது.

நலமாக இருக்கும் போது, புரோட்டீன் அல்லது கொழுப்புச் சத்து உடலில் குறைந்தால், அந்த சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் மீதான நாட்டத்தைத் துாண்டிவிடுகிறது.

இயற்கை உணவை அதிகம் உண்பவர்களுக்கு தான், நாக்கின் சக்தி அதிகம்.